வாங்க கதை எழுதலாம்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 12:07 pm

Muthulakshmi123 wrote:வீட்டுக்கு வந்த மூவரையும் எதிர் கொண்ட கோகிலா... தன் மாமனாரிடம் அது எப்படி நடு ரோட்டில் அவரை மறித்து ஏன் கேள்வி கேட்டு அவமானபடுத்தினீர்கள்/ என்று சண்டை போட ஆரம்பித்தாள்...

உங்கள் பிள்ளை என்றாலும் இப்போ என் கணவர் அவர், அவரை நீங்கள் இப்படி நடு ரோட்டில் வைத்து கேள்வி கேட்டு அவமான படுத்துவது எனக்கு பிடிக்கவில்லை..

நீ தானேம்மா சொன்னே அவன் குடிக்கிறான் என்று

அதற்காக நடு ரோட்டில் வைத்து கேள்வி கேட்டு அவமானப் படுத்துவதா?
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 12:09 pm

Muthulakshmi123 wrote:நாற்காலியில் இருந்தபடியே.... தன் மகனின் தவறான போக்கிற்கு இதுதான் காரணமோ!!! என்று கற்பனைக் கனவிலிருந்த வெற்றிவேல்,

"மாமா காபி", கோகிலா.

என்ற குரலால் திடிக்கிட்டு எழுந்தார்.

வீடே கண்ணனை குடிகாரனாக்கி சோகத்தில் மூழ்கியதோடு அல்லாமல், பிரச்சனைக்கு அடியெடுத்து வைக்க தயாராக...

கண்ணன், மிக்க மகிழ்ச்சியோடு பாக்கெட் நிறைய பணத்தோடு வீட்டுக்கு வந்தான்.

நில், எங்கே போய்ட்டு வர்ற, வெற்றிவேல்.

குடிகாரன் கூட பொய் சொல்ல தடுமாற மாட்டான், ஆனால் ஒயின்ஸ் ஷாப் பக்கம் போவதையே தவறு என எண்ணியிருக்கும் கண்ணன், சூழலை தன் அப்பாவிடமிருந்து மறைக்க தகிடு தக்கம் போட ஆரம்பித்தான்.

அப்பா வந்து ஒரு நண்பனை பார்த்து விட்டு வருகிறேன்.

என்றபடி கையில் உள்ள பணத்தை அப்பா பார்க்காதவாறு மறைத்தான்.அப்பாவும்

கண் ஆபரேஷன் செய்யணும் என பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கோகிலாவும் பல மாதங்களாக நகை கேட்டுக் கொண்டிருக்கிறாள். நகையா, கண்

ஆபரேஷனா என பார்த்ததில் நகை வாங்கவே முடிவெடுத்து விட்டேன்.எனவே

பணத்தை மறைத்த படி தடுமாற்றத்துடன் அப்பாவிடம் பேசினேன் நான் எடுத்த

முடிவு சரிதானே நண்பர்களே
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 12:10 pm

mnsmani wrote:யாரு வீட்ல?, கரடு முரடான குரல் கதவுக்கு வெளியே கேட்டது.
இது யாரு? இவ்வளவு கடுமையா என அனைவரும் குழப்பத்தில் ஆழ, கண்ணன் வாசல் பக்கம் சென்று கதவை திறந்தான்.ஐந்தாறு காவலர்கள் வீட்டின் வெளியிலும், கதவருகே காவல் ஆய்வாளர் தோற்றம் கொண்ட ஒருவரும் நின்றுகொண்டிருந்தனர்.கதவை திறந்த கண்ணன் திகைத்தான்.யா..ரு, வேனு...ம், வார்த்தைகள் தொண்டையில் சிக்கின.இங்க கண்ணன் யாரு, ஆய்வாளர் போலிருந்தவர் அதிகாரத்துடன் கேட்டார். கண்ணன்,நா..ன்ன் தான், சொல்லுங்க, என்ன விஷயம்.சற்று நிதானத்துக்கு வர முயற்சி செய்தான்.ஒரு மணிநேரத்திறகு முன் எங்கிருந்தீங்க. இப்போது கண்ணனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. என்னத்தை சொல்வது? உண்மையை சொன்னால் உள்ளிருப்பவர்கள் தன்னை திட்டி தீர்த்துவிடுவார்கள். மாற்றி சொன்னால் வெளியில் இருப்பவர்கள் எப்படி எடுத்து கொள்வார்களோ, என்ன விஷயமாக வந்திருக்கிறார்களோ, நாம் மாற்றி சொல்வது பின்னர் நமக்கே எதிராக மாற வாய்ப்பு இருக்குமோ, என என்னிகொண்டிருந்த வேளையில்,மிஸ்டர்,கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்ன யோசனை, என்ன சொல்லலாம்னு திங்க் பன்றீங்களா?, எங்களுக்கு எல்லாம் தெரியும், அதை உன் வயால சொன்னா பிழைச்ச, இல்ல நாங்க வரவழைப்போம், பரவாயில்லியா, ஏட்டைய்யா, அவர search பன்னுங்க, என்றார். கண்ணனுக்கு சூழ்நிலை மோசமாவதை உணர முடிந்தது,சார்..., இல்...ல, வ...ந்து, நான்.... எனும்போதே, ஏட்டைய்யா, இது சரியா வராது, நீங்க search பன்னுங்க என்றதும், ஏட்டையா கண்ணனை நெருங்கி வந்து மேல் சட்டையில் கைவிட்டு, சார், கத்தையா பனம் இருக்கு என்றார், ஆய்வாளர் பக்கம் திரும்பி. கண்ணன் திடுக்கிட்டான்., இதை எப்படி சமாளிப்பது,என யோசிக்கும் போதே வெற்றிவேல் வாசலுக்கு வந்து, என்னடா யார்கிட்ட இவ்ளோ நேரம் பேசிகிட்டிருக்கே என்றவர் காவலர்களை பார்த்து வயடைத்து போனார். சன்னமாக கண்ணனிடம், என்னடா இது?என்றார் முகத்தில் கடுமையை காட்டி,
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 12:12 pm

mnsmani wrote:
இதை எப்படி சமாளிப்பது,என யோசிக்கும் போதே வெற்றிவேல் வாசலுக்கு வந்து, என்னடா யார்கிட்ட இவ்ளோ நேரம் பேசிகிட்டிருக்கே என்றவர் காவலர்களை பார்த்து வயடைத்து போனார். சன்னமாக கண்ணனிடம், என்னடா இது?என்றார் முகத்தில் கடுமையை காட்டி,
இல்லப்பா, உங்க கண் ஆப்ரேஷனுக்கு பணம் எடுத்துட்டு வந்தேன், அது ஏதுன்னு விளக்கம் கேட்கிறாங்க. நீங்க உள்ள போங்கப்பா, நான் பேசிட்டு வர்றேன்,(இப்ப நகையா முக்கியம், பிரச்சனையிலிருந்து விடுபடுவதுதான் முக்கியம்)என்றான். வெற்றிவெல் உள்ளே செல்ல மறுத்து. ஆய்வாளர் பக்கம் திரும்பி, என்ன சார், என்ன விஷயமா என் பையனை விசரிக்கிறீங்க என்றார்.ஆய்வாளர், மாமா, என்னை தெரியலையா,உங்க மருமகளோட சித்தப்பா பையன் நான், நம்ம ஏரியா ஸ்டேஷன்ல தான் inspecter ஆ இருக்கேன். ஒரு கேஸ் விஷயமா இந்தபக்கம் வந்தேன்,அத்தான பாத்தேன்,என்னை கண்டுக்காத மதிரி போயிட்ருந்தார், சரி நம்மல மறந்துட்டார் போல அப்படின்னு சும்மா கலாய்க்கலாம்னு......, ஆமா நீங்க எப்படி இருக்கீங்க, அக்கா கல்யானத்தப்போ உங்க எல்லாரையும் பார்த்தது, அப்படியே transferல கும்மிடிபூண்டி போய்ட்டேன்,(படுகை ஆதியும் உங்க ஊர்லதான் இருக்கார் தெரியுமா) ஊரெல்லாம் சுத்தி இப்பத்தான் நம்ம ஏரியாவுக்கே வந்திருகேன். உள்ள கூப்பிட மாட்டிங்களா மாமா, அக்கா வீட்ல இருக்குதா என்று பேசிகொண்டே போனார். கண்ணனுக்கு தலை சுற்றியது, அப்படியென்றால் இவர்கள் நம்மை சந்தேகபட்டு வரவில்லையா?என உள்ளுக்குள் சந்தோஷ பட்டுகொண்டே, டேய் நீ மாதவன் இல்ல, uniformல பாத்ததும் எனக்கு அடையாளமே தெரியல,ஆனா கொஞ்ச நேரத்துல என்ன ஆட்டம் காண வச்சுட்டியேடா என்று செல்லமாக மதவன் வயிற்றில் கை முஷ்டியை மடக்கி குத்திவிட்டு, கோகி யாரு வந்திருக்கா பாரு என்று உள்ளே குரல் கொடுத்தான்.
அதுசமயம் கண்ணனின் கையடக்க தொலைபேசி ஒலித்தது, எடுக்கலாம வேனாமா என்று நினைக்கும்போதே......
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 12:13 pm

RukmaniRK wrote:
mnsmani wrote:
அதுசமயம் கண்ணனின் கையடக்க தொலைபேசி ஒலித்தது, எடுக்கலாம வேனாமா என்று நினைக்கும்போதே......
இணைப்பு துண்டிக்கப்பட்டது. தெரியாத ஒரு எண்ணில் இருந்ததால் கண்ணன் குழப்பத்திலே இருந்தான். உள்ளே சென்று அமர்ந்த மாதவனை நலம் விசாரித்துக் கொண்டிருந்தாள் கோகிலா. அதற்குள் அதே எண்ணில் இருந்து அழைப்பு வர கண்ணன் தன் அலைபேசியுடன் வெளியில் வந்தான். முகம் முழுக்க வியர்த்து கொட்ட படபடப்புடன் , “ஹலோ” என்றான்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by ஆதித்தன் » Wed Mar 07, 2012 8:28 pm

RukmaniRK wrote: படபடப்புடன் , “ஹலோ” என்றான்.
[/quote]

சொல்லி முடிப்பதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

யவரிடம் இருந்து வந்திருக்கும் என்ற யோசனையில் நிலைத்து நிற்கையிலேயே!!!!! மனக் கனவில் விழுந்தான், கண்ணன்.

"ஓயின்ஸ் ஷாப்பில் எடுத்த பாட்டில்கள் மூலம் பத்தாயிரம் ரூபாயை ஒர் மணி நேரத்தில் சம்பாதித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த நமக்கு, அந்த பணத்தைக் கூட மகிழ்ச்சியாக செலவழிக்க முடியவில்லையே!, கோகிலாவை எப்படி சமாளிப்பது? நாளை இரவும் அதே பாட்டுத்தானா???"

என்ற ஒர் வித சோக நினைவில் இருக்கும் பொழுதே மீண்டும், கைப்பேசி அழைக்க ஆரம்பித்ததே!!!

மீண்டும் அதே நம்பர்... ரீங்க் ரீங்க்.. ரீங்க்...ரீங்க் ரீங்க்..
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by rajathiraja » Thu Mar 08, 2012 1:55 pm

இந்த விளையாட்டுக்கு நான் வரலை. ஒரே குழப்பமா இருக்கு. தொடர்ச்சியாக எழுவாங்கன்னு பார்த்தால் ஆளாளுக்கு தனித்தனி கதை எழுதுறாங்க! எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்.........
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by rajathiraja » Thu Mar 08, 2012 2:06 pm

Athithan wrote:மீண்டும் அதே நம்பர்... ரீங்க் ரீங்க்.. ரீங்க்...ரீங்க் ரீங்க்..

பதட்டத்துடன் போணை எடுத்தான்.
ஹலோ!
ஹலோ சார்! நாங்க மீனாட்சி அசோசியேட்ஸ்ஸிலிருந்து பேசுகிறோம். உங்களுக்கு ஒரு பரிசு விழுந்திருக்கு. உங்க அட்ரஸ் சொல்லுங்க சார், நாங்க அனுப்பி வைக்கிறோம்.

மீனாட்சி அசோசியேட்ஸா? பரிசா? என்ன பரிசு விழுந்திருக்கு?

'அது சஸ்பென்ஸ்! அட்ரஸ் சொல்லுங்க, அனுப்புறோம்! அப்புறமா பாருங்க'

'நான் அந்த கம்பெனியில் எதுவும் வாங்கவில்லையே?' என்றவாறே யோசனையில் ஆழ்ந்தான் கண்ணன்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by muthulakshmi123 » Thu Mar 08, 2012 10:34 pm

அப்புறம் தான் கண்ணனுக்கு தெரிந்தது இது படுகை உறுப்பினர் ராஜாவின் வேலை என்று...படுகையை ஒரு வழி பண்ணுவது காணாது என்று இப்படி நம்மையும் பரிசு விழுந்திருக்கு என கலாக்கிறாரே என்று முணு முணுத்தபடி ராஜா வீட்டு அட்ரஸை தேட தொடங்கினார்(வீட்டம்மாவிடம் புகார் கொடுக்க தான்)
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RJanaki » Fri Mar 09, 2012 8:36 pm

ராஜா கதை பகுதி சூப்பர் வாய் சிரிச்சி சிரிச்சி ,,,,,,,,,,,,,,,,,,
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”