Forex Trading Training in Tamil என்ற தலைப்பினை கையில் எடுத்து... எனது பணியினை கடந்த ஒர் மாத காலமாகச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறேன்.... அடுத்த இரண்டு மாத காலத்திற்குள் பயிற்சிக்குத் தேவையான அனைத்துப் பதிவுகளும் விடியோக்களும் அப்லோடிங்க் செய்துவிடுவேன். இத்தகைய பயிற்சியினை நீங்கள் குறைவான கட்டணமாகிய ரூ.1500 பெற வாய்ப்பே இல்லை. அதுமட்டும் அல்லாமல், நீங்கள் பெற்றுக் கொள்ளும் இந்த பாடத்தின் உதவிகள் மூலம் சம்பாதிக்க இருப்பது பல இலட்சம்.... கோடி... ஆகையால், ட்ரேடிங்க் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக கோல்டு மெம்பராக இணைந்து கொள்ளுங்கள்... உங்களது தினம் தினம் பல புதிய கற்றல்களை படுகை வழியாக பெற்றுக் கொள்ளலாம்.
ட்ரேடிங்க் செய்ய பல இண்டிகேட்டர் வழங்கப்படுகின்றன. ஆனால், அவற்றினைக் கொண்டு வெற்றி கொண்டோர் நிறைவாக அமைந்துவிட்டால்... மார்க்கெட்டில் தோல்வி என்பதே இருக்காது. அதாவது எத்தனை இண்டிகேட்டர்கள் வந்தாலும், போதிய பயிற்சியும் அனுபவம் தான் ஒருவனை வெற்றியாளனாக மாற்றுகிறதே தவிர... எந்தவொரு மெசினும் அவனை சாதனையாளனாக மாற்றிவிடுவதில்லை. அதன்படி, நீங்களாக போரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய ஒர் புதிய Strategy உருவாக்கம் செய்து அதன் படி செயல்படுவதுதான் ட்ரேடிங்கிற்கு மிகவும் நல்லது. ஏனெனில் ஒவ்வொருவரின் மன அலைகளும் வித்தியாசப்படும். அந்த வகையில் என்னுடைய மன அலைகளுக்கு நான் சொல்லும் ஒர் பரிந்துரையை, தங்களால் செயல்படுத்த முடியாது போகலாம். அதாவது நான் சொல்லிய ஒர் சிக்னல் நெகட்டிவ் சென்றால்.. அதனை எதிர் கொள்ளும் திறன் உங்களிடம் இருக்க வேண்டும். அதைத்தான் நான் எதிர் பார்க்கிறேன்.. அதற்காகவே உங்களையும் ஒர் Trading Expert/Adviser லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக, எப்படியெல்லாம் எளிமையாக ட்ரேடிங்க் வியூகம் வகுக்கலாம் என்பதனை கற்றுக் கொடுக்கிறேன்.. இதனை நீங்கள் புரிந்து கொண்டு என்னோடு சேர்ந்து வந்தால் ஒரே மாதத்தில் வெற்றியாளர் அளவுக்கு நம்மை தயார் செய்து கொள்ளலாம்.
தங்களுக்கு மார்க்கெட் ட்ரெண்ட் லைன் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதனைப் பற்றிய பாடத்தினை படத்துடன் விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன்... அதனை பார்க்க லிங்க் >
viewtopic.php?f=50&t=6253
ஒர் வாரமாகவே EUR/USD 1.3400 என்றப் புள்ளியிலிருந்து கீழே இறங்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்... அதற்கான காரணம் என்ன? மேல் உள்ள படத்தினைப் பாருங்கள். முதல் அப் ட்ரெண்ட் லனை உடைத்து கீழே இறங்க ஆரம்பித்து... பின் மீண்டும் ஒர் அப்ட்ரெண்ட் காண்பித்தாலும், அதனுடைய இறக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. முந்தைய ஏற்றத்தினை விட ஏற்றமும் இல்லை. நடுவில் ஒர் நீண்ட லைன் காணப்படுகிறது... அதாவது Bollinger Band-இல் பார்த்தால் ஒர் வலிமையான இறுக்கம். இந்த இறுக்கத்தின் பொழுது மார்க்கெட் எங்காவது ஒர் திசையினை நோக்கி வெடித்துச் செல்லும் என சொல்லியிருக்கிறேன். அதன்படியான ஒர் நீண்ட இறக்கத்தினை மார்க்கெட் அமைத்துவிட்டது.
ஏன்? இறங்குவதற்கு பதில் ஏறியிருக்கலாம் அல்லவா? என்று கேட்கலாம்... ஆம் ஏறவும் ஒர் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் மார்க்கெட் எதிர்பார்க்கப்பட்ட ரெசிஸ்டன்ஸ் லைனைத் தாண்டி 1.3415+ ரெசிஸ்டன்ஸ் அமைத்திருக்கிறது. ஆகையால் இதன் அடுத்தக்கட்ட ரெசிஸ்டன்ஸ் பாயின்ட் 1.3700 வரை நீள்கிறது.
முன் பார்க்கும் நாம் கொஞ்சம் பின்னேயும் பார்க்க வேண்டும். அதுதான் மிக முக்கியம். அடுத்தப் படத்தினைப் பாருங்கள்.
இந்தப் படம் மேல் உள்ள படத்தினை காட்டிலும் கொஞ்சம் நீண்ட நாட்களைக் கொண்டது. இதில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் மார்க்கெட் ஒர் நீண்ட அப்ட்ரெண்ட் கொடுத்திருப்பதனை முழுமையாக பார்க்க முடிகிறது. ஏற்றம் இறக்கம் நிறைந்ததே மார்க்கெட்... அப்படியான மார்க்கெட் இந்த நீண்ட ஏற்றத்திற்கு ஒர் இறக்கம் கொடுக்காமல் மேல் செல்லாது என்ற ஒர் கணிப்புதான்... அதிகப்படியான வாய்ப்பாக இறக்கத்திற்கும்... குறைந்த வாய்ப்பான ஸ்டாப் லாசை மேல் திசைக்கும் கொடுத்து.... செல் ஆர்டர் தேர்வு செய்து வந்தோம்.
நான் கடந்த பதிவில் ஒர் இரண்டு முக்கியப் புள்ளிகளைச் சொன்னேன்... அதாவது 1.3176 என்றப் புள்ளியினை உடைத்து கீழ் செல்லலாம். அல்லது 1.3276 என்றப் புள்ளியினை உடைத்து மேல் செல்லலாம் என்பது. ஆனால் மார்க்கெட் இரண்டு புள்ளிகளையும் உடைக்காமல் நடுவில் அமைந்துவிட்டது.. காரணம் அன்றைய மார்க்கெட் டேட்டா போதிய வீரியம் இல்லாது என்பதனை விட, நான் எதாவது ஒர் 100% நிறைவு பெற்ற பிரமிட் கால அளவினை கணக்கில் கொள்ளாமல் தவற விட்டிருக்கலாம். என்னும் சுருக்கமாகச் சொன்னால், இந்த நேரத்தில் இவ்வளவு பைப்ஸ் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதனை தெரிந்து கொண்டு அது எப்படி அமையும் என்பதனை Technical Analysis மூலம் தான் வகுக்க வேண்டும்.
அப்படியில்லாமல் 6 மணிக்கு ஒர் 100 பைப்ஸ் டேட்டா வெளி வருவது தெரியாமல் ... நீங்கள் 20 பைப்ஸ் மார்க்கெட்டில் ஒர் வியூகம் வகுத்து ஆர்டர் போட்டால்... மேல்/கீழ் என ஏதோ ஒன்று நடந்துவிடும். அதற்காக... நீங்கள் எப்பொழுதுமே மார்க்கெட்டினை 300 பைப்ஸ் கால்குலேசனில் போட வேண்டும்.
ஒகே... இப்போ மார்க்கெட் ஒர் நடுநிலைக்கு வந்துவிட்டது. அடுத்து மார்க்கெட் மேல் செல்லுமா? கீழ் செல்லுமா? ஏனெனில், தற்போதைய இறக்கம் என்பது ஏற்றத்திற்கான இறக்கம் என்ற ஒர் பார்வையும் இருக்கிறது.. அந்த இறக்கத்தின் பொழுது ஒர் பிட் உடைத்திருக்கிறது என்பது இருக்கிறது. ஆகையால் மார்க்கெட் இறங்கவும் வாய்ப்பிருக்கிறது... தனது ஏற்றத்தினை தொடரவும் வாய்ப்பிருக்கிறது.
ஆகையால் அடுத்து என்ன நடக்கலாம்... எதனால் அந்த வாய்ப்பு... என்பதனை நீங்களும் சொல்லுங்கள்...
தங்கம்... தங்கம் 2008 ஆண்டில் 700.00 லிருந்து ஒர் நீண்ட ஏற்றத்தினைக் கொடுத்து 2011 ஆம் ஆண்டில் 1900.00 என்ற விலையில் ஒர் ரெசிஸ்டன்ஸ் அமைத்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால்.... நாம் இப்போ பார்த்துக் கொண்டிருப்பது 1200 - 1450 வரையிலான விலை தான். ஆனால் மார்க்கெட் நிலவரம் என்பது எப்படியெல்லாம் இருந்தது பின்னோக்கி பார்த்தும்... தற்போதைய நாட்டு நிலவரம் பார்த்துதான் அடுத்தக்கட்ட விலை பார்க்க வேண்டும். இதன் ஏற்றம் என்பது போய் கொண்டே இருக்கலாம், மக்கள் என்னும் ஆர்வத்துடன் வாங்கும் பொழுது. இல்லை, மக்கள் தூக்கி ஏறிய ஆரம்பித்துவிட்டால்... விலையற்று மார்க்கெட்டிலிருந்து தூக்கவும் செய்யலாம்... ஸோ infinity என்பது 0 வைத் தாண்டி கீழ் இல்லை ... மேல் என்பது மக்களின் பொருளாதர நிலைக்குத் தகுந்தவாறு சென்று கொண்டே இருக்கும்.. இது அன்றாட வாழ்க்கையோடு சேர்ந்தது.. மார்க்கெட் திடீரென நம்மை முழுமையாக சாப்பிட்டுவிடாது. ஆனால் ஒவ்வொரு நாள் மாற்றம் என்பது அதிகப்பட்சம் 300 பைப்ஸ். ஆகையால் 500 பைப்ஸ் ஈக்குவிட்டியுடன், சரியான ரெசிஸ்டன்ஸ்/பாட்டம் லைனில் உள்ளே இறங்குங்கள் என்று சொல்கிறேன்.
தற்போதைய மார்க்கெட் நிலவரத்திற்கு 1200 உடைக்கும் பொழுது 1100-இல் ஒர் பாட்டம் இருக்கிறது. இதில் மார்க்கெட் ஒர் நீண்ட ரெஸ்ட் எடுத்து மேல் அல்லது கீழ் நோக்கிச் செல்லும்...