பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய திட்டமிடுதல் மிக அவசியம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய திட்டமிடுதல் மிக அவசியம்

Post by ஆதித்தன் » Tue Oct 08, 2013 12:14 am

பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வது என்பது மிக மிக சுலபம். எப்படிச் சொல்றேன்னா, வீட்டிலிருந்து கொண்டே கணிணி மூலம், அட்ரஸ் ப்ரூப் & ஐடி ப்ரூப் இருந்தால் பாரக்ஸ் கரன்சி ட்ரேடிங் அக்கவுண்டினை இரண்டு நாட்களில் அப்ரூவல் வாங்கிவிடலாம்.

வங்கி கணக்கு உள்ளவங்கதான் ட்ரேடிங்க் செய்ய முடியும். வங்கி கணக்கு உள்ள எல்லோரிடமும் அட்ரஸ் ப்ரூப் & ஐடி ப்ரூப் இருக்கும். இவ்வாறு அட்ரஸ் ப்ரூப் & ஐடி ப்ரூப் வாங்கமலே சில தளங்கள், டெபாசிட் செய்ய அனுமதிக்கின்றன. அப்படியான தளங்கள் மீதும் ஒர் கண் வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் அட்ரஸ் ப்ரூப் & ஐடி ப்ரூப் கொடுக்காமலே ட்ரேடிங்க் செய்ய எப்படி நம்மை அனுமதிக்கிறார்கள்???

நான் சொல்லும் தளத்தில் நமக்கான தனி வால்ட் என்றொரு பிரைவேட் அக்கவுண்ட் ஒன்று உருவாக்கப்படுகிறது. இதற்குத்தான் நீங்கள் முதலில் டெபாசிட் செய்யப் போகிறீர்கள். டெபாசிட் செய்வதற்கு முன் அட்ரஸ் ப்ரூப் & ஐடி ப்ரூப் சப்மிட் செய்து அப்ரூவல் வாங்க வேண்டும். வாங்கியப் பின்னர் தான் பணத்தினை டெபாசிட் செய்ய வேண்டும். ஏனெனில் நமது ப்ரூப் சரியாக இருந்தால் தான் அவர்கள் நமக்குப் பணத்தினை திரும்ப அனுப்ப முடியும். ஆகையால் சரியான ப்ரூப் சப்மிட் செய்து அக்கவுண்ட் அப்ரூவல் ஆனப் பின்னர் பணத்தினை டெபாசிட் செய்ய வேண்டும்.


அக்கவுண்ட் அக்டிவேட் ஆகி, பணத்தினை அனுப்பிவிட்டீர்கள் என்றால், அதே வழியில் பணம் திரும்ப வருவதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. பணம் செலுத்துவதுதான் கஷ்டம். ஏனெனில் இந்தியா அப்படி ஒன்று பெரிய பொருளாதர வளர்ச்சி பெற்ற நாடு அல்ல. 1 டாலர் = 64 ரூபாய் என்ற அளவிற்கு பெரிதும் கீழே தான் இருக்கிறது. மேலும் டாலர்க்கு எதிரான நடப்பு கணக்குப் பற்றாக்குறை மிக அதிகமாக உயர்ந்து வருவதால், இங்கிருந்து ரூபாய் வெளியில் செல்வதற்கு முட்டுக்கட்டைகள் பல உண்டு. ஆனால் டாலரினை இங்கு கொண்டு வருவதற்கு வரவேற்பு அதிகமுண்டு. இதனை பாரின் இன்வஷ்ட்மெண்ட் செய்வோர் பலருக்கும் தெரியும். இப்படி பணம் அனுப்புவதில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, பணம் வருவதில் பிரச்சனை வருமோ என்று சிலர் அச்சம் கொண்டிருக்கின்றனர். அப்படியெல்லாம் ஏதுமில்லை, தாராளமாக பாரினில் இன்வஸ்ட்மெண்ட் செய்யலாம், அதைப்போல் வித்ட்ராவும் செய்து கொள்ளலாம்.


பலர் பாரக்ஸ் ட்ரேடிங்க் பற்றி மிக ஆர்வமாக கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள், தவறில்லை. ஆகையால் ஸ்டெப் பை ஸ்டெப்பாக, அதாவது முதலில் ரிஜிஸ்டர், இரண்டாவது ப்ரூப் சப்மிஷ்சன். மூன்றாவது டெபாசிட், நான்காவது தான் ட்ரேடிங்க். ஏனெனில் ரிஜிஸ்டர் செய்யாமல் ப்ரூப் சப்மிட் செய்ய முடியாது, ப்ரூப் சப்மிட் செய்யாமல் டெபாசிட் செய்யக் கூடாது. டெபாசிட் செய்யாமல் ட்ரேடிங்க் செய்ய முடியாது.

ஆகையால், ட்ரேடிங்க் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தொடர்பு கொள்பவர்கள் முதலில் டெபாசிட் செய்து கொள்ள வேண்டும், அதற்கு முன்னர் அக்கவுண்ட் அப்ரூவல் வாங்கிக் கொள்ளுங்கள்... இப்படி எதுவுமே இல்லாது பாரக்ஸ் பற்றி என்ன சொல்வது?

பாரக்ஸ் ட்ரேடிங்க் என்று கேட்டால் வாங்கி விற்பது தான் ட்ரேடிங்க். பாரக்ஸ் என்று சொன்னால் வெளிநாடுகளுக்கிடையிலான கரன்சி எக்ஸ்சேஜ். அல்லது ஒர் கரன்சி கொண்டு மற்றொரு கரன்சியினை வாங்கி விற்பது. இது ஆசியா ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா , ஆப்ரிக்கா கண்டம், போன்ற கண்டங்களில் உள்ள அந்தந்த நாட்டிலுள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட பெரிய வங்கிகள் மூலம் நடத்தப்படுவது. ஆகையால் பாரக்ஸ் என்பது ஏமாற்று அல்ல, ஆனால் சரியான தளங்கள் மூலம் செய்யப்பட வேண்டியது உங்கள் பொறுப்பு.

பாரக்ஸ் என்றால் வாங்குவது விற்பதுதாங்க. ட்ரேடிங்க் ரொம்ப சுலபம், ஒர் க்ளிக்கில் வாங்கலாம்... ஒர் க்ளிக்கில் விற்கலாம். எதுன்னாலும் விரும்பும் நேரம், விருப்பத்திற்கு இணங்க செய்யலாம். இதனைத்தான் பாரக்ஸ் என்று கேட்டால் சொல்லித் தருவாங்க. இதனையே நானும் சொல்ல விரும்பவில்லை.


ஸ்டெப் பை ஸ்டெப்பா...ஒவ்வொன்றாக நான் சொல்லித்தருகிறேன். ஏனெனில் நாம் இறங்குவது வாங்கி விற்க அல்ல. இலாபம் சம்பாதிக்க. இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்று சொன்னால் திட்டமிடுதலுடன் இறங்க வேண்டும். திட்டமிடுதல் இன்று தவறியும் ஆர்டர் இடுதல் கூடாது. எந்தவொரு காரணத்தினைக் கொண்டும், உணர்ச்சி வசப்படுதல் கூடுதால். பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர்கள், ரோபோ மாதிரி ஒர் செயல்பட வேண்டும், அதுதான் மிக முக்கியம்.

மிச்சத்தினை ரியல் அக்கவுண்டுக்குப் பின்னர் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”