Fx Non-Farm Payrolls Pre Planning Strategy

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Fx Non-Farm Payrolls Pre Planning Strategy

Post by ஆதித்தன் » Wed Nov 06, 2013 11:49 pm

Image
வாரத்தின் முதல் நாளிலேயே ட்ரேடிங்க் வாய்ப்பு என நாம் இரண்டு புள்ளிகளை குறித்து வைத்துக் கொண்டோம், அது ஒன்று Head & Shoulder , மற்றொன்று Double Resistance. இந்த இரண்டு புள்ளிகளிலும் ஆர்டர் போட்டால் உறுதியான இலாபத்தோடு வெளியேறலாம் என காத்திருக்கிறோம்.

அதற்கு ஏற்றாற் போல, கடந்த மூன்று நாட்களில் மார்க்கெட் இறக்கத்திற்கான ஏற்றத்தினை தெளிவாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதில் நாம் எதிர்பார்க்கும் இடப்பக்கத் தோளை நாளை தொட பெரும்பான்மையான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஏனெனில் தற்பொழுது 1.3540 என்ற புள்ளியருகே வந்துவிட்டது. என்னும் மீதம் இருப்பது 100 பைப்ஸ் மட்டுமே.

நாளை மாலை 6 மணிக்கு மிக முக்கியமான டேட்டாஸ் வருகின்றன. இந்த நேரத்தில் 100 பைப்ஸ் உறுதியாக மாற்றம் காணப்படும். அதைப்போல், நாளை மறுநாளும் மாலை 6 மணிக்கு எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் Non-Farm Payrolls டேட்டாவும் ரிலிஸ் ஆகிறது.

அடுத்தடுத்த முக்கிய டேட்டாஸ் நாளை மாலை 6 மணியிலிருந்து 7.30 வரை ப்ளக்சிபுள் கொடுக்க இருப்பதோடு, இரவு 11.30-க்கும் ஒர் முக்கிய நிகழ்வு நேரம் இருக்கிறது. ஆகையால் மிக ஜாக்கிரதையாகவே ட்ரேடிங்க் செய்யுங்கள்.

இந்த நேரத்தில் மார்க்கெட் பெரும்பாலும் அப் & டவுன் என்ற போக்கில் காணப்படும் என்பதுவே எனது கணிப்பு. அதிலும், நாளை 1.3640 என்றப் புள்ளியினைத் தொடுவதோடு, அதற்கடுத்த நாளில் உடைத்தும் மேல் எழும்பலாம் என்றும் நம்புகிறேன்.

இப்படி மேல் எழும்பவே வாய்ப்புகள் அதிகம் காணப்பட்டாலும், நாம் இறங்குவது கீழ் நோக்கித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மார்க்கெட் தற்பொழுது இருப்பது ரெசிஸ்டன்ஸ் பகுதி. இந்த நிலையிலிருந்து மேல் சென்றால் திரும்ப வரும், இறங்குவது மேல் எழும்ப நீண்ட நாட்கள் ஆகும். ஆகையால், இறங்கு முகத்திற்கு வாய்ப்பினைத் தேடி, நாளை ஏற்படும் 100 பிப்ஸ் உச்சத்தில் ஆர்டர் போடுங்கள்.

அதைப்போல், நவம்பர் 8 தேதி வர இருக்கும் நான்-பேர்ம் பே ரோல்ஸ் டேட்டா ரிலிஸின் பொழுதும் பெரும்பாலும் 80 பிப்ஸ் ஒர் பக்கம் சென்றாலும், பின் அதில் பெரும்பான்மையாது ரிபவுண்ட் ஆகிவிடுவது வழக்கம். ஆகையால், அதுவும் மேல் சென்றால் தைரியமாக செல் ஆர்டர் போடுங்கள்.

தொடர்ச்சியாக முக்கிய டேட்டாஸ் வெளியாகும் நேரம் பார்க்க > http://forex.padugai.com/2013/09/forex- ... iming.html
Image
ஸ்டாப் லாஸ் எப்பொழுதுமே நம்மை பதம் பார்க்கும் கத்தி தான். இருந்தாலும் குறைவான பேலன்ஸ் வைத்திருப்பவர்கள், இதனை பாதுகாப்பிற்கு பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். நல்ல பேலன்ஸ் வைத்திருப்பவர்கள், செல் ஆர்டரினை உச்சத்தில் போட்டுவிட்டு, பின் ட்ரையல் ஸ்டாப் செட் செய்து கொள்ளுங்கள். (ட்ரையல் ஸ்டாப் என்பது பாசிட்டிவ்/இலாப இடத்தில் ஸ்டாப் லாஸ் செட் செய்வது)
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”