வாங்க கதை எழுதலாம்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by rajathiraja » Mon Mar 12, 2012 6:22 am

என்னாச்சு! தொடர்ந்து யாரும் எழுதக் காணோம்! மறந்துட்டாங்களா? ஆரம்பிச்சு வச்சவங்களையும் காணோம்?
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by ramkumark5 » Mon Mar 12, 2012 9:28 am

எங்கு தேடியும் ராஜாவின் முகவரி கிடைக்கவில்லை. விரக்தியில் ஆழ்ந்து இருந்த கண்ணன் நண்பன் ஒருவனை சந்தித்தான். ராஜாவின் முகவரியை கண்டறிய கண்ணனின் நண்பன் ஒரு அருமையான வழியைக் கூறினான். ராஜா படுகை உறுப்பினராக இருப்பதால் கண்டிப்பாக அவருடைய முகவரி படுகை நிர்வாகி ஆதித்தனுக்கு தெரிந்திருக்கும் என்றும் அவரை சென்று பார்க்கும்படியும் கூறினார். ஆதித்தனை தேடி புறப்பட்டான் கண்ணன்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 10:42 am

கண்ணனின் நண்பர் ஆதித்தனிடம் ராஜாவின் முகவரியை கேட்டார்..ஆதித்தன் சாரி...உறுப்பினர்களின் முகவரியை அவர்களின் அனுமதி இன்றி தர இயலாது..ராஜா எப்போதும் நெட்டில் தான் சுட்டுக் கொண்டிருப்பார்...வேண்டுமானால் அங்கே போய் பாருங்கள் என்றார்...நண்பரும் விரக்தியோடு ..என்னவோ வடை சுடர மாதிரி சிம்பிளா சொல்றாரே என்று முணு முணுத்தபடி திரும்பினார்
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by rajathiraja » Mon Mar 12, 2012 5:25 pm

முத்துலட்சுமியம்மாவின் அறிவுரைப்படி நெட்டில் ராஜாவை தேட ஆரம்பித்தான் கண்ணன். ராஜா என தமிழில் டைப் செய்ததும் ஏராளமான ராஜாக்கள் வந்தார்கள். அதில் ராஜாவும் கனிமொழியும் பற்றிய செய்தி தான் எராளமாக இருந்தது.
அடச்சே! இங்கேயும் புகுந்துட்டார்களா? என யோசித்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது!
மவனே! ராஜா! உன்னை புடிச்சிடறேண்டா!
என்ற படியே பிரகாசமானான்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 10:45 pm

rajathiraja wrote:முத்துலட்சுமியம்மாவின் அறிவுரைப்படி நெட்டில் ராஜாவை தேட ஆரம்பித்தான் கண்ணன். ராஜா என தமிழில் டைப் செய்ததும் ஏராளமான ராஜாக்கள் வந்தார்கள். அதில் ராஜாவும் கனிமொழியும் பற்றிய செய்தி தான் எராளமாக இருந்தது.
அடச்சே! இங்கேயும் புகுந்துட்டார்களா? என யோசித்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது!
மவனே! ராஜா! உன்னை புடிச்சிடறேண்டா!
என்ற படியே பிரகாசமானான்.
அந்த யோசனை என்ன என்று கேட்கிறீர்களா? படுகை ராஜா என்று தமிழில் டைப் செய்யாமல் வெறும் ராஜா என்றதால் தான் ராஜா கனிமொழி என பலரை காண நேர்ந்தது என நினைத்தான்...பிறகு என்ன படுகை ராஜா என அடித்து கம்யூட்டர் முன் அமர்ந்து அதன் பதிலுக்காக காத்திருந்தான்(கம்யூட்டர் ஜி படுகை ராஜா அட்ரஸ் சொல்லுங்கள் என்று புலம்பியபடி)
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by ஆதித்தன் » Thu Mar 15, 2012 8:54 am

muthulakshmi123 wrote: படுகை ராஜா என அடித்து கம்யூட்டர் முன் அமர்ந்து அதன் பதிலுக்காக காத்திருந்தான்
காத்திருக்கும் நொடியில் கம்ப்யூட்டர் ஜி, நான் தான் பராக் ஒபாமான்னு சொன்னால் நம்பவா போறீங்க? என்பேரு ராஜாதி ராஜ.. ராஜ மார்தாண்ட.. ராஜ கம்பீர..... என்று காட்டிய வாக்கியத்தை இழுத்து படித்து முடிப்பதற்குள்,

வீடே ரணகளமாகிக் கொண்டிருக்கிறது, நீங்க என்னென்னா, ஜாலியா நெட்ல உட்கார்ந்து சாட்டா பண்ணிக்கிட்டு இருக்கீங்க, கோகிலா.

இல்லைம்மா, எனக்கு 1 கோடி ரூபாய்க்கு பரிசு விழுந்திருக்காம். சீக்கிரமாக அட்ரஸ் கொடுத்து பெற்றுக் கொள்ளும்படி, ஒர் பொண்ணு சொல்லிச்சி.. , கண்ணன்.

:aah: ஒர் கோடி ரூபாயா!!!, கோகிலா.

ச்சச்ச எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. எல்லாம் என் நண்பர்கள் பண்ணுகிற சேட்டையாக இருக்கும், கண்ணன்.

நீங்க அந்த பொண்ணுக்கிட்ட அட்ரஸ் கொடுத்திட்டீங்களா, கோகிலா.

கொடுக்கலடி, கண்ணன்.

இப்ப போன் பண்ணி அந்த பொண்ணுகிட்ட அட்ரஸ் கொடுக்கிறீங்களா இல்லையா? , கோகிலா.

இல்லைம்மா, நான் எந்த லாட்டரிச்சீட்டும் வாங்கலம்மா.. , கண்ணன்.

அதான் அவங்க உங்களுக்கு பரிசு விழுந்திடுச்சின்னு சொல்லிட்டாங்களே, அப்புறம் என்ன?
கொடுக்கிற தெய்வம் கூரைய பிய்ச்சிக்கிட்டு கொடுக்கும்னு சொல்வாங்க.. எல்லாம் என் அதிர்ஷ்டம்ங்க. கோகிலா.

இல்லைடி, எனக்கு மீனாட்சி அசோசியட்ஸ்னா என்னென்னே தெரியாதுடி, கண்ணன்.

இப்ப போன் பண்றீங்களா இல்லையா? :ank: கோகிலா.


இதுக்கு மேலையும் கோகிலாவை பேசி சமாளிக்க முடியாது எனத் தெரிந்த கண்ணன், போனை எடுத்து அதே நம்பருக்கு அழைத்தான்...

ரீங்க்..ரீங்க்... ரீங்க்க்க்க்க்க்க்க்க்க்


தொடரும்.....
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by muthulakshmi123 » Thu Mar 15, 2012 3:11 pm

கதையை நல்ல சுற்று சுற்றென்று சுற்றுகிறீர்கள்...இருந்தாலும் படிக்க சந்தோஷமாக இருக்கு,..
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by RJanaki » Sat Mar 17, 2012 6:17 pm

கதை படிக்க நல்ல இருக்கு தொடருங்கள். :ays: :ays: :ays:
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by mnsmani » Sat Mar 17, 2012 7:28 pm

இதுக்கு மேலையும் கோகிலாவை பேசி சமாளிக்க முடியாது எனத் தெரிந்த கண்ணன், போனை எடுத்து அதே நம்பருக்கு அழைத்தான்...

ரீங்க்..ரீங்க்... ரீங்க்க்க்க்க்க்க்க்க்க்
ஹலோ யாரு, என்ன சொல்லுங்க?
எதிர் முனையில் கர்ன கடூரமாக ஒரு குரல் ஒலித்தது.
சார் நான் கண்ணன் பேசறேன். கொஞ்ச நேரத்துக்கு முன்ன இந்த நம்பரிலிருந்து ஒரு கால் வந்துச்சு, ஒரு கோடி ரூபாய் கிடைச்சிருக்குன்னு,என்னோட அட்ரஸ் கேட்டிருந்தாங்க, குறிச்சிகிறிங்களா,
ஏம்பா, உங்களுக்கெல்லாம் வேற பொழப்பில்லையா, எவ்ளோதான் சொல்றது, இந்தமாதிரி போன் வந்தா, response பன்னாதீங்கன்னு, இப்பதான் அந்த கோஷ்டிய பிடிச்சிட்டு வந்து விசாரிக்கிறோம், முடிஞ்சா station க்கு வந்து ஒரு complaint குடுத்துட்டு போங்க, என்றார்.
அப்படியா, என்னோட brother in law கூட அங்கதான் இருக்கிறார்.
என்னவா இருகார். பேர் சொல்லுங்க.
மாதவன், இன்ஸ்பெக்டரா இருக்கார்.
அப்படியா, நான் SI,பேசறேன், சார்தான் இந்த கேச பிடிச்சிட்டு வந்தார், நல்ல காலம் போங்க, நீங்களும் ஒருகோடிக்கு ஆசைபட்டு 10லட்சம், 15 லட்சம்னு பனம் கொடுத்து ஏமாறாம தப்பிச்சிட்டீங்க, சார் வந்தா சொல்றேன். முடிஞ்சா உங்க mobile லோட station க்கு வந்து ஒரு complaint கொடுத்துட்டு போங்க, எங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். வச்சிரட்டுங்களா, என்றபடி போனை வைத்தார்.
இப்போதுதான் கண்ணனுக்கு எல்லாம் விளங்கியது. நல்ல காலம் யார் செய்த புன்னியமோ, அந்த கும்பல்கிட்ட நாம மாட்டல, அடியேய் கோகி, கேளு கதையை என்றபடி சமையலறை சென்றான்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வாங்க கதை எழுதலாம்

Post by ஆதித்தன் » Mon Mar 19, 2012 8:53 pm

mnsmani wrote:..... அடியேய் கோகி, கேளு கதையை என்றபடி சமையலறை சென்றான். [/color]
அங்கு கோகிலா, கிடைத்த ஒர் கோடியில் கற்பனைக் கனவு கொண்டு வீடு கட்டி .... நீச்சலடித்துக் கொண்டிருந்தாள்.

கோகிலா.. கோகிலா... என்ற மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அவளை உலுப்பி, ஏமாற இருந்ததிலிருந்து தப்பித்தக் கதையைக் கூறினான்.

:aah: அப்படின்னா ஒர் கோடி இல்லையா :aah:

கோகிலாவின் மனம் அப்படியே தலைகீழாக, தான் ஏமாந்துவிட்டோமே என்ற சோகத்தில் தொங்கியது. எவ்வளோ பெரிய வீடு.. வேலைக்குத்தான் எத்தனை ஆட்கள்... மகிழ்வாக ஓடி விளையாடத் தோட்டம் ... வெயிலுக்கு இதமான நீச்சல் குளம்... அத்தனையும் ஒர் நொடியில் சுக்கு நூறாக நொறுங்கிவிட்டதே!!! என்ற சோகத்தில்... கோகிலா மயங்கி விழுந்தாள்...

கோகிலா ... கோகிலா..

அருகிலிருந்த கண்ணன், செய்வதறியாது மயங்கிய மனைவியினைத் தாங்கிக் கொண்டு... கோகிலா கோகிலா.. என கன்னங்களை ஆட்டினான்...


உங்களால் தொடரப்படும்...
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”