Tamil FOREX STICK Reversal Point Tutorial (FX/Share Market)

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Tamil FOREX STICK Reversal Point Tutorial (FX/Share Market)

Post by ஆதித்தன் » Mon Jun 03, 2013 1:45 am

PLACE ORDER IN RIGHT TIME & GET PROFIT WITH CANDLESTICK CHART
Forex Trading / Share Market Trading என எதனை எடுத்துக் கொண்டாலும், விலையினைப் பார்த்து எப்பொழுது ஆர்டர் இடுவது எப்பொழுது வெளியேறுவது என்பதுதான் பெரிய குழப்பம். அந்த குழப்பத்தினை போக்கும் விதமாக தொழில்முறையாக ட்ரேடிங்க் செய்யும் பலரும் பயன்படுத்தும் ஒர் Market Chart என்பது Japanese CandleStick Chart.

ஜப்பானீஸ் கேண்டில்ஸ்டிக் சார்ட், 18ஆம் நுற்றாண்டில் "Menuhisa Homma" என்ற ஜப்பானிய அரிசி வியாபாரி ஒருவரால் உருவாக்கம் செய்யப்பட்டது. இந்த சார்ட்டில் உள்ள ஒவ்வொரு ஸ்டிக்/குச்சியும் நமக்கு நான்கு தகவல்களைக் கொடுக்கின்றன. அதனை கீழ் உள்ள படத்தில் குறித்துள்ளேன். அதாவது, Price Open, Price Close, High Price, & Low Price.
நான்கு தகவல்களைக் கொடுக்கும் இக்குச்சியின் கால அளவினை, 1 நிமிடம், 5 நிமிடம், 10 நிமிடம், 15 நிமிடம், 30 நிமிடம், 1 மணி நேரம், 4 மணி நேரம், 1 நாள், 1 வாரம், & 1 மாதம் என பல கால அளவில் சார்ட் அமைப்பு எவ்வாறு இறுந்தது என்பதனை ஆராய்ந்து, அடுத்தக்கட்ட அமைப்பு எவ்வாறு இருக்கும் என ஒர் வியூகம் அமைக்க எளிதாக அமைகிறது. அதிலும், ஒவ்வொரு ஸ்டிக்கும் காளையின் ஆதிக்கத்தினையும், கரடியின் ஆதிக்கத்தினையும் தெளிவாகக் காட்டுவதால், வலுவானவர்களுடன் சேர்ந்து நாமும் பயணிக்க ஏதுவாக அமைகிறது. அவ்வாறு, கரடி/காளை எப்பொழுது வலுயிழந்து, வலுபெறுகிறது என்ற Trend Reversal Point பார்க்க கேண்டில்ஸ்டிக் அமைப்பு மிகவும் ஏதுவாக அமைவதாலாயே எல்லோரும் விரும்பப்படுகிறது.

Trend Reversal Points:
திராசின் அப்பக்கம் ஒர் நாட்டு நாணயம் இப்பக்கம் ஒர் நாட்டு நாணயம் என இட்டு CURRENCY PAIR என்ற அமைப்பில் உள்ள நாணய மாற்று சந்தையில் நடைபெறும் வர்த்தகத்தில், இரண்டு கரன்சியின் வலுவுக்கு ஏற்ப, மேலும் கீழும் மேலும் கீழும் என்ற அலை அலையாய் நமது சார்ட்டில் பேட்டர்ன் உருவாகின்றன. இவை ஒர் கோபுரம் போல் நமக்கு காட்சியளிக்கும். சிறிய கோபுரம் பெரிய கோபுரம் என மேல் பக்கமும் கீழ் பக்கமும் தொடர்ச்சியாக வெவ்வேறு அளவில் மார்க்கெட் சார்ட் அமையும். அதில் முந்தைய அமைப்பிற்கு ஏற்பவே பிந்திய அமைப்பு உருவாகும் என்ற கணிப்பின்படி, அதாவது, கோபுரத்தில் ஒர் பக்க உச்சத்திற்கு ஏற்பவே, மறுபக்க உச்சமும் அமையும் இல்லையா, அதனை அடிப்படையாகக் கொண்டே மார்கெட் மட்டம்(Bottom line), உயரம்(Resistance Line) ஆகிய கோடுகளை வரைந்து, அவ்விடத்தில் அமையும் கீழ் உள்ள Trend Reversal point -க்கு தகுந்தவாறு ஆர்டரினைப் போடுவதும், அதைப்போல் வெளியேறுவதும் என எளிதாக ட்ரேடிங்க் செய்து சம்பாதிக்கின்றனர், தொழில்முறை நாணயமாற்று வர்த்தகர்கள்/ பங்குச் சந்தை வர்த்தகர்கள்.

நான் இங்கு கீழே பிரபலமான 7 ரிவர்சல் பாயிண்ட் அமைப்புகளான Hammer, Bearish Engulfing, Bullish Engulfing, Morning Star, Evening Star, Doji Star, Shooting Star ஆகியவை எவ்வாறு இருக்கும் என படமாக கொடுத்துள்ளேன். இதைப்போல் மொத்தம் 30+ அமைப்புகளை பல வருடங்களாக மார்கெட் சார்ட் அமைப்பினை ஆராய்ந்து கொடுத்திருந்தாலும், இந்த 7 அமைப்புகளே பெரிதும் சார்ட்டில் காணப்படுகின்றன.
Hammer & Shooting Star:

[youtube]https://www.youtube.com/watch?v=UG4_dnpoYhY[/youtube]
Hammer - சுத்தியல்

சுத்தியல் பார்ப்பதற்கு, ஒர் தலைப்பாக சுத்தி இரும்பும் , அதற்கு மூன்று மடங்கு நீள கைப்பிடியும் இருக்கும்.. அதனைப்போல், சிறிய தலையுடன் நீண்ட வாலினைக் கொண்டு ட்ரெண்ட் பாட்டத்தில் அமையும் ஸ்டிக் கம்மர் எனப்படும். காளை தலை மேல் பார்த்து இருந்தால் ஹம்மர், கீழ் பார்த்து இருந்தால் தலைகீழ் கம்மர்.

இதைப்போல் சுத்தியல் வடிவில், ட்ரெண்ட் ரெசிஸ்டன்ஸ் பகுதியில் அமைவதில் கரடி தலை கீழ் பார்த்து இருந்தால் சூட்டிங் ஸ்டார் ... மேல் பார்த்து இருந்தால் ஹங்கிங் மேன்.

ஹம்மர் ட்ரெண்ட் பாட்டத்தில்(அடி) அமைவது & சூட்டிங்க் ஸ்டார் ட்ரெண்ட் ரெசிஸ்டன்ஸ்(உச்சியில் அமைவது. அதாவது, ஒர் நீண்ட வாலுடைய காளை -இன் முகம் மேல் நோக்கி பாட்டத்தில் அமைந்திருந்தால் அது ஹம்மர் என்றும், கீழ் நோக்கி பாட்டத்தில் அமைந்தால் தலைகீழ் ஹம்மர் என்றும் அழைக்கப்படுகிறது.இதைப்போல், ரெசிஸ்டன்ஸ் பகுதியில் அமையும் மேல் நோக்கிய கரடி முகம் ஹங்கிங் மேன் என்றும், கீழ் நோக்கிய ஹம்மர் கரடி ஸ்டிக் சூட்டிங் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறான பெரிய வால் அமைப்பு கொண்ட ஹம்மர் தொடர்ச்சியான ஒர் ட்ரெண்டில் வந்தால், அந்த ட்ரெண்ட் முடிவுற்று ஒர் திருப்பம் கொடுக்கும் என நம்பலாம்.


DOJI Star:
டோஜி ஸ்டார் என அழைக்கப்படும் உருவமற்ற மார்கெட் லைன், பெரிதும் ஒர் இழுபறியான மார்கெட் நேரத்திலேயே அமைகிறது. அதாவது காளையும் சரி, கரடியும் சரி இரண்டுமே தங்களது முழு பலத்தினையும் கொண்டு மார்கெட்டி விலையை தன் பக்கம் சாதகமாக மாற்ற முயலும் நேரம். இந்த நேரத்தில் எவர் ஒருவர் பலத்தினை சற்று இழந்தாலும், எதிராளி பெரிய வெற்றியினை அடைகிறார். அதாவது கையிறு இழுக்கும் போட்டியினை எடுத்துக்காட்டாக கொள்ளுங்கள். ஆகையால், டோஜி ஸ்டார் அமையும் இடத்தில் பெரும்பாலும், முந்தைய ட்ரெண்டிற்கு எதிராகவே அமையும். ஏனெனில் தொடர்ச்சியாக மேல் ஏறி பலவீனத்துடன்/களைப்புடன் காணப்படும் காளையால் புதியதாக களம் இறங்கும் சம பலத்துடன் கூடிய கரடியுடன் மோதி வெல்ல முடியாது என்பதே காரணம். இது Engulfing என்ற அமைப்பிற்கும் பொறுந்தும்.
Image
Marubozu என்ற பெயருடைய குச்சிகள் ஆரம்பம் & முடிவு ஆகியவை மட்டம் & உச்சம் ஆக அமைந்திருக்கும். உதாரணத்திற்கு காளை குச்சியான பச்சை குச்சியில் ஆரம்பமே மட்டமாகவும், முடிவே உச்சமாக அமையும். ஆகையால் இதில் கூடுதல் வால் அமைப்பு மேலோ கீழோ இருக்காது. இதைப்போல், கரடி குச்சியில் ஆரம்பம் உச்சமாகவும், முடிவு மட்டமாகவும் இருக்கும்.

இவ்வாறு வாலில்லா குச்சிகள் வந்தால், பச்சை எனில் வாங்குபவர்கள் ஆதிக்கம் இருப்பதால் அதன் தொடர்ச்சியினை மேல் பக்கம் எதிர்பார்க்க வேண்டும். எ.கா. காளை குச்சி என்றால், அடுத்து காளையின் ஆதிக்கமே என்று மேல்/பை ஆப்சன் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதைப்போல், கரடி மாருபோசு என்றால், விற்பவர்கள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் கீழ்/செல் ஆப்சன் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இவை நமக்கு ஆர்டரினைச் சரியான விலைப் புள்ளியில் வாங்கி/விற்று இலாபம் அடைய உதவினாலும், என்னும் எளிமையாக தோல்விகளைக் குறைத்து வெற்றியடைவதற்கான இலாபகரமான ஆர்டர்க்கான விலைப்புள்ளிகளை எவ்விடத்தில் பார்க்கலாம் என்ற மார்க்கெட் ட்ரெண்ட்ஸ் சப்போர்ட் லைன் & ரெசிஸ்டன்ஸ் லைன் ஆகியவை இருக்கின்றன. அவற்றில் ஆர்டர் இடுவதே மிகவும் இலாபகரமானதாக அமையும். ஆகையால் அடுத்தப் பாடத்தில் Market Trend Resistance line & Support line ஆகியவற்றினைப் பற்றிப் பார்ப்போம்.
[youtube]https://www.youtube.com/watch?v=Gd0aAjiwtzA[/youtube]
jaiplus
Posts: 51
Joined: Tue Jul 24, 2012 12:38 pm
Cash on hand: Locked

Re: Tamil FOREX STICK Reversal Point Tutorial (FX/Share Mark

Post by jaiplus » Tue Jan 07, 2014 12:35 pm

:great: :great:

படங்களும், உங்களது விளக்கங்களும் அருமை..

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil FOREX STICK Reversal Point Tutorial (FX/Share Market)

Post by ஆதித்தன் » Wed Jan 25, 2017 1:01 pm

Image

Marubozu என்ற பெயருடைய குச்சிகள் ஆரம்பம் & முடிவு ஆகியவை மட்டம் & உச்சம் ஆக அமைந்திருக்கும். உதாரணத்திற்கு காளை குச்சியான பச்சை குச்சியில் ஆரம்பமே மட்டமாகவும், முடிவே உச்சமாக அமையும். ஆகையால் இதில் கூடுதல் வால் அமைப்பு மேலோ கீழோ இருக்காது. இதைப்போல், கரடி குச்சியில் ஆரம்பம் உச்சமாகவும், முடிவு மட்டமாகவும் இருக்கும்.

இவ்வாறு வாலில்லா குச்சிகள் வந்தால், பச்சை எனில் வாங்குபவர்கள் ஆதிக்கம் இருப்பதால் அதன் தொடர்ச்சியினை மேல் பக்கம் எதிர்பார்க்க வேண்டும். எ.கா. காளை குச்சி என்றால், அடுத்து காளையின் ஆதிக்கமே என்று மேல்/பை ஆப்சன் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதைப்போல், கரடி மாருபோசு என்றால், விற்பவர்கள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் கீழ்/செல் ஆப்சன் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
User avatar
vk90923
Posts: 55
Joined: Sun Mar 20, 2016 7:46 pm
Cash on hand: Locked

Re: Tamil FOREX STICK Reversal Point Tutorial (FX/Share Market)

Post by vk90923 » Thu Jan 26, 2017 10:46 pm

ஆதி சார் வணக்கம், மிகவும் அருமை.(மன்னிக்கவும்) ஆனால் வேலை பளூ மிகுதியால் நீங்கள் குழப்பம் அடைந்து விட்டீர்கள் என நினைகின்றேன். ஏன் எனில் ஹம்மர் ஸ்டார் படத்தில் வால் கீழே காட்டி உள்ளது அதே போல் சூட்டிங்- ஸ்டார் படத்தில் வால் மேலே காட்டி உள்ளது ஆனால் நீங்கள் கீழே பதிவில் ஹம்மர் ஸ்டார் வால் மேலே என்றும் சூட்டிங் ஸ்டார் வால் கீழே என்றும் குறிப்பிட்டு உள்ளேர்கள் இதனால் எனக்கும் மற்றும் படுகை நண்பர்களுக்கும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் தாங்கள் எங்களுக்கு ஏற்படும் குழப்பத்தை
தீர்வு தருவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.
Last edited by vk90923 on Thu Jan 26, 2017 10:56 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil FOREX STICK Reversal Point Tutorial (FX/Share Market)

Post by ஆதித்தன் » Fri Jan 27, 2017 11:30 am

vk90923 wrote:ஆதி சார் வணக்கம், மிகவும் அருமை.(மன்னிக்கவும்) ஆனால் வேலை பளூ மிகுதியால் நீங்கள் குழப்பம் அடைந்து விட்டீர்கள் என நினைகின்றேன். ஏன் எனில் ஹம்மர் ஸ்டார் படத்தில் வால் கீழே காட்டி உள்ளது அதே போல் சூட்டிங்- ஸ்டார் படத்தில் வால் மேலே காட்டி உள்ளது ஆனால் நீங்கள் கீழே பதிவில் ஹம்மர் ஸ்டார் வால் மேலே என்றும் சூட்டிங் ஸ்டார் வால் கீழே என்றும் குறிப்பிட்டு உள்ளேர்கள் இதனால் எனக்கும் மற்றும் படுகை நண்பர்களுக்கும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் தாங்கள் எங்களுக்கு ஏற்படும் குழப்பத்தை
தீர்வு தருவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.
நன்றி.

Hammer - சுத்தியல்

சுத்தியல் பார்ப்பதற்கு, ஒர் தலைப்பாக சுத்தி இரும்பும் , அதற்கு மூன்று மடங்கு நீள கைப்பிடியும் இருக்கும்.. அதனைப்போல், சிறிய தலையுடன் நீண்ட வாலினைக் கொண்டு ட்ரெண்ட் பாட்டத்தில் அமையும் ஸ்டிக் கம்மர் எனப்படும். காளை தலை மேல் பார்த்து இருந்தால் ஹம்மர், கீழ் பார்த்து இருந்தால் தலைகீழ் கம்மர்.

இதைப்போல் சுத்தியல் வடிவில், ட்ரெண்ட் ரெசிஸ்டன்ஸ் பகுதியில் அமைவதில் கரடி தலை கீழ் பார்த்து இருந்தால் சூட்டிங் ஸ்டார் ... மேல் பார்த்து இருந்தால் ஹங்கிங் மேன்.

Image
User avatar
vk90923
Posts: 55
Joined: Sun Mar 20, 2016 7:46 pm
Cash on hand: Locked

Re: Tamil FOREX STICK Reversal Point Tutorial (FX/Share Market)

Post by vk90923 » Fri Jan 27, 2017 8:40 pm

ஆதி சார் வணக்கம், மிகவும் அருமை,மிகவும் நன்றி.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”