Forex Profit : Learn Forex Trading Order Execution

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Profit : Learn Forex Trading Order Execution

Post by ஆதித்தன் » Sat Jun 01, 2013 8:01 pm

Forex Currency Market 24 மணி நேரமும் இயங்கும் நாணய மாற்று வர்த்தகச் சந்தை என்பதனை முந்தையப் பாகங்களில் பார்த்தோம். தற்பொழுது, மார்க்கெட்டில் இரண்டு கிளிக் மூலம் இலாபங்களை எவ்வாறு பார்ப்பது என்பது பற்றிய விவரம் பார்க்கலாம்.

CURRENCY PAIR PRICE & Order Profit:

பல நாணய இணைகள் வர்த்தகத்திற்கு கிடைத்தாலும், நாம் தெளிவாக புரிந்து கொள்வதற்கு ஏதுவாக EUR/USD என்ற மேஜர் கரன்சியினை எடுத்துக் கொள்வோம்.

EUR/USD என்ற இணையில் முதலில் இருப்பது பேஸ் கரன்சி, இரண்டாவது இருப்பது Quote கரன்சி என ஏற்கனவே பார்த்தோம். அதில் நாம் எப்பொழுதுமே ஒர் ஆர்டரின் பொழுது பேஸ் கரன்சியினை வாங்குகிறோம். ஃகோட் கரன்சியினை விற்கிறோம்.

நாம் இலாபம் பார்க்க இரண்டு வகையான ஆர்டர் Execution Type இருக்கிறது. 1. வாங்கி விற்பது. (Buy Order) 2. விற்று வாங்குவது (Sell Order).

Pips Calculation:

தற்பொழுது மார்கெட்டில் EUR/USD கரன்சி விலை 1.3050 என்ற நிலையில் இருக்கிறது. அடுத்ததாக மார்கெட் விலை 1.3000 க்கும் கீழாகச் செல்லும் என நீங்கள் நம்பினால், செல் ஆர்டர் புக் செய்யுங்கள். விலை 1.3047 என்று 3 பைப்ஸ் வித்தியாசம் காட்டும் பொழுது தங்களது ஆர்டர் இலாபத்தினைக் காட்ட ஆரம்பித்துவிடும். தங்களது இலக்கு வரை அல்லது இலாபத்துடன் தங்களது ஆர்டரினை Close செய்து கொள்ளலாம்.



உதாரணத்திற்கு 1.3050 என்ற விலையில் செல் ஆர்டர் இட்டு, 1.3000 என்ற விலையில் க்ளோஸ் செய்தீர்கள் என்றால், 1.3050 -13000 = 50 பைப்ஸ்.



அதைப்போல், 1.3050 என்ற விலையிலிருந்து, 1.3100 என்ற விலைக்கு ஏறிச் செல்லும் என நீங்கள் நம்பினால், பை ஆர்டர் இட்டு 1.3100 என்றப் புள்ளியில் க்ளோஸ் செய்து கொள்ளலாம். ஆர்டர் போட்ட விலை, ஆர்டரினை க்ளோஸ் செய்த விலை, ஆகிய இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் பைப்ஸ் எனப்படும். 1.3050 - 1.3100 = 50 பைப்ஸ்



அதுபோல், பைப்ஸ் கால்குலேஷன் பொழுது டெசிமல் புள்ளியிலிருந்து முதல் நான்கு எண்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அதாவது, 1.31004 என இருந்தால், 1.3100 என்பதனை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Profit Calculation :

Pips calculation செய்துவிட்ட நாம், அடுத்து பைப்ஸ் மூலம் எவ்வளவு இலாபம் சம்பாதித்திருக்கிறோம் என்பதனைப் பார்க்க, Pips Value * No.of Pips = Profit . பைப்ஸ் வேலிவ் கண்டுபிடிக்க பெரிய சூத்திரம் எல்லாம் சொல்லப் போவதில்லை... அது நமக்கு தேவையுமில்லை... ஏனெனில் ஆர்டர் ரன் ஆகிக் கொண்டிருக்கும் பொழுது எத்தனை டாலர் பிராபிட் தற்போது வந்துள்ளது என்பதனைக் காட்டிக் கொண்டே இருப்பதால், பிராபிட் எவ்வளவு எனப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. ஆனாலும் சிம்பிளாகச் சொல்கிறேன்.

நமது தளத்தில் ஆர்டர் லாட் சைஸ், 0.1 சைசிலிருந்து 10 சைஸ் என நீள்கிறது. அதில் 0.1 = $10000 . அதாவது நீங்கள், ஒர் பை ஆர்டர் போடுகிறீர்கள் என்றால் அப்போதைய விலைக்கு $10000-க்கு EURO கரன்சியினை வாங்குகிறீர்கள். இதனை பைப்ஸ் வேலிவ்க்கு மாற்ற வேண்டும் என்றால்,

10000 /10000 = $1.00 = 1 பிப்ஸ்.

அதாவது 0.1 என்ற சைசில் ஆர்டரினை போட்டிருந்தால் 50 பைப்ஸ் மூலம் $50.00 வருவாய் கிடைத்திருக்கும். 0.2 என்ற சைசில் ஆர்டரினைப் போட்டிருந்தால், 50 பைப்ஸ் வெற்றியின் மூலம் வருவாயாக 100 டாலர் கிடைத்திருக்கும்.

இதைப்போல், நெகட்டிவ் சென்றால் +ல் கிடைத்த வருவாய், மைனஸில் போய்விடும் என்பதனையும் மனதில் வைத்துக் கொண்டு ஆர்டர் சைசினை தேர்வு செய்ய வேண்டும். வருவாயில், Spread பைப்ஸ் கழித்துக் கொள்ளுங்கள். ஸ்பிரட்ஸ் பெரும்பாலும் 1 பைப்ஸிலிருந்து 2 பைப்ஸ் வரை இருக்கும்.

Leverage:

0.1 Order Size = $10000 என்று சொல்லியிருந்தேன். அப்படியானால், குறைந்தப் பற்ற ஆர்டர் போடுவதற்கே நான் 10000 டாலர் டெபாசிட் செய்ய வேண்டுமா? என்ற கேள்வி எழலாம். அப்படி நீங்கள் மொத்த ரூபாயும் டெபாசிட் செய்ய வேண்டிய அவசியமில்லை. ரிஸ்க் தொகையை மட்டும் கொண்டு ட்ரேடிங்க் செய்யலாம். அதாவது $10000 டாலர் வாங்கி விற்க நீங்கள் வெறும் $100 டெபாசிட் செய்தால் போதும். ஏனெனில், ஃப்ரக்ஸ் ப்ளாட்பார்மில் 1:50,100,400,500,1000 என நம் விருப்பத்திற்கு ஏற்ப லிவரேஜ் கொடுக்கிறார்கள். கணக்கினைத் தொடங்கும் பொழுது, 1:500 என லிவரேஜ் தேர்வு செய்தால் போதும். அதாவது 1 டாலர் டெபாசிட் செய்தால் 500 டாலர் சைசில் ட்ரேடிங்க் செய்ய முடியும்.

Free Forex Trading Demo Account Visit : http://forex.padugai.com

===========================================================

குறிப்பு: CFD/ Leverage Trading என்பது நமது பணத்தினை முழுமையான Risk என்ற அமைப்பில் இழப்பிற்கும் தயாராகி விளையாடும் விளையாட்டு என்பதனை கவனத்தில் கொள்ளவும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”