Page 1 of 1

கணக்கோடு கூடிய விடுகதை

Posted: Mon Mar 24, 2014 12:13 pm
by kannan77
படுகை நண்பர்களுக்கு இனிய வணக்கம் .

சின்ன வயசுல நான் என்னோட அத்தையிடம் பல விடுகதைகள் தூங்கப்போகும் முன் சொல்ல கேட்டிருக்கிறேன்.ஒவ்வொரு விடுகதையும் பதில் சொல்ல நம்மை யோசிக்க வைக்கிற விஷயமாகவே இருக்கும்.அப்படி நான் கேட்ட ஒரு கணக்கோடு கூடிய விடுகதையை உங்களுக்கு தருகிறேன்.பதில் சொல்ல முயற்சியுங்கள்.

ஒரு மரத்தில் ஒரு குருவி தன் குஞ்சுகளோடு குடியிருந்து வந்தது.பகலெல்லாம் இரை தேடி தன் குஞ்சுகளுக்கு ஊட்டும்.ஓர்நாள் ஒரு சிறுவன் அம்மரத்தில் ஏறி அந்த குருவி குஞ்சுகளையும் சில முட்டைகளையும் தூக்கி போய் விட்டான்.இறை தேடி திரும்பிய தாய் குருவி குஞ்சுகளை காணாது தவித்து அழுது புரண்டது.

இதை கேள்விப்பட்ட அதன் உறவுக்கார குருவிகள் சில ஆறுதல் சொல்ல இந்த குருவியின் கூட்டுக்கு வந்தது.குருவிகள் மொத்தமாக வருவதை கண்ட தாய்க்குருவி அவற்றை வரவேற்கும் விதமாக "வாங்க நூறு குருவிகளும்" என சொல்லி அழைத்தது.

அந்த கூட்டத்தில் இருந்த மெத்தப் படித்த குருவி ஒன்று இப்படி பதில் சொன்னது."உன் வரவேற்ப்புக்கு நன்றி.ஆனா நீ சொன்ன மாதிரி நாங்க நூறு குருவிகளா வரல.நாங்க கொஞ்ச பேருங்க தான்.நாங்க எத்தன பேரு வந்திருக்கோம் அப்பிடிங்கறத ஒரு விடுகதை மூலம் சொல்றேன் .நீ அதை கேட்டுட்டு நாங்க எத்தன பேருன்னு கண்டுபிடி "னு சொல்லிச்சாம்

குருவி சொன்ன விஷயம். நாங்க நூறு பேரு இல்ல "நாங்களும், எங்களைப்போல் இன்னொரு பங்கும்,எங்களில் பாதியும் ,அதில் பாதியும் உன்னையும் சேர்த்தால் மட்டுமே நூறு குருவிகளா கணக்கு வரும்.இப்போ சொல்லு நாங்க எத்தன பேருன்னு..."

தாய்க்குருவி கொஞ்சம் யோசிச்சு சரியான விடைய சொல்லிட்டு.எத்தன குருவி ன்னு நீங்களும் சொல்லிடுவீங்க ன்னு எனக்கு தெரியும்.விடையை இதில் பின்னூட்டமாய் பதிவிடுங்கள் .

இன்னும் நெறைய வெஷயம் பேசுவோம்..

Re: கணக்கோடு கூடிய விடுகதை

Posted: Mon Mar 24, 2014 2:50 pm
by ஆதித்தன்
36 + 36 +18 +9 +1 = 100


விடை = 36