வாங்க கதை எழுதலாம்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 11:53 am

விளையாட்டாக நாம் அனைவரும் சேர்ந்து ஒரு கதை எழுதினால் என்ன? முயற்சி செய்வோம் வாருங்கள். நான் எழுத ஆரம்பிக்கும் கதையை தொடர்ந்து படுகை நண்பர்கள் யார் வேண்டுமானாலும் எழுதலாம். சில விதிமுறைகளுடன் இந்த கதையை நாம் தொடர்வோம்.

1. இன்னும் இந்த கதையில் 5 நபர்களை(கேரக்டர்) மட்டுமே அறிமுக படுத்த வேண்டும். ஒருவர் ஒரு நபரை மட்டுமே கதையில் அறிமுக படுத்தலாம். இருக்கும் நபர்களே கதைக்கு போதும் எனில் கதையை அப்படியே தொடரலாம்.

2. ஒருவர் 5இல் இருந்து 10 வரிகளுக்குள் தங்கள் கதையை முடித்துக் கொள்ள வேண்டும். அடுத்தவரின் கதைக்கு பின் வேண்டுமானால் மீண்டும் தங்கள் கதையை தொடரலாம்.

3. கதையின் தலைப்பை முடிவுக்கு பின்னர் தேர்ந்தெடுப்போம்.


கதையின் முதல் சில வரிகள்

10.00 மணி. கண்ணன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இதை பார்த்து எரிச்சல் அடைந்த மனைவி கோகிலா முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டாள். மனசாட்சியே இல்லாம எழுப்பிவிடலை. மணி காலை 10. கடையை திறக்க செல்லாமல் தூங்கும் கணவனை எழுப்பி விட்டாள். அப்பவும் தண்ணீரை துடைத்து விட்டு மறுபடி தூங்க முயன்றான்.

கதையை தொடருங்கள்.
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 11:54 am

jyothy wrote:மீண்டும் அவனுக்கு தூக்கத்தில் நிறைய ஆசை கனவுகளோடு இருக்கிறான்.கோகிலாவுக்கு மீண்டும் எரிச்சலாகி தண்ணீர் ஊற்றினாள்.
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 11:56 am

Aruntha wrote:அவன் கடையால் வந்த களைப்பில் தூங்கினாலும் அவனால் அன்றைய பொழுதை சந்தோசமாக கழிக்க முடியவில்லை. கடைக்கு செல்லவும் மனதுக்கு பிடிக்கவில்லை. அதனாலேயே மனைவியின் அத்தனை இம்சைகளையும் பொறுத்து கொண்டு மீண்டும் மீண்டும் தூங்கினான். அவனை எழும்ப விடாது தடுத்தது அவன் மனதின் கனவுகள் அல்ல. நினைவுகள் தான். மீண்டும் கண்களை மூடிய படி அவன் அந்த நினைவுகளுடன் சங்கமமானான்.....!
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 11:57 am

rajathiraja wrote:'ஏங்க! கடைக்கு போங்க! எழுந்திருங்க! உங்களை நம்பி எங்கப்பா கடை வச்சு கொடுத்தாரு பாருங்க! அவரை செருப்பால அடிக்கணும்!'
'அதைச் செய் முதலில்' என்ற கண்ணன் திரும்பி படுத்தான்.
'அட எழுந்திருங்க!' என்றவள் மீண்டும் தண்ணீர் ஊற்ற முயன்றாள்.
'இப்படியே தண்ணி ஊத்திகிட்டு இருந்தால் நான் போய் சேர்ந்திடுவேன்..அப்புறம் நிரந்தரமா கடையை பூட்ட வேண்டி வந்துடும்' என்றான் கணவன் சிரித்துக் கொண்டே...
'அப்போ எழுந்திருச்சு கடைக்கு போங்க' என்றாள் சற்று அதட்டலாக!
'அடியே! என் செல்லக்கிளியே!' என கையைப்பிடித்து இழுத்த கண்ணன் இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமையாச்சே! இன்னிக்கு ஏது கடை? என்றான்.
'அட ஆமால்ல... நான ஒரு லூசு! மறந்தே போயிட்டேன்'.
'அது தான் ஊரே சொல்கிறதே!' என்றவனின் மார்பில் செல்லமாக குத்தினாள்.
'அதை முதல்ல எழுப்பும் போதே சொல்ல வேண்டியது தானே!' எனறாள்.
'இப்போ ஒண்ணும் கெட்டுப் போயிடலை' என்று அவளை இழுத்து கட்டிலில் போட்டான்.
யாரோ கதவை தட்டும் சப்தம் கேட்டது.

குறிப்பு : நமக்கு 5 வரி எல்லாம் பத்தாது. விதியை மீறியதற்காக நடவடிக்கை, கோர்ட்டு, கேஸுன்னு போயிடாதீங்க!)
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 12:00 pm

Athithan wrote:
rajathiraja wrote: யாரோ கதவை தட்டும் சப்தம் கேட்டது.

சிவ பூஜையில் கரடி புகுந்தது போல... கண்ணன் செல்லமாக விளையாட ஆரம்பிக்கு வேளையில் ... மீண்டும் கதவை தட்டினான், குமார்.

"ச்ச... என்ற ஒர்வித எரிச்சலுடன், மனைவியிடம் யார் என்று பார்க்க சொன்னான், கண்ணன்.

ஓ... குமாரா!
என்ன இந்த நேரத்தில், நீ வெளியில் எங்கேயும் போகலையா?, கோகிலா.

இல்ல அக்கா, கடைக்கு சரக்கு லாரி வந்துருக்கு, குமார்.

அப்படியா, இதோ கொஞ்சம் இரு வரச்சொல்றேன்.

தொடரும்....

=======================================
கதாபாத்திரங்கள்:
கண்ணன், கோகிலா & குமார்.

ஒர் பாத்திரத்தை கூடுதலாக சேர்த்துப்புட்டேன்.. கவனம் கவனம்... =news
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 12:02 pm

Muthulakshmi123 wrote:சரி சரி எல்லாரும் கதை படிங்க சும்மா வழக்கு அது இது எது ந்னு இருக்காம

கண்ணன், கோகிலா, குமார்.. முதலில் பெயரை குறித்து கொள்கிறேன். மாற்றி எழுதி மாட்டிக் கொள்ளக் கூடாது..

குமாருடன் கண்ணன் கிளம்பினான்.

பக்கத்து பிராந்தி கடைக்கு சரக்கு வந்திருக்குன்னு தெளிவா சொல்லாமல் எப்படி குறிப்பா சொன்னேன் பார்த்தீங்களா..... அக்கா கண்டுபிடிச்சிருவாங்கனு

அட நீ ஒண்ணு ஞாயிற்றுக்கிழமை கடை அடைப்பு எப்படி சரக்கு வரும்...
லாரி ஸ்டிரைச் வேறு... அதையே கண்டுக்கல என் அறிவு பொண்டாட்டி..
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 12:03 pm

RukmaniRK wrote:பிராந்தி கடைக்குள் குமாருடன் கண்ணன் நுழைவதை பார்த்த அவன் மாமனார் நமச்சிவாயம் மகள் கோகிலாவிடம், “ என்னமா மாப்பிளை இப்படி பொறுப்பில்லாம காலைலே பிராந்தி கடைக்கு போறார். நம்ம வீட்ல யாருக்கும் இந்த பழக்கம் இல்லையே. நீ தான் மா உங்க வாழ்க்கையை பாத்துக்கணும்” என்றார். கோபம் அடைந்த கோகிலா “இன்னைக்கும் வரட்டும் அந்த மனுஷன், பாத்துகிறேன். கூட்டிட்டு போனான்ல அவன முதல்ல விரட்டனும்” என்றாள்.

4வது கதாப்பாத்திரம் நமச்சிவாயத்தை நான் அறிமுகம் செய்து விட்டேன்
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 12:03 pm

ramkumark5 wrote:இந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கண்ணனின் தந்தை வெற்றிவேல், தன் மகன் எங்கே என்று மருமகளிடம் கேட்டார். முதலில் தயங்கிய கோகிலா பிறகு உண்மையை தன் மாமனாரிடம் கூறி விட்டாள். இதை கேட்ட வெற்றிவேல் மிகவும் வருத்தபட்டார்.

5வது கதாப்பாத்திரம் வெற்றிவேலை நான் அறிமுகம் செய்து விட்டேன்.

இப்போ, கண்ணன், கோகிலா, குமாரு, நமச்சிவாயம், வெற்றிவேல் இந்த 5 பேரையும் சுத்தி தான் கதை நகர போகுது.
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 12:05 pm

rajathiraja wrote:வாசலைவிட்டு வெற்றிவேல் இறங்கி தெருவில் நடந்தார். எதிரே கண்ணனும் குமாரும் வந்து கொண்டிருந்தனர். இவரது முகம் சிவந்தது. தந்தையை பார்த்து விட்ட கண்ணன் இயல்பாக இருக்க முயற்சித்தான். ஆனால் முடியவில்லை. கோபத்தில் திட்ட எத்தனித்த வெற்றிவேல் மகனை பார்த்தததும் அழுதார்.
'ஏம்பா இப்படியெல்லாம்... நம்ம குடும்பத்தில் யாருமே இப்படி இல்லையே? எப்படி இந்த பழக்கத்தை கத்துக்கிட்டே'....
தந்தையின் அழுகையை கண்டதும் போதை இறங்க கண்ணனும் அழுதான்.

சம்பவம் நடப்பது நடுரோடு என்பதை இருவரும் மறந்து விட சுதாரித்த குமார், வெற்றிவேலை தனியே அழைத்துச் சென்று 'கல்யாணம் ஆகி மூன்று வருஷம் ஆகியும் குழந்தை இல்லையே என்கிற கவலையில் தான் அண்ணன் இப்படி பண்றார்! எல்லாம் சரியாயிடும் மாமா! வாங்க வீட்டுக்கு போகலாம்' என்றான்.
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 12:06 pm

Athithan wrote:
rajathiraja wrote:எல்லாம் சரியாயிடும் மாமா! வாங்க வீட்டுக்கு போகலாம்' என்றான்.
நாற்காலியில் இருந்தபடியே.... தன் மகனின் தவறான போக்கிற்கு இதுதான் காரணமோ!!! என்று கற்பனைக் கனவிலிருந்த வெற்றிவேல்,

"மாமா காபி", கோகிலா.

என்ற குரலால் திடிக்கிட்டு எழுந்தார்.

வீடே கண்ணனை குடிகாரனாக்கி சோகத்தில் மூழ்கியதோடு அல்லாமல், பிரச்சனைக்கு அடியெடுத்து வைக்க தயாராக...

கண்ணன், மிக்க மகிழ்ச்சியோடு பாக்கெட் நிறைய பணத்தோடு வீட்டுக்கு வந்தான்.

நில், எங்கே போய்ட்டு வர்ற, வெற்றிவேல்.

குடிகாரன் கூட பொய் சொல்ல தடுமாற மாட்டான், ஆனால் ஒயின்ஸ் ஷாப் பக்கம் போவதையே தவறு என எண்ணியிருக்கும் கண்ணன், சூழலை தன் அப்பாவிடமிருந்து மறைக்க தகிடு தக்கம் போட ஆரம்பித்தான்.

தொடரும்...

( நான் எப்படியோ எழுதியிருந்தேன்... ஆனால், இடையில் ராஜா சார் புகுந்து மாற்றி எழுத வைச்சிட்டார்) :(
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”