பாரக்ஸ் வீக்லி ரிப்போர்ட் - செப்டம்பர் 16/20- 2013

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் வீக்லி ரிப்போர்ட் - செப்டம்பர் 16/20- 2013

Post by ஆதித்தன் » Sun Sep 22, 2013 10:13 pm

Forex Market Report > September 16/20

மார்கெட் தொடங்கியது = 1.3293

மார்கெட் முடிவுற்றது = 1.3523 (அதாவது 112 பைப்ஸ் காளை கெயின் பண்ணியிருக்கிறது)


வாரத்தின் உச்சம் = 1.3567

வாரத்தின் மட்டம் = 1.3293

வாரத்தின் ஏற்ற இறக்கம் = 272 pips

வாரத்தின் மாற்றம் = +228 பைப்ஸ் (இந்த வார விளையாட்டின் வெற்றியாளர், காளை)

இருபத்தி மூன்று வாரங்களின் மாற்றம் = +453 பைப்ஸ்

======================================================
இந்த வாரத்தின் தொடக்கமே ஒர் உச்சத்தோடுதான் ஆரம்பித்திருக்கிறது. அத்தோடு, அமெரிக்க வங்கியின் கொள்கை முடிவால் டாலர் பெரிய சரிவினையும் சந்தித்திருக்கிறது. அமெரிக்காவின் அறிவிப்பினை சாதகமாக நமது ரிசர்வ் பேங்கும் பயன்படுத்தி ரெப்போ ரேட்டினை உயர்த்திக் கொண்டதன் மூலம் ரூபாய் மதிப்பின் சரிவிலிருந்து தப்பித்துக் கொண்டது.

எப்பொழுதுமே ஒர் பெரிய உச்சத்தின் அருகே ஒர் டவுன் இருக்கும். ஆனால் இந்த சார்ட்டில் பாருங்கள், டவுன் இல்லை.ஆகையால் நான் மற்றொரு அப் இருக்கும் என நம்புகிறேன். அதே நேரத்தில் மார்க்கெட் சரியான டவுனைக் கொடுக்காமல் திரும்பியதும் நினைவிருக்கலாம். ஆகையால், பலர் எதிர் திசையில் மாட்டியிருக்கிறார்கள் என்று கருதலாமா? என்று தெரியவில்லை. ஆனால் உறுதியாக 1.3650 ஐ ரெசிஸ்டன்சாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று நம்பலாம்.

ஆகையால் மார்க்கெட் மற்றொரு அப் கொடுக்க பெரும்பான்மையான வாய்ப்புகள் இருக்கிறது. ஏற வாய்ப்பிருக்கிறது என்பதற்காக ஏற்றத்தோடு செல்லக்கூடிய இடத்தில் மார்க்கெட் இல்லை. இறக்கத்தோடு செல்ல வேண்டிய இடத்தில் தான் இருக்கிறது. ஆகையால் ஏற்றத்தில் விற்பதே நல்லது.

மேலும், மற்றொன்றினையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்த வாரத்தில் திடீரென 250 பைப்ஸ் ஒரே திசையில் சென்று அமர்ந்துள்ளது. இது மார்க்கெட்டில் மாதத்தில் ஒர் நாள் நடப்பதுதான். இந்த நேரத்தில் தான் பலர் பணத்தினை இழப்பதுண்டு. ஆனால், இது இழப்பதற்கான வாய்ப்பாக நாம் விடக்கூடாது. அதற்கு நாம் பார்க்க வேண்டிய ஒன்று, மார்க்கெட் ரிப்போர்ட்.

ஒரே நாளில் 250 பைப்ஸ் அப் சென்றாலும், நமது 23 வார கால மார்க்கெட் ரிப்போர்ட்டில், அதாவது 161 நாட்களின் மாற்றம் என்பது வெறும் +453 பைப்ஸ் தான். இதில் நஷ்டம் அடைந்தாலும் -453 பிப்ஸ் தான் இருக்க வேண்டும், அதற்கு மேல் செல்கிறது என்றால் நமது தவறு. இதனை மனதில் வைத்துக் கொண்டு சரியாக ட்ரேடு செய்தால் நஷ்டம் என்பது வராது, ஏனெனில் இழப்பிற்கான வாய்ப்பு 453 பிப்ஸ் கொடுத்தாலும் இலாபம் என்பது 1600 பிப்ஸ் முதல் 8000+ பிப்ஸ் வரை வாய்ப்பிருக்கிறது. ஆகையால், நஷ்டத்திற்கு தடைபோட்டு, இலாபத்திற்கு வழிவிட்டால் வெற்றி நம்மைத் தேடி வரும்.


Home Based Small Business Forex Trading Tips in Tamil
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”