EUR/USD ; Forex Currency Trading Message - June 7

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD ; Forex Currency Trading Message - June 7

Post by ஆதித்தன் » Fri Jun 07, 2013 11:22 am

Image
கரடி வாலுடன் முடிவடைந்த நேற்றைய EUR/USD வர்த்தகம், முழுமையாக ஏற்றத்திற்கான இறக்கத்தினைக் கொடுத்திருக்கவில்லை... கொடுக்கக் கூடிய அளவிலான ஏற்றத்தினைக் காட்டிலும் நேற்று அதிகப்படியான ஏற்றத்தினைப் பெற்றுவிட்டது என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், தற்பொழுது இருக்கும் விலைப்புள்ளி ஒர் பிவோட் பாயிண்டாக காட்சியளிக்கிறது. அதாவது, ஏறிக் கொண்டிருக்கும் மார்க்கெட் 1.3400 ஐ ஆதாரமாகக் கொண்டு 1.3700 என்ற இலக்கினைப் பார்க்குமா? அல்லது இருக்குமிடத்திலே ரெசிஸ்டன்ஸ் அமைத்து கீழ் திரும்புமா? என்பதே இன்றைய கேள்வி.

அதே நேரத்தில் இன்று மாலை அமெரிக்காவிலிருந்து முக்கியமான டேட்டாவாக சம்பளப்பட்டுவாடா தகவல் அப்டேட் ஆவதால், கண்டிப்பாக மார்க்கெட் மாலை 6 மணிக்கு 150 பைப்ஸ் மாற்றமடையும். அது, டாலர்க்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், நெகட்டிவ் சென்றுவிட்டால் நேற்றைய உச்சத்தினை உடைத்து அப் ட்ரெண்டிற்கு மாறிவிடும். அதற்கு முன் ஒர் இறக்கத்தினை கண்ணில் காட்டும்.

இல்லை எதிர்பார்த்தது போலவே பாசிட்டிவ் என்று சொன்னால், மீண்டும் 1.3303 என்றப் புள்ளியருகே ஒர் டபுள் ரெசிஸ்டன்ஸ் அமைத்துத்தான் திரும்பும் என கருதுகிறேன்.

ஆகை இரண்டு கெட்டான் நிலையில் இருப்பதால், கொஞ்சம் பொறுமையாக முடிவெடுத்து, இன்றைய மாலை வர்த்தகத்தினை எதிர் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”