வாங்க கதை எழுதலாம்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by rajathiraja » Tue Mar 20, 2012 5:10 am

Athithan wrote: கோகிலா மயங்கி விழுந்தாள்...

கோகிலா ... கோகிலா..

அருகிலிருந்த கண்ணன், செய்வதறியாது மயங்கிய மனைவியினைத் தாங்கிக் கொண்டு... கோகிலா கோகிலா.. என கன்னங்களை ஆட்டினான்...
திருமணமாகி மூன்று வருடத்தில் கோகிலாவுக்கு ஒருநாள் கூட இப்படி ஆனதில்லையே?
பணம் கிடைக்காத கவலையில் அவளுக்கு இப்படி ஆகிவிட்டதே! என கண்கலங்கிய கண்ணன்,
அவளை மெதுவாக படுக்க வைத்து விட்டு ஆட்டோவுக்கு போண் பண்ணினான்.
ஐந்தே நிமிடத்தில் ஆட்டோ வாசலில் வந்து நின்றது.

'ஏம்ப்பா! முத்துலட்சுமி ஆஸ்திரிக்கு போ! சீக்கிரமா போ!'
என ஆட்டோ டிரைவருக்கு கட்டளையிட்டான் கண்ணன்.

தெருவில் விரைந்தது ஆட்டோ.

அருகிலேயே ஒரு போலீஸ் ஜீப் தொடர்ந்து வர மீண்டும் குழம்பினான் கண்ணன்.
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Thu Mar 22, 2012 8:48 am

ஆட்டோ மருத்துவமனை வாயிலை அடைந்தது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் னு சொல்லுற மாதிரி போலீஸ் ஜீப் இவர்களை கடந்து சென்றது. நிம்மதி பெருமூச்சுடன் மருத்துவமனைக்குள் மனைவியை அழைத்துச் சென்றான். மருத்துவர் இவனை வெளியே அனுப்பி விட்டு கோகிலாவை பரிசோதனை செய்தார். 1 கோடி பரிசு கிடைக்காத அதிர்ச்சியில் இப்படி மயங்கி விழுந்துட்டாளே!! இவளை எப்படி தேற்றுவது என குழம்பினான். பரிசோதனை முடிந்து இவன் குழப்பத்திற்கு பதில் கொடுத்தார் மருத்துவர். திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத அந்த தம்பதியருக்கு குழந்தை பிறக்க போகிறது என்பதே அது. அதை கேட்ட கண்ணன், கோகிலா எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தனர்.
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by rajathiraja » Fri Mar 23, 2012 8:06 pm

எங்கே! திரும்பவும் சொதப்பிடுவாங்களோன்னு நினைச்சேன்.
நான் சொல்ல வந்ததை மிகச் சரியாக சகோதரி ருக்மணி சொல்லிட்டாங்க!

தாங்க்ஸ்மா!
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RukmaniRK » Sat Mar 24, 2012 12:11 pm

கதை படுகைக்குள்ள போயி மறுபடியும் காமெடி ஆகாமா இருந்தா சரி ராஜா அண்ணா!!!!!!!!
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by rajathiraja » Sun Mar 25, 2012 6:04 am

RukmaniRK wrote:திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத அந்த தம்பதியருக்கு குழந்தை பிறக்க போகிறது என்பதே அது. அதை கேட்ட கண்ணன், கோகிலா எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ச்சி----
வீட்டிற்கு வந்த கண்ணன் கோகிலாவை அப்பபடியே அலாக்காக தூக்கினான். வீட்டில் சந்தோசம் கரை புரண்டு ஓடியது.
என்ன பெயர் வைக்கலாம்? என யோசிக்க துவங்கினான் கண்ணன்.
அதுக்குள்ளே பேரு வைக்க போறீங்களா? கொஞ்ச நாள் பொறுங்க! என்றவள் மகாதேவன் என்று வைப்போம் என்றாள்.
ம்கூம் பிறக்க போறது பெண் குழந்தை தான் அதான் என்ன பேரு வைக்கலாம்னு யோசிச்சக்கிட்டு இருக்கேன் என்றான் கண்ணன்.

முதலில் அம்மாவுக்கு விஷயத்தை சொல்லணும் என்று ஓடிப்போய் போணை எடுக்க போனவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by sumayha » Sun Mar 25, 2012 1:07 pm

நல்ல முயற்சி... எல்லோருடைய கற்பனையும் நல்லாவே ஓடுது... ஒவ்வொருத்தரும் தொடர்ச்சியா கதையைக் கொண்டு போறது ரொம்ப நல்லாருக்கு... எல்லாருக்கும் வாழ்த்துக்கள். :ro: :ro: :ro:
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by rajathiraja » Sun Mar 25, 2012 8:40 pm

sumayha wrote:நல்ல முயற்சி... எல்லோருடைய கற்பனையும் நல்லாவே ஓடுது... ஒவ்வொருத்தரும் தொடர்ச்சியா கதையைக் கொண்டு போறது ரொம்ப நல்லாருக்கு... எல்லாருக்கும் வாழ்த்துக்கள். :ro: :ro: :ro:
சும்மா வாழ்த்து சொல்லிட்டு ஓடிடாதீங்க? கதையை கண்டினியூ பண்ணுங்க....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by ஆதித்தன் » Mon Mar 26, 2012 7:39 am

rajathiraja wrote: அதிர்ச்சி காத்திருந்தது.[/b]
ஒர் பெண்ணுக்கு மிக்க மரியாதையையும்.. மிக்க மகிழ்ச்சியையும் கொடுப்பது அவளது தாய்மை தான், அதுவும் சில ஆண்டுகளுக்குப் பின், பல பேச்சுக்களுக்கு அப்பால், ஏக்கத்தின் உச்சத்தில் கருத்தரித்த கோகிலா, இவ்விடயத்தை தன் தாயிடம் சொல்வதற்காக ஹாலுக்குள் செல்லும் பொழுது தான் அந்த அதிர்ச்சியான நிகழ்வு நடந்தது!!!!!

இத்தனைக்கும் கோகிலா இதனை நம்புவள் அல்ல, ஆண்டவனையும் நம்புவளாக இருந்திருக்கவில்லை. ஆனால், கடந்த இரண்டரை வருடத்தில் அவள் சுத்தமாக அப்படியே மாறியிருந்தால். ஆம், திருமணம் ஆனதிலிருந்து இன்று வரை கணவன் மனைவி உறவில் எந்த குறையும் இல்லை. ஆனால் அவ்வுறவிற்கு சத்தியமாக ஒர் குழந்தை மட்டும் இல்லை. குறை ஏதும் இருக்கிறதா? என மருத்துவர்களிடம் சென்றால்... பணம் தான் செலவழிந்ததே தவிர... சரியான தீர்வு கிடைக்கவில்லை. எல்லாமே நார்மலாகத்தான் இருக்கிறது. இப்படி அப்படி என நாட்களைத்தான் பார்த்து செயல்படச் சொன்னார்களே தவிர... உறுதியான விடை கொடுக்கவில்லை. இதனால் தான் என்னவோ!!!!

எத்தனை மகிழ்ச்சியோடு தன் தாய்க்கு போன் செய்ய ஓடோடிச் சென்றாளோ ... அதுக்கும் மேலான சோகத்தோடு திரும்பி அப்படியே படுக்கை அறையில் உட்கார்ந்துவிட்டாள்..
அதற்கு காரணம் பக்கத்து வீட்டு "_ _ _ _ _""

தொடரும்.......
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by muthulakshmi123 » Mon Mar 26, 2012 3:02 pm

எல்லாரும் நல்லா கதை எழுதுகிறீர்கள் ,வாழ்த்துக்கள்....முத்துலஷ்மி மருத்துவமனைக்கு பீஸ் கொடுக்காமலே சென்று விட்டீர்களே..எப்படி வசூலிப்பது..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by ஆதித்தன் » Mon Mar 26, 2012 6:43 pm

muthulakshmi123 wrote:எல்லாரும் நல்லா கதை எழுதுகிறீர்கள் ,வாழ்த்துக்கள்....முத்துலஷ்மி மருத்துவமனைக்கு பீஸ் கொடுக்காமலே சென்று விட்டீர்களே..எப்படி வசூலிப்பது..
லெட்சுமியம்மா,

ராஜா சார் மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டுவந்தவர். ஆகையால் அவரை பிடிச்சி வசூல் பண்ணிக்கோங்க. :ays:
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”