Tamil Forex Trading Tricks - News Fade Startegy Tips

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Tamil Forex Trading Tricks - News Fade Startegy Tips

Post by ஆதித்தன் » Sat Sep 14, 2013 7:55 pm

Forex Market Report > September 9/13

மார்கெட் தொடங்கியது = 1.3178

மார்கெட் முடிவுற்றது = 1.3293 (அதாவது 112 பைப்ஸ் காளை கெயின் பண்ணியிருக்கிறது)


வாரத்தின் உச்சம் = 1.3324

வாரத்தின் மட்டம் = 1.3178

வாரத்தின் ஏற்ற இறக்கம் = 145 pips

வாரத்தின் மாற்றம் = +112 பைப்ஸ் (இந்த வார விளையாட்டின் வெற்றியாளர், காளை)

இருபத்தியிரண்டு வாரங்களின் மாற்றம் = +181 பைப்ஸ்
மார்க்கெட் அவ்வப் பொழுது சிறிய மாற்றங்களை கொடுத்துக் கொண்டே இருக்கும். இப்படித்தான் செல்லும் என்று நம்மால் சொல்லவே முடியாது என்றாலும், சில வாய்ப்புகள் உறுதியாக கண்ணுக்குள் தெரியும், அதனை மட்டும் சரியாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டுமுறை மார்க்கெட் 1.2800 என்றப் புள்ளியினை பாட்டமாகக் கொண்டு இறங்கி எழும்பியது. ஆனால், இந்தமுறை 1.3100 அருகே சென்றுவிட்டு திரும்பி ரெசிஸ்டன்ஸ் ஏரியா நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

தற்பொழுது அடுத்தடுத்து ரெசிஸ்டன்ஸ் பாயிண்டினை அமைத்திருக்கும் புள்ளியான 1.3324 என்றப் புள்ளி ஒர் தடை நிலைப் புள்ளியாக பிப்பனாச்சி முறையில் தெரிகிறது. இதனை உடைத்துச் செல்லும் பொழுது மீண்டும் 1.3400 என்ற நிலையை எட்டும் என்பதுதான் பலரது கணிப்பு. டாலர் தன் கால வலுவினை இழந்து நிற்கிறது என்றுதான் நினைக்கிறேன் ஆகையால் மேல் பக்கம் செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Forex News Fade Tricks

Forex Trading செய்வோர் பலவிதமான Strategy/வியூகத்தினை பயன்படுத்துகின்றனர். அதில் News Fade Strategy அடிப்படையான & பலரும் பயன்படுத்தும் எளிமையான ட்ரிக்ஸ்.

இந்த ட்ரிக்ஸினை தினம் ஒர்முறைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான நேரத்தினை தினமும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக பாரக்ஸ் காலண்டரில் மூன்று சிவப்பு காளை உள்ள நேரத்தில் வெளியாகும் டேட்டா நியூஸ் மூலம் ஒர் மார்க்கெட் ஸ்டிக் கொஞ்சம் நீளமாக அமையும். அந்த நேரத்தில் 5minute சார்ட்டினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டேட்டா ரிலீஸ் ஆகும் நேரத்திலிருந்து மூன்று கேண்டில் ஸ்டிக் செல்லும் திசைக்கு எதிர் திசையில் அதன் உச்சத்தில் ஆர்டர் செய்வதன் மூலம் விரைவாக இலாபத்துடன் திரும்பலாம்.

இதில் குறிப்பாக மாதம் ஒர்முறை, வாரத்தின் முதல் வெள்ளிக்கிழமை வெளியாகும் US Non Farm Payrolls என்ற டேட்டா ரிலீஸ் ஆகும் நேரம் மார்க்கெட் 100 பிப்ஸ்க்கும் மேலாக எதேனும் ஒர் திசைக்குச் செல்லும். அந்த நேரத்தினை கவனமாக வாட்ச் செய்து, 80 முதல் 100 பைப்ஸ் ஒர் திசையில் சென்றப் பின்னர் எதிர் திசையில் ஆர்டர் போடுவதன் மூலம் உறுதியாக 20 பைப்ஸ் இலாபம் பார்க்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”