Forex :முதலில் லாஸ் பண்ணுங்க...அப்புறம் பிராபிட் பார்க்கலாம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex :முதலில் லாஸ் பண்ணுங்க...அப்புறம் பிராபிட் பார்க்கலாம்

Post by ஆதித்தன் » Tue Jun 25, 2013 1:46 pm

பாரக்ஸ்/பங்குச் சந்தை என்றாலே ரிஸ்க் தான். ரிஸ்க்கைத்தான் இந்திய அரசும் சரி.. உலக நாடுகளும் சரி...தைரியமாக எதிர் கொண்டு வருகின்றன. அவ்வாறு நாமும் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்.

தக்காளி ரூ.90 ஆகிவிட்டது என்பதற்காக தக்காளியை மறந்துவிட்டோமா?
தங்கம் ரூ.26,000 சென்ற பொழுது தங்கம் விற்பனை இல்லாமல் போய்விட்டதா?
குடிக்கும் தண்ணீர் கூட விலை ஏற்றம் அடையும் பொழுது, போட்டியாய் விலை இறக்கம் நடப்பது காணவில்லையா?

விலை ஏற்றம் இறக்கம் என்பது எந்தத் திசையிலிருந்தோ ஒர் திசையில் நடக்கிறது. ஆனாலும், அதற்கான ஒர் எல்லை என்பது இல்லாமல் இல்லை...படிக்கட்டுகள் என்பது இல்லாமல் இல்லை. மூங்கில் கம்பினைக் கொண்டு திடீரென புதிய உச்சத்தினைத் தொட்டுவிட்டால், அப்படியே நிலைத்து நிற்க முடியாது, திரும்பவும் உடனே இறங்கித் தான் ஆக வேண்டும்.

அதே நேரத்தில் படிக்கட்டுகள் கட்டி மேல்வீடு கட்டி மெத்தை அமைப்பவர் சாவாகசமாக உறங்கி ரெஸ்ட் எடுப்பார். இப்படியான நிகழ்வுகள் உடனே நடக்குமா? அதற்கான கால அளவு தேவைப்படும் இல்லையா!

இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இது ஒரே நாளில் நடந்த நிகழ்வா? இல்லை பல வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக ஏறி... இன்று 1டாலர்= ரூ.60 என்ற நிலை அருகே வந்துவிட்டது. 2004 ஆண்டில் 1 டாலர் = ரூ.40 என்ற நிலை அருகே இருந்துள்ளது. கிட்டத்தட்ட பத்து வருடத்தின் பொருளாதர வளர்ச்சியால் தான் அமெரிக்கா இத்தகைய வளர்ச்சியினை எட்டியுள்ளது. இதைப்போல், நாமும் ஒரே நாளில் சட்டன் வளர்ச்சி பெற முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக செயல்பாடுகளை முன்னிறுத்தித்தான் டாலர்க்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பினை உயர்த்த முடியும்.
http://cdnx.tribalfusion.com/media/3728946/2111966.gif[/fi]
திடீரென ஏறும் எந்தவொரு விலையும், அதில் நிலை கொள்வதில்லை. சற்று நின்றாலும் பின், மூங்கில் கம்பினை கிடத்தித்தான் போட வேண்டும். அதாவது, தற்பொழுது பாரக்ஸ் ட்ரேடிங்கினை பயிற்சி கணக்கில் நீங்கள் செய்து கொண்டிருக்கலாம். அதில் உள்ள ஒவ்வொரு டைம் பிரேமிலும் நன்றாக உற்றுக் கவனியுங்கள். எந்தவொரு பெரிய ஸ்டிக் அருகிலேயேயும் அடுத்து தொடர்ந்த அதன் போக்கிலேயே செல்கிறதா? அல்லது அதன் எதிர்திசையில் அடுத்தக்கட்ட மார்க்கெட் ஸ்டிக் அமைகிறதா எனப் பாருங்கள்.

ஏறியிருந்தால், இறங்கும். இறங்கியிருந்தால் ஏறும். ஆனால், சிறிது சிறிதாக ஒர் கால இடைவெளியில் அமையும் உச்சம், அதைப்போல் சிறிது சிறிதாக ஒர் நல்ல கால இடைவெளியில் மட்டுமே திரும்பும்.

இவற்றையெல்லாம் உணர்வதற்கும்... எப்படி பணத்தினை இழக்கிறோம் என்பதனை கற்றுக் கொள்வதனையும் ஒரே நாளில் என்னைச் சொல்லச் சொன்னால் சொல்லிவிட்டுப் போய்விடுவேன். ஆனால், உங்களால் அதனைப் புரிந்து கொள்ள முடியுமா என்றால் முடியாது. ஆகையால், எவ்வளவு லாஸ் ஆக முடியுதோ அவ்ளவு லாசினை டொமோ கணக்கில் பெற்றுக் கொள்ளுங்கள்... 5000 டாலர் லாஸ் ஆனது என்றால், மற்றோரு 5000 டாலர் விருச்சுவல் மணி பெற்று மீண்டும் லாஸ் ஆகுங்கள்.. இப்படி எவ்வளவு லாஸ் ஆக முடியுமோ அவ்வளவு லாஸ் ஆகுங்கள். அப்படியே உங்களால் எப்படி லாஸ் முடிந்தது என்பதனை மட்டும் கண்டு கொள்ளுங்கள்... பின் தானாக அந்த தவறுகளைத் திருத்தி இலாபம் பெற்றுவிடலாம்.


ஆனால், லாஸ் பெறுவதற்கு கூட கற்றுக் கொண்டால் மட்டும் தான் முடியும் என்பதனை மார்க்கெட்டில் இறங்கியப் பின்னர் உணரலாம்.

பாரக்ஸ் ரிஸ்க்கானது என்றாலும், கற்றுவிட்டால் மிகவும் சுலபமாக இலாபம் பெறக்கூடிய ஒர் வருவாய் வாய்ப்பு... கற்றுக் கொள்ளுங்கள்... துணைக்கு நாங்கள் இருக்கிறோம்.
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: Forex :முதலில் லாஸ் பண்ணுங்க...அப்புறம் பிராபிட் பார்க்க

Post by poojakumar » Tue Jun 25, 2013 2:11 pm

சார் கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஒரு செல் ஆர்டர் போட்டேன்.
open price -1.31334
close price -1.31258 = profit 5.79

இதே போல நேற்று ஒரு
buy ஆர்டர் open price - 1.31067
close price - 1.31220
profit = 11.66
இதே போல ப்ரோபிட் வந்தா தான சார் ட்ரேடிங்க்ல ஒரு இன்ட்ரெஸ்ட் இருக்கும். லாஸ் ஆனா எப்படி தைரியமாக ரியல் அக்கௌன்ட் ஓபன் முடியும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex :முதலில் லாஸ் பண்ணுங்க...அப்புறம் பிராபிட் பார்க்க

Post by ஆதித்தன் » Tue Jun 25, 2013 5:18 pm

poojakumar wrote:சார் கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஒரு செல் ஆர்டர் போட்டேன்.
open price -1.31334
close price -1.31258 = profit 5.79

இதே போல நேற்று ஒரு
buy ஆர்டர் open price - 1.31067
close price - 1.31220
profit = 11.66
இதே போல ப்ரோபிட் வந்தா தான சார் ட்ரேடிங்க்ல ஒரு இன்ட்ரெஸ்ட் இருக்கும். லாஸ் ஆனா எப்படி தைரியமாக ரியல் அக்கௌன்ட் ஓபன் முடியும்.
:great: :great:

இப்பத்தான் என்னுடைய கற்றல் வழிக்கு வந்திருக்கிறீர்கள்.

நேற்று ஒர் ஆர்டர் போட்டு இலாபம் ... இன்று ஒர் ஆர்டர் போட்டு இலாபம் பார்த்துவிட்டீர்கள்.

ஆனால் நான் எனது ரியல் அக்கவுண்டில் நேற்றும் ஆர்டர் போடவில்லை... இன்றும் என்னும் போடவில்லை.

மாலை 6 மணிக்கு போடலாம் என நேற்று வாய்ப்பு கிடைக்காததால் தவிர்த்துவிட்டேன். ஆகையால் இப்பொழுது என்னை தயார் செய்ய வந்திருக்கிறேன்... மார்க்கெட் அமையும் விதத்தில் தான் இன்று நான் ஆர்டர் போடுவதும், போடாமல் இருப்பதும் இருக்கிறது.

மேல் உள்ள முதல் பதிவினைப் பாருங்கள்.. அதில் ஒர் சிறிய ட்ரிக்ஸ் இருக்கிறது. அதாவது எப்பொழுது மார்க்கெட் ஒர் மிகப்பெரிய குச்சியினை உருவாக்குகிறதோ ... அந்த குச்சியின் உயரத்தில் 30% கண்டிப்பாக கீழ் திரும்பும். அதாவது 100 பைப்ஸ் ஏறினால் 30 பைப்ஸ் டவுன் நிச்சயம். இந்த வாய்ப்பு நேற்று கிடைக்கவில்லை... இன்று கிடைக்கும் என நம்பியிருக்கிறேன்... வாய்ப்பு கிடைத்தால் ஆர்டர் போட்டு இலாபத்தினை அடைவேன் இல்லாவிடில்... தவிர்த்துவிட்டு, நாளைய வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டியதுதான். காரணம் என்னிடம் இருப்பது மிகக் குறைந்த ரிஸ்க் தொகை.

நீங்கள் தைரியமாக 20 பைப்ஸ் மார்க்கெட்டில் ஆர்டர் போட்டு இலாபம் பார்த்துவிட்டீர்கள்...

ஆனால் 1.3100 என்றப் புள்ளி ரெசிஸ்டன்ஸ் லைனா? அல்லது சப்போர்ட் லைனா? என்று பார்க்கையில் எனக்கு இது ஒர் இரண்டு கெட்டானாகவே தெரிகிறது. 100 பைப்ஸ்க்கு வாய்ப்புள்ள பகுதியில் 10 பைப்ஸ் பெறுவது சுலபம்... 20 பைப்ஸ் இடத்தில் எனது ரியல் மணியினை போட்டு ரிஸ்க் எடுக்க நான் தயாராக இல்லை.

அதே நேரத்தில் நான் எனது ட்ரேடிங்க் திறனை வளர்த்துக் கொள்ள, டொமோ அக்கவுண்டில் 3 ஆர்டர் போட்டு இலாபம் பார்த்தேன். ஆனால் 4வது ஆர்டர் நெகட்டிவ் சென்று என்னும் ஆடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் நாம் தொடர்ச்சியாக ஆர்டர் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது... மார்க்கெட் டைம் ப்ரேமினைப் பார்க்க மறந்துவிடுகிறோம்.. அதில் ஏற்படும் சிறிய மாற்றம்.. நம்மை கவிழ்த்துவிடுகிறது. ஆகையால் எப்பொழுதுமே ஒர் வியூகம் வகுக்கிறோம் என்றால் அந்த ஒர் ஆர்டரோடு வெளியேறிவிட வேண்டும் என்பதனை மீண்டும் எனக்கு உணர்த்துகிறது.

அதே நேரத்தில் நெகட்டிவ் சென்ற ஆர்டரினை க்லோஸ் செய்யமாட்டேன்... காரணம்... EUR/USD கடந்த 10 வார மார்க்கெட் வாட்சிங்கில் எத்தனை பெரிய இறக்கம் கொடுத்தாலும் ஏற்றம் கொடுத்தாலும் கடைசியாக ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டது. ஆகையால், மார்க்கெட் நான் போட்ட இடத்துக்கே வரும் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது.. அதற்கு எதிர்பதமான நிலை உச்சம் செல்லும் வரை தாங்கிக் கொள்ள டொமோ அக்கவுண்டில் நிறையப் பணம் இருக்கிறது.

ஆனால், ரியல் அக்கவுண்டில் அவ்ள பணம் இல்லையே!!!!! ஆகையால், மார்க்கெட் எத்தனை பாசிட்டிவாகச் செல்லும் என்பதனை விட, எவ்வளவு நெகட்டிவ் செல்லும்... அந்த அளவுக்கு ரிஸ்க் தொகை நம்மிடம் பேலன்ஸ் இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். அந்த ரிஸ்க் தொகை குறைந்து ஒர் 25% லெவலுக்குள் இருக்கும் பொழுது மட்டுமே ஆர்டர் போட வேண்டும்.

EUR/USD ரெசிஸ்டன்ஸ் லைன் 1.3400 ... சப்போர்ட் லைன் 1.2750 .

தற்பொழுது நீங்கள் ஆர்டர் தேர்வு செய்திருக்கும் புள்ளி இரண்டுக்கும் நடுவில் 1.3100...

மார்க்கெட் திசை டவுன்.

குறுகிய கால ட்ரேடிங்கினை ஸ்கால்பிங்க் என்று சொல்வார்கள். அவ்வாறு ஸ்கால்பிங்க் செய்யும் பொழுது கூட மார்க்கெட் திசையோடுதான் நாம் செல்ல வேண்டும்.. அதாவது எப்பொழுதெல்லாம் சிறிய உச்சம் காணுகிறதோ அப்பொழுது எல்லாம் செல் ஆர்டர் போட வேண்டும்.

நான் நேற்று டொமோவில் செல் ஆர்டராக தேர்வு செய்து மூன்று முறை இலாபம் பார்த்தேன்... அதன் கடைசி செல் ஆர்டர் தான் என்னும் 15 பைப்ஸ் நெகட்டிவில் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கண்டிப்பாக பிராபிட் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆர்டரினை ரன் செய்து கொண்டிருக்கிறேன்.

இப்படி டொமோ அக்கவுண்டில் நமக்கான வியூகத்தினை அவ்வப் பொழுது பரிசோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது திறன் வளரும். அதில் எது அதிக வெற்றி தருகிறதோ, அதனை நம் ரியல் அக்கவுண்டில் செயல்படுத்த வேண்டும். அதற்காக இரண்டு முறை இலாபம் பார்த்தேன் என்று அதே நேரத்தில் போடாதீர்கள்... அப்படி வந்தால் மேல் நடந்தது போல நடந்துவிடும். நான் சொல்வது வெற்றிக்கு என்ன வியூகம் வகுத்தீர்களோ, அந்த வியூகத்தினை அடுத்துமுறை வகுத்துக் கொள்ளுங்கள்.

மேலும், இப்பொழுது நீங்கள் வெற்றி பெற்றதனை மகிழ்ச்சியாக எங்களிடம் சொல்கிறீர்கள். ஆனால் தோல்வி பெற்றால் சொல்ல முடியுமா? அதைப்போல் தான். நாம் ஒர் திட்டம் தீட்டி இவ்வாறு நடக்கும் என்று பிறரிடம் சொன்னால் நடக்க வேண்டும்.. நடக்காவிட்டால் பெரிய ஏமாற்றமாக, அவமானமாக நாம் உணர்வோம் இல்லையா!!! இந்த உணர்வு தான் நம்மை சரியாக வியூகம் வகுக்க நம்மை ஊக்கிவிக்கும்.

நான் சும்மா சும்மா ஆர்டர் போட்டு காணும் வெற்றியினை விட.... படுகை.காம், இப்படித்தான் நடக்கும் என்று சொல்லிவிட்டு போடும் ஆர்டர்கள் அதிக வெற்றிகளை கொடுத்துள்ளன. ஏனெனில் இது நடக்க வேண்டும் என்று அதிக அக்கறையுடன் மார்க்கெட்டினை அனலைசிஸ் செய்கிறேன். இல்லை என்றால் அவமானம் இல்லையா? ஆகையால் சொல்வதெல்லாம் நடக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் மனதினை கஷ்டப்படுத்துகிறேன்.


ஆகையால் தான் உங்களிடமும் சொல்கிறேன்... ஆர்டர் போடுவதற்கு முன்னே இங்கு பதிவில் சொல்லிவிடுங்கள்... இப்படித்தான் ஆர்டர் போடப் போகிறேன்... இது எனக்கு வெற்றியினைக் கொடுக்கும் என்று... அப்பொழுது நமது மன உறுதி அதிகரிக்கும்.. இந்த மன உறுதி பயிற்சி தான் நம்மை ரியல் அக்கவுண்டில் வெற்றியடைய வைக்கும்.

மேலும், மார்க்கெட் சார்ட்டில் ட்ரெண்ட் லைன் போட்டு ஸ்கிரின் சாட் எடுத்துப் போட கற்றுக் கொள்ளுங்கள்...

தினம் வெற்றிகளைக் குவிக்க :ros:
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”