Forex EUR/USD - அடுத்து நடக்கப்போவது என்ன? நீங்களும் சொல்லுங்கள்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex EUR/USD - அடுத்து நடக்கப்போவது என்ன? நீங்களும் சொல்லுங்கள்

Post by ஆதித்தன் » Wed Jun 19, 2013 3:02 pm

ட்ரேடிங்க் விருப்பம் உள்ள அனைவரும் கண்டிப்பாக அடுத்து நடக்கப் போவது என்ன என்று தங்களது கருத்துகளை இப்பதிவில் பின்னூட்டமாகச் சொல்லி தினமும் கலந்து கொள்ளுங்கள்.

உங்களது எண்ணத்தினை வெளியில் சொல்லும் பொழுது, அது உண்மையாக வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிப்பதோடு ... உறுதியாக இது நடக்கும் என்ற வகையில் மட்டுமே சொல்ல வேண்டும் என்ற அளவிற்கு மனம் கொஞ்சம் செயல்படும். இவ்வாறு நம்மை மனதளவில் பிறரோடு செயல்பட வைக்கும் பொழுது கொஞ்சம் அலைகளுக்கு மத்தியில் இலக்குகளை கவனிக்க முடியும்.

======================================================

EUR/USD கரன்சி 1.3400 என்ற நிலையிலிருந்து அடுத்தக்கட்டமாக 1.3380 என்ற நிலைக்குச் செல்லும். என்று சொல்லியிருந்தேன்... அதற்குத் தகுந்தாற்போல் மார்க்கெட் இரண்டு முறை 1.3400 என்ற நிலையிலிருந்து கீழ் நோக்கிச் சென்று 1.3385 என்ற நிலைக்குச் சென்றாலும் டார்கெட் லைனைத் தொடவில்லை. கொஞ்சம் உஷாராக ப்ராபிட் கிடைத்ததும் வெளியேறுபவர்களுக்கு இது உகந்ததாக அமைந்திருக்கும்.

தற்போதைய ட்ரெண்ட் பேட்டர்ன் பார்க்கும் பொழுது 1.3410 என்றப் புள்ளியில் டபுள் ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் அமைந்திருக்கிறதே. அதே நேரத்தில் 1.3385 என்றப் புள்ளியில் ஒர் பாட்டம் லைன் காணப்படுகிறது. இந்தப் பாட்டம் லைனையும், ரெசிஸ்டன்ஸ் லைனையும் கொண்டு பின்னோக்கிப் பார்த்தால் ஒர் பெரிய வெட்ட வெளி கீழ் நோக்கிக் காணப்படுகிறது.

ஆகையால் மார்க்கெட் தற்போதைய நிலையான 1.3895 1.3395 என்ற நிலையிலிருந்து கீழ் நோக்கிச் சாட பெரிதும் வாய்ப்பிருக்கிறது. இதன் இறக்கம் 1.3353 என்ற லைனை முதல் டார்க்கெட்டாக கொண்டிருக்கும் என எதிர்பார்க்கிறேன்.


மற்றொரு முக்கியமான விடயம் இன்று இரவு 11.30 அளவில் அமெரிக்க மத்திய வங்கியான FED தனது Interest Rate அறிவிக்க இருக்கிறது. பழைய ரேட்டிலிருந்து மாற்றம் இருக்காது என்றாலும், இதே நேரத்தில் மற்ற இரண்டு High Volatility டேட்டாவும் வெளியாகுகிறது. ஆகையால், இரவு 12 மணிக்கு மார்க்கெட் எந்த நிலையில் இருக்கும் என்று நீங்கள் சொல்லுங்கள் ... என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.


ட்ரேடிங்க் விருப்பம் உள்ள அனைவரும் கண்டிப்பாக இப்பதிவில் தினமும் கலந்து கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Thu Jun 20, 2013 1:24 am

Trading செய்ய வேண்டும் என்ற ஆசையும்... அதிகம் பணம் சம்பாதித்துவிடலாம் என்ற வெறியும் இருந்தால் மட்டும் போதாது. சரியாக ட்ரேடிங்க் செய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்காக உங்களுக்கு ஒர் இலவச ட்ரேடிங்க் அக்கவுண்டும் கொடுத்து, துணையாக அனைத்துவித வியூகமும் தங்களுக்கு வகுக்கச் சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைத்தால்... இதனையும் பார்த்து படித்துவிட்டுச் சென்றால்... கண்டிப்பாக ட்ரேடிங்க் தங்களுக்கு கொஞ்சம் பாவற்காய் தான். அதாவது ட்ரேடிங்க் செய்யத் தெரிந்தவர்கள் பலனாய் இலாபம் பார்ப்பார்கள்... ட்ரேடிங்க் செய்ய ஆசைபடுபவர்கள் கசக்குதே என்று துப்பிவிட்டு/நஷ்டத்துடன் செல்வர்.

ஆகையால், ட்ரேடிங்க் செய்து சம்பாதிக்கலாம் என எண்ணம் கொண்டவர்கள் கண்டிப்பாக இப்பகுதியில் தங்களது ஆர்டர் வியூகங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டு ஒர் மாதம் பயிற்சி எடுங்கள். கண்டிப்பாக வெற்றியடையலாம்.

அதிலும் மார்க்கெட் மூவ்மெண்ட் ட்ரிக்ஸ் என்பது வெறும் பத்தே பத்து மட்டும் தான். நாம் பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்தில் கூட நிறைய பார்முலா படித்திருப்போம்... ஆனால் இங்கு ஒர் 10 பேட்டர்ன் டிரிக்ஸ் கற்றுக் கொண்டு, விவேகமாகச் செயல்பட்டால் கை நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

எவராலும் மார்க்கெட்டினை 100% உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும்... ஒர் சில இலாபக் கணக்குகளை எளிதாக வகுக்க முடியும். அப்படியான இலாபத்திற்கு நாம் கொஞ்சம் பொறுமையாக காத்திருந்து ஆர்டர் இட்டால் போதும்.

==============================================================================

அமெரிக்க மத்திய வங்கியிலிருந்து வெளியாகும் செய்தி நேரத்தில் அதிகப்படியான மூவ்மெண்ட் பாரக்ஸ் மார்க்கெட்டில் இருக்கும் என்று ஏற்கனவே தங்களிடம் சொல்லிவிட்டுச் சென்றேன். அதைப்போல் 11. 30 க்கு ஆரம்பித்த ஆட்டம் 12.30 வரை நீடித்தது.

EUR/USD நாம் நினைத்தது போலவே கீழ் நோக்கிச் சரிந்தது... 1.3353 என்ற ஒர் டார்க்கெட் பாயிண்டினை உறுதியாக எதிர்பார்த்தேன். மார்க்கெட் அதை எல்லாம் தாண்டி 1.3405 - இல் ஆரம்பித்த இறக்கம் 1.3260 என்ற நிலைவரை நீடித்தது. அதாவது 140 பைப்ஸ் 1 மணி நேரத்தில் சரிந்துவிட்டது. தற்போதைய நிலை 1.3275

Crude Oil விலையும் இந்த நேரத்தில் பெரிய ஆட்டத்தினைக் காண்பித்தது... ஆரம்பத்தில் மேல் நோக்கி எழும்பி 98.85 வரைச் சென்றாலும் அதே வேகத்தில் கீழ் நோக்கிச் சரிய ஆரம்பித்தது 97.80 வரை இறங்கி பின்னர் மேல் ஏற ஆரம்பித்துவிட்டது. தற்போதைய நிலை 98.20 (100 பைப்ஸ் Volatility)

தங்கம் விலையும் டாலரின் பாசிட்டிவ் ரிப்போர்ட்டால் பெரிதும் சரிந்து சென்றது. 1370.35 -இல் ஆரம்பித்த இறக்கம் என்னும் தொடர்ந்து இறங்கிக் கொண்டே இருக்கிறது... தற்போதையே நிலை 1349.05 .. அதாவது 200 பைப்ஸ் இறக்கம் கண்டுள்ளது.

இதில் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது... அமெரிக்க FED Bannk Interest Rate வெளியாகும் நேரம் ட்ரேடிங்க் செய்ய ஒர் நல்ல வாய்ப்பு கிடைக்கும். இதில் முதல் ஆரம்பம் செல்லும் திசைக்கு எதிராகத்தான் மார்க்கெட் திசை பெரும்பாலும் அமையும். ஆகையால் டேட்டா ரிலிஸ் ஆகும் நேரத்தில் முதல் கட்ட மூவ்மெண்ட் செல்லும் திசையிலிருந்து திரும்பி, அதன் மூவிங்க் பாயிண்டை உடைத்து எதிரில் செல்லும் பொழுது மார்க்கெட் நிலை பாசிட்டிவ்/நெகட்டிவ் என்பதனை உறுதிப்படுத்திக் கொண்டு நாம் ஆர்டரினை போட்டு விரைவாக வெளியேறிவிடலாம். இந்த விரைவான நேரத்திலேயே சுலபமாக 10 பைப்ஸ் இலாபம் பார்த்துவிடலாம். அதைப்போல், மார்க்கெட் ட்ரெண்ட் திசையில் அமைந்தால், கூடுதலாக இலாபம் பார்க்கவும் முடியும்.

இன்றைய மார்க்கெட் நிலை.... கடந்த மூன்று நாட்களாக ரெசிஸ்டன்ஸ் லைனிலேயே ஆட்டம் காண்பித்துக் கொண்டிருந்தால், எல்லாவற்றிற்கும் சேர்த்து மொத்தமாக டவுன் கொடுத்துவிட்டது.

தற்போதைய இறக்கத்திற்கு ஏற்றம் அமையும் என்பது தெரிந்தது தான். இதன் ஏற்றம் எதுவரை அமையும்.... எப்பொழுது திரும்பும் என்பதனை நாளை நீங்களும் பின்னூட்டமாகச் சொல்லுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Thu Jun 20, 2013 2:34 pm

மாலை 6 மணி : Continuing & Initial Jobless Claims

இன்று சரியாக மாலை 6 மணிக்கு அமெரிக்க நாட்டிலிருந்து Continuing & Initial Jobless Claims டேட்டா ரிலிஸ் ஆகிறது. இந்த நேரத்தில் மார்க்கெட் 150 பைப்ஸ் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். (Volatility)

ஆகையால் சுமார் 5.30 மணிக்கு மார்க்கெட் வாட்ச் செய்து, ஒர் வியூகம் வகுத்து.. சரியாக 6.05 க்கு ஆர்டர் தேர்வு செய்து 6.30 -க்கும் வெற்றியுடன் திரும்புங்கள்.

கடந்த தடவை இவை பாசிட்டிவாக அமைந்தன. இந்த முறை நெகட்டிவ்(அப்) எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய இறக்கத்திற்கு இன்றைய ஏற்றம் சரியாக அமையவில்லை.

தற்போதைய நிலையான 1.3210 என்ற புள்ளியிலிருந்து பார்க்கும் பொழுது நெகட்டிவ் ரெசிஸ்டன்ஸ் 1.3326 என்றப் புள்ளியிலும்... பாசிட்டிவ் பாட்டம் 1.3095 என்ற இடத்திலும் அமைந்துள்ளது.

அதாவது தற்போதைய நிலையிலிருந்து மாலை 5 மணிக்குள் அதிகப்பட்சமாக 20 பைப்ஸ் ஏற வாய்ப்பிருக்கிறது.. அப்படியான சூழலில் 1.3276 என்ற நிலையினைத் தொட்டுவிட்டே மார்க்கெட் கீழ் இறங்கும். ஆகையால் நாம் எதிர்பார்ப்பது டாலர் நெகட்டிவ் என்பதால் மேல் நோக்கிச் செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது என்றாலும்...

1.3276 என்ற புள்ளியினை உடைத்து மேல் ஏறுவது அல்லது 1.3176 என்றப் புள்ளியினை உடைத்து கீழ் செல்வது ஆகிய இரண்டில் ஒன்றினை வாய்ப்பாகக் கருதி ... 5.30 மணியிளவில் இருக்கும் மார்க்கெட் நிலைக்குத் தகுந்தவாறு வியூகம் வகுத்து வெற்றி பெறுங்கள்.


குறிப்பாக ஆரம்ப மூவிங்கிற்கு எதிர் திசையில் டேட்டா திசை அமையும் என்பதனை மனதில் வைத்துக் கொண்டு... சட்டென முடிவெடிக்க வேண்டிய சூழல் அமைந்தாலும் விவேகமாக முடிவெடுங்கள். அதாவது வேகமாக கீழ் இறங்குவது போல் 1.3176 வரைச் சென்றுவிட்டு மேல் எழும்பி உச்சம் அடைந்துவிடலாம்.... அல்லது மேல் செல்வது போல் போக்கு காண்பித்து... தரைக்கு சென்றுவிடலாம்... ஆகையால், நடுப்பட்ட ஆட்டத்தினை வேடிக்கைப் பார்த்து.. உடைத்துச் செல்லும் நிலையில் ஆர்டர் போடுவதும்...

இரட்டை வாய்ப்பாக சரியாக 6 மணிக்கு மேலும் 10 பைப்ஸ் கீழும் 10 பைப்ஸ் என டேக் பிராபிட் போட்டு ஆட்டத்தோடு ஆட்டமாக நாமும் உடனே வெளியேறுவதோ.... எல்லாம் உங்களது பயிற்சியில் கை தேர்ந்து கொள்ளுங்கள்...

இப்படியான சரியான தருணங்களை பயன்படுத்தக் கற்றுக் கொண்டால்... ரேடிங்கில் நல்ல இலாபம் சம்பாதிக்கலாம்...

உங்களது வியூகம் எதுவானாலும் மாலை 5.30 க்குள் தீட்டி ... 6 மணிக்கு செயல்படுத்த தயாராக இருங்கள்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Thu Jun 20, 2013 6:14 pm

நாம் எதிர்பார்த்த ஜாப்லெஸ் டேட்டாவில் ஒன்று எதிர்பார்த்தது போல நெகட்டிவ், மற்றொன்று பாசிட்டிவ் ....

இரண்டும் டேலி ஆகி.. விலை ஏற்ற இறக்கம் படுத்துவிட்டது.

==================================================================

இனி அடுத்தக்கட்ட டேட்டா ரிலீஸ் அடுத்த சில மணி நேரத்தில் வரயிருக்கிறது. அதாவது 7.30-க்கு Existing Home Sales டேட்டா வரயிருக்கிறது. இது பாசிட்டிவாக எதிர்பார்க்கப்படுகிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Fri Jun 21, 2013 4:52 pm

Forex Trading Training in Tamil என்ற தலைப்பினை கையில் எடுத்து... எனது பணியினை கடந்த ஒர் மாத காலமாகச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறேன்.... அடுத்த இரண்டு மாத காலத்திற்குள் பயிற்சிக்குத் தேவையான அனைத்துப் பதிவுகளும் விடியோக்களும் அப்லோடிங்க் செய்துவிடுவேன். இத்தகைய பயிற்சியினை நீங்கள் குறைவான கட்டணமாகிய ரூ.1500 பெற வாய்ப்பே இல்லை. அதுமட்டும் அல்லாமல், நீங்கள் பெற்றுக் கொள்ளும் இந்த பாடத்தின் உதவிகள் மூலம் சம்பாதிக்க இருப்பது பல இலட்சம்.... கோடி... ஆகையால், ட்ரேடிங்க் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக கோல்டு மெம்பராக இணைந்து கொள்ளுங்கள்... உங்களது தினம் தினம் பல புதிய கற்றல்களை படுகை வழியாக பெற்றுக் கொள்ளலாம்.

ட்ரேடிங்க் செய்ய பல இண்டிகேட்டர் வழங்கப்படுகின்றன. ஆனால், அவற்றினைக் கொண்டு வெற்றி கொண்டோர் நிறைவாக அமைந்துவிட்டால்... மார்க்கெட்டில் தோல்வி என்பதே இருக்காது. அதாவது எத்தனை இண்டிகேட்டர்கள் வந்தாலும், போதிய பயிற்சியும் அனுபவம் தான் ஒருவனை வெற்றியாளனாக மாற்றுகிறதே தவிர... எந்தவொரு மெசினும் அவனை சாதனையாளனாக மாற்றிவிடுவதில்லை. அதன்படி, நீங்களாக போரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய ஒர் புதிய Strategy உருவாக்கம் செய்து அதன் படி செயல்படுவதுதான் ட்ரேடிங்கிற்கு மிகவும் நல்லது. ஏனெனில் ஒவ்வொருவரின் மன அலைகளும் வித்தியாசப்படும். அந்த வகையில் என்னுடைய மன அலைகளுக்கு நான் சொல்லும் ஒர் பரிந்துரையை, தங்களால் செயல்படுத்த முடியாது போகலாம். அதாவது நான் சொல்லிய ஒர் சிக்னல் நெகட்டிவ் சென்றால்.. அதனை எதிர் கொள்ளும் திறன் உங்களிடம் இருக்க வேண்டும். அதைத்தான் நான் எதிர் பார்க்கிறேன்.. அதற்காகவே உங்களையும் ஒர் Trading Expert/Adviser லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக, எப்படியெல்லாம் எளிமையாக ட்ரேடிங்க் வியூகம் வகுக்கலாம் என்பதனை கற்றுக் கொடுக்கிறேன்.. இதனை நீங்கள் புரிந்து கொண்டு என்னோடு சேர்ந்து வந்தால் ஒரே மாதத்தில் வெற்றியாளர் அளவுக்கு நம்மை தயார் செய்து கொள்ளலாம்.
தங்களுக்கு மார்க்கெட் ட்ரெண்ட் லைன் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதனைப் பற்றிய பாடத்தினை படத்துடன் விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன்... அதனை பார்க்க லிங்க் > viewtopic.php?f=50&t=6253

ஒர் வாரமாகவே EUR/USD 1.3400 என்றப் புள்ளியிலிருந்து கீழே இறங்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்... அதற்கான காரணம் என்ன? மேல் உள்ள படத்தினைப் பாருங்கள். முதல் அப் ட்ரெண்ட் லனை உடைத்து கீழே இறங்க ஆரம்பித்து... பின் மீண்டும் ஒர் அப்ட்ரெண்ட் காண்பித்தாலும், அதனுடைய இறக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. முந்தைய ஏற்றத்தினை விட ஏற்றமும் இல்லை. நடுவில் ஒர் நீண்ட லைன் காணப்படுகிறது... அதாவது Bollinger Band-இல் பார்த்தால் ஒர் வலிமையான இறுக்கம். இந்த இறுக்கத்தின் பொழுது மார்க்கெட் எங்காவது ஒர் திசையினை நோக்கி வெடித்துச் செல்லும் என சொல்லியிருக்கிறேன். அதன்படியான ஒர் நீண்ட இறக்கத்தினை மார்க்கெட் அமைத்துவிட்டது.

ஏன்? இறங்குவதற்கு பதில் ஏறியிருக்கலாம் அல்லவா? என்று கேட்கலாம்... ஆம் ஏறவும் ஒர் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் மார்க்கெட் எதிர்பார்க்கப்பட்ட ரெசிஸ்டன்ஸ் லைனைத் தாண்டி 1.3415+ ரெசிஸ்டன்ஸ் அமைத்திருக்கிறது. ஆகையால் இதன் அடுத்தக்கட்ட ரெசிஸ்டன்ஸ் பாயின்ட் 1.3700 வரை நீள்கிறது.

முன் பார்க்கும் நாம் கொஞ்சம் பின்னேயும் பார்க்க வேண்டும். அதுதான் மிக முக்கியம். அடுத்தப் படத்தினைப் பாருங்கள்.
இந்தப் படம் மேல் உள்ள படத்தினை காட்டிலும் கொஞ்சம் நீண்ட நாட்களைக் கொண்டது. இதில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் மார்க்கெட் ஒர் நீண்ட அப்ட்ரெண்ட் கொடுத்திருப்பதனை முழுமையாக பார்க்க முடிகிறது. ஏற்றம் இறக்கம் நிறைந்ததே மார்க்கெட்... அப்படியான மார்க்கெட் இந்த நீண்ட ஏற்றத்திற்கு ஒர் இறக்கம் கொடுக்காமல் மேல் செல்லாது என்ற ஒர் கணிப்புதான்... அதிகப்படியான வாய்ப்பாக இறக்கத்திற்கும்... குறைந்த வாய்ப்பான ஸ்டாப் லாசை மேல் திசைக்கும் கொடுத்து.... செல் ஆர்டர் தேர்வு செய்து வந்தோம்.

நான் கடந்த பதிவில் ஒர் இரண்டு முக்கியப் புள்ளிகளைச் சொன்னேன்... அதாவது 1.3176 என்றப் புள்ளியினை உடைத்து கீழ் செல்லலாம். அல்லது 1.3276 என்றப் புள்ளியினை உடைத்து மேல் செல்லலாம் என்பது. ஆனால் மார்க்கெட் இரண்டு புள்ளிகளையும் உடைக்காமல் நடுவில் அமைந்துவிட்டது.. காரணம் அன்றைய மார்க்கெட் டேட்டா போதிய வீரியம் இல்லாது என்பதனை விட, நான் எதாவது ஒர் 100% நிறைவு பெற்ற பிரமிட் கால அளவினை கணக்கில் கொள்ளாமல் தவற விட்டிருக்கலாம். என்னும் சுருக்கமாகச் சொன்னால், இந்த நேரத்தில் இவ்வளவு பைப்ஸ் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதனை தெரிந்து கொண்டு அது எப்படி அமையும் என்பதனை Technical Analysis மூலம் தான் வகுக்க வேண்டும்.

அப்படியில்லாமல் 6 மணிக்கு ஒர் 100 பைப்ஸ் டேட்டா வெளி வருவது தெரியாமல் ... நீங்கள் 20 பைப்ஸ் மார்க்கெட்டில் ஒர் வியூகம் வகுத்து ஆர்டர் போட்டால்... மேல்/கீழ் என ஏதோ ஒன்று நடந்துவிடும். அதற்காக... நீங்கள் எப்பொழுதுமே மார்க்கெட்டினை 300 பைப்ஸ் கால்குலேசனில் போட வேண்டும்.

ஒகே... இப்போ மார்க்கெட் ஒர் நடுநிலைக்கு வந்துவிட்டது. அடுத்து மார்க்கெட் மேல் செல்லுமா? கீழ் செல்லுமா? ஏனெனில், தற்போதைய இறக்கம் என்பது ஏற்றத்திற்கான இறக்கம் என்ற ஒர் பார்வையும் இருக்கிறது.. அந்த இறக்கத்தின் பொழுது ஒர் பிட் உடைத்திருக்கிறது என்பது இருக்கிறது. ஆகையால் மார்க்கெட் இறங்கவும் வாய்ப்பிருக்கிறது... தனது ஏற்றத்தினை தொடரவும் வாய்ப்பிருக்கிறது.

ஆகையால் அடுத்து என்ன நடக்கலாம்... எதனால் அந்த வாய்ப்பு... என்பதனை நீங்களும் சொல்லுங்கள்...

தங்கம்...
தங்கம் 2008 ஆண்டில் 700.00 லிருந்து ஒர் நீண்ட ஏற்றத்தினைக் கொடுத்து 2011 ஆம் ஆண்டில் 1900.00 என்ற விலையில் ஒர் ரெசிஸ்டன்ஸ் அமைத்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால்.... நாம் இப்போ பார்த்துக் கொண்டிருப்பது 1200 - 1450 வரையிலான விலை தான். ஆனால் மார்க்கெட் நிலவரம் என்பது எப்படியெல்லாம் இருந்தது பின்னோக்கி பார்த்தும்... தற்போதைய நாட்டு நிலவரம் பார்த்துதான் அடுத்தக்கட்ட விலை பார்க்க வேண்டும். இதன் ஏற்றம் என்பது போய் கொண்டே இருக்கலாம், மக்கள் என்னும் ஆர்வத்துடன் வாங்கும் பொழுது. இல்லை, மக்கள் தூக்கி ஏறிய ஆரம்பித்துவிட்டால்... விலையற்று மார்க்கெட்டிலிருந்து தூக்கவும் செய்யலாம்... ஸோ infinity என்பது 0 வைத் தாண்டி கீழ் இல்லை ... மேல் என்பது மக்களின் பொருளாதர நிலைக்குத் தகுந்தவாறு சென்று கொண்டே இருக்கும்.. இது அன்றாட வாழ்க்கையோடு சேர்ந்தது.. மார்க்கெட் திடீரென நம்மை முழுமையாக சாப்பிட்டுவிடாது. ஆனால் ஒவ்வொரு நாள் மாற்றம் என்பது அதிகப்பட்சம் 300 பைப்ஸ். ஆகையால் 500 பைப்ஸ் ஈக்குவிட்டியுடன், சரியான ரெசிஸ்டன்ஸ்/பாட்டம் லைனில் உள்ளே இறங்குங்கள் என்று சொல்கிறேன்.

தற்போதைய மார்க்கெட் நிலவரத்திற்கு 1200 உடைக்கும் பொழுது 1100-இல் ஒர் பாட்டம் இருக்கிறது. இதில் மார்க்கெட் ஒர் நீண்ட ரெஸ்ட் எடுத்து மேல் அல்லது கீழ் நோக்கிச் செல்லும்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Fri Jun 21, 2013 10:17 pm

EUR/USD Currency இன்று தனது நிதானமான இறக்கத்தின் மூலம் 90 பைப்ஸ் இறங்கி... 1.3100 என்ற விலைப்புள்ளிக்கு வந்துவிட்டது.

மார்க்கெட் 1.3400 என்ற நிலையிலிருந்து இரண்டு கட்டமாக 300 பைப்ஸ் டவுன் பெற்றுள்ளது. இதன் கீழ் நோக்கியப் பாதை தொடருமா? அல்லது திரும்புமா என்பதனை நீங்களும் சொல்ல வாய்ப்பாக அடுத்தக்கட்ட பயிற்சிப் பாடமாக பேட்டன் டிரிக்ஸ் சிக்னல் பற்றிய பாகத்தினை அடுத்த வாரத்தில் பார்க்கலாம். அதன் பின்னர், கண்டிப்பாக ட்ரேடிங்க் விருப்பம் உள்ளவர்கள், பேட்டர்ன் பயிற்சியாக தங்களது வியூக திட்டத்தினையும் சொல்ல வேண்டும். இதனை ஏன் சொல்கிறேன்... படுகையில் இதுவரை ட்ரேடிங்க் விருப்பம் உள்ளவர்களாக ஐந்து கோல்டு நபர்கள் சேர்ந்துவிட்டார்கள்... ஆனால் ஒருவர் கூட இப்பதிவில் பின்னூட்டம் கொடுக்கவில்லை... அதுதான் ஆச்சர்யம்... ஒகே.

தொடரட்டும் உங்கள் அமைதி... பயணிக்கட்டும் எனது கடமை....
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by poojakumar » Sat Jun 22, 2013 9:15 am

சார் எனக்கு ட்ரேடிங்க்இல் அ, ஆ ,இ, ஈ , கூட தெரியாது. நீங்க ட்ரேடிங்க்இல் பதிவிடும் ஒவ்வொரு பதிவையும் படித்து பார்த்து தான் தெரிந்து கொண்டுளேன்.
ஆனால் சிக்னல் பார்த்து வியூகம் அமைக்க இன்னும் தெரியவில்லை. தெரிந்த பிறகு அடுத்து நடக்கப் போவது என்னனு நானும் பதிவிடுகிறேன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Sat Jun 22, 2013 1:00 pm

poojakumar wrote:சார் எனக்கு ட்ரேடிங்க்இல் அ, ஆ ,இ, ஈ , கூட தெரியாது. நீங்க ட்ரேடிங்க்இல் பதிவிடும் ஒவ்வொரு பதிவையும் படித்து பார்த்து தான் தெரிந்து கொண்டுளேன்.
ஆனால் சிக்னல் பார்த்து வியூகம் அமைக்க இன்னும் தெரியவில்லை. தெரிந்த பிறகு அடுத்து நடக்கப் போவது என்னனு நானும் பதிவிடுகிறேன்
:ros: உங்களது பின்னூட்டத்தின் மூலம் எனக்கு என்னும் உற்சாகம் வந்துள்ளது.

ட்ரேடிங்கில் சிக்னல் பார்ப்பது என்பது எல்லாம் கொஞ்சம் அனுபவம் தான் வேண்டும். தினம் தினம் ஆர்டர் போடுங்கள்... அப்படி ஆர்டர் போடும் பொழுது ஏறும்/இறங்கும் என்று ஏதேனும் ஒன்றினை மனதினில் வைத்துக் கொண்டு தானே ஆர்டர் போடுவீர்கள்... அப்படி நீங்கள் எதனால் ஏறுகிறது என்று நினைத்தீர்கள்... எதனால் இறங்கும் என்று நினைத்தீர்கள் என்பதனைச் சொல்லுங்கள்... அவ்ளதான்.

இதனை நீங்கள் சொன்னால் தான், அப்படி பார்க்காதீர்கள்... இப்படி பாருங்கள்... என்று எங்களால் சொல்லித் தர முடியும். ஏனெனில் இது ஆன்லைன் டீச்சிங்க்... நீங்கள் சொல்வதனை வைத்தே நாங்கள் சரியாக வழி நடத்த முடியும். இல்லாவிடில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றே எங்களுக்கு தெரியாமல் போய்விடும்...


மேலும், இதுவரை நான் 20 + பதிவுகள் கொடுத்துவிட்டாலும் ... முழுமையான வடிவம் கொடுக்க 7 பதிவுகள் மட்டும் கொடுத்துள்ளேன்... என்னும் 10 பதிவுகள் வரயிருக்கிறது... இவற்றினை நீங்கள் படித்துக் கொள்ளத்தான் முடியும்.... முழுமையான வெற்றியாளராக ஆக....

நான் சொல்வது போல.. படித்ததை கொஞ்சம் மனதில் வைத்துக் கொண்டு... ஆர்டர் போடுங்கள்... போடுவதற்கு முன் எதனால் இப்படி நடக்க இருக்கிறது என்பதனை இங்கு சொல்லுங்கள் .... இப்படி நாம் மற்றவர்களிடம் சொல்வதன் மூலம் ஒர் நம்பிக்கை நம்மிடத்தில் பிறக்கும்... அந்த நம்பிக்கை தான் நமக்கு வெற்றி கொடுக்க கூடியது.


நாம் எதிர்பார்ப்பதற்கு நேர் எதிராகவும் நடக்க வாய்ப்பிருக்கிறது... பராவயில்லை நடக்கட்டும். ஆனால், அதில் நாம் என்ன தவறு செய்திருக்கிறோம் என்பதனை காண வேண்டும்... இதற்கும் நீங்கள் எங்களோடு பகிர்ந்து கொண்டால் தான் விடை கிடைக்கும். ஆகையால், தினம் தினம் பதிவிடுங்கள்.... தவறுகளை குறைத்து.... வெற்றிகளை நிறைப்படுத்தலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Sun Jun 23, 2013 10:13 pm

EUR/USD கடந்த வாரம் ஒர் பெரிய இறக்கத்தினை கடைசி மூன்று நாட்களில் கொடுத்திருந்தது. ஆனால் அதன் இறக்கம் தொடருமா? என்றால் ஒர் சந்தேகம் வலுக்கிறது.

அமெரிக்கா ஒர் பக்கம் கடன் பத்திரங்களை வாங்குவதனை குறைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதும்.... வரும் ஆண்டில் முற்றிலுமாக நிறுத்திடலாம் என சொல்லியிருப்பதும், டாலர்க்கான ஏறுமுகம் கூடியிருக்கிறது. அதைப்போல், ஐரோப்பா கண்டத்திலிருந்து வெளிவந்த செய்தி, தங்கத்தின் மீதான ட்ரேடிங்க் வீழ்ச்சியினைக் கொடுக்கும் என்று பயம் காட்ட... பலர் தங்கத்திலிருந்து விலகி கரன்சியின் பக்கம் சென்று கொண்டிருப்பதாகவும் தகவல் பரவுகிறது.

அதே நேரத்தில் ஐரோப்பாவின் வளர்ச்சியில் அத்தனை தொய்வு விழவில்லை... ஆகையால், டாலரின் தாக்கத்தினைச் சமாளித்து வளர்ச்சி காணும் என்றும் ஒர் சிலர் பேசிக் கொள்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது கடந்த இறக்கத்தினைப் பார்க்கும் பொழுது, சற்று மேலேயே அமைந்தது என்பது நினைவிருக்கலாம். தற்போதைய இறக்கம் என்பது சற்று நல்ல உச்சத்தினைக் கொடுத்தப் பின்னரே அமைந்துள்ளது.

இறக்கத்தில் தாழ்வு இல்லாமல், உச்சத்தில் அதிகரிப்பதால் புதிய சேனல் பாயிண்டில் அப் ட்ரெண்ட் அமையும் என்பது ஒர் பார்வையாகக் கொண்டால், தற்போதைய மார்க்கெட் 1.3045 என்றப் புள்ளியில் சப்போர்ட் அமைத்து திரும்பி ஏற ஆரம்பிக்கும் என கருதப்படுகிறது. இதனை உடைத்து இறங்கிவிட்டால்... 1.2975 என்பது அதற்கு அடுத்தக்கட்ட சப்போர்ட், பின் நேரே டவுன் தான் (1.2750).

இந்த வார மார்க்கெட் எந்த திசையில் அமையும் என்பதனை கண்டு கொள்ள வாரத்தின் முதல் நாளே ஐரோப்பா க்ரூப்பான ஜெர்மனியிலிருந்து முக்கிய டேட்டா ஒன்று திங்கள் மதியம் 1.30-க்கு வெளியாகுகிறது. இதே நேரத்தில் மற்ற இரண்டு டேட்டாஸ் வருகிறது... இந்த மூன்றுனுடைய கணிப்பு ஒர் மிக்சடு என்று சொன்னாலும் .. வருவது என்ன என்பது அந்த நேரமே தெரியும். ஆகையால், நீங்கள் 1.3045 என்ற புள்ளியினை சப்போர்ட் லைனாகக் கொண்டு மார்க்கெட்டினை எதிர் கொள்ளுங்கள். மேலும், அந்த நேரத்தில் அமையும் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லைனை எடுத்துக் கொண்டு டேட்டாஸ் ரிலிஸ் ஆன 15 வது நிமிடத்திற்குள் சரியான முடிவெடுத்து வெற்றியுடன் திரும்புங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD : அடுத்து நடக்கப் போவது என்ன? நீங்களும் சொல்லுங்

Post by ஆதித்தன் » Mon Jun 24, 2013 6:36 pm

http://c1308342.cdn.cloudfiles.rackspac ... 09x143.jpg[/fi]EUR/USD வர்த்தகத்தில் நாளை கவனிக்கப்பட முக்கிய டேட்டா அமெரிக்காவிலிருந்து வெளியாகிறது. இதன் நேரம் மாலை ஆறு மணிக்கு அமைந்துள்ளது.

மார்க்கெட் சரிந்து கீழே செல்லலாம் என்று சொன்னாலும் போதிய இறக்கம் அமைய கடினப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் க்ரூடு ஆயில் விரைவாக ஒர் சப்போர்ட் லைனை 92 அருகே அமைத்துவிட்டு மேல் எழும்ப ஆரம்பித்துள்ளது.

தங்கமும் ஒர் தாங்கலிலேயே கீழ் கிடைக்கிறதே தவிர, சரியான ஒர் இறக்க ஏற்றத்தினைக் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறது.

இவற்றிற்கு ஆதாரமாக நாளைய அமெரிக்க டேட்டாஸ் வருவதும் நெகட்டிவ் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், மார்க்கெட் மேல் திசைக்கு அழைத்துச் செல்லுமா? கீழ் திசைக்கு அழைத்துச் செல்லுமா? என்பதனை நாளை மாலைக்குள் ஒர் வியூகம் வகுத்து வையுங்கள்... நல்லதொரு ட்ரேடிங்க் வாய்ப்பாக அமையும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”