Page 1 of 1

அமெரிக்காவினை முடக்கி வைத்திருக்கும் ஓபாமா கேர் - கேர் டூ பை

Posted: Thu Oct 03, 2013 1:34 pm
by ஆதித்தன்
ஓபாமா அரசு கொண்டு வரும் ஏழை எளிய மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதனால் அரசு செயல்பாடு கடந்த வாரம் முதல் சரியாக இயங்கவில்லை அல்லது அரசே சட்டவுன் அறிவித்துவிட்டது என்பதே உண்மை. இதனால், அரசு துறைகளுக்குச் செல்ல வேண்டிய பணப்பட்டுவாடா நிறுத்தப்பட்டுள்ளதால், வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்க சட்டவுன் காரணமாக அமெரிக்க கரன்சியின் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறது. மேலும் இதனை ஒர் வாய்ப்பாக கருதி, ஈரோ செண்டரல் பேங்க் தலைவர்களில் ஒருவர் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியின் பொழுது, அமெரிக்க சட்டவுன் அவ்ளவு சீக்கிரத்தில் முடியப்போவதில்லை. இதனால் அமெரிக்க கரன்சி வீழ்ச்சி மேலும் தொடரும் என்று ஒர் பக்கம் பத்த வைக்க.. EUR/USD , புதிய உச்சமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் அடைந்திருந்த புள்ளியான 1.36 அருகில் வந்தடைந்துள்ளது.

அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் சில தினங்களில் மீள்ச்சி பெரும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பு மட்டுமின்றி, இதனால் மக்கள் மத்தியில் ஓபாமாவுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்பதே பலரது கணிப்பு, ஏனெனில் ஓபாமா கேர் என்ற இவ் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை அடையும் என்றிருக்கும் பொழுது அதனை எதிர்க்கட்சிகள் தடை செய்ய முயல்வது பின்னடைவினையே கொடுக்கும்.

அமெரிக்க நிர்வாகம் விரைவில் மீண்டெழும்பும் பொழுது டாலர் சரிவு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுவிடும். ஆகையால் இந்த நேரத்தில் EUR/USD - பை ஆர்டர் போட்டு சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள். உயரும் வரை உயருட்டும் என காத்திருங்கள்.


பாரக்ஸ் கரன்சி ட்ரேடிங்க் டிப்ஸ்