EUR/USD : Tamil Forex Trading Weekly Report 20/24 May

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD : Tamil Forex Trading Weekly Report 20/24 May

Post by ஆதித்தன் » Sat May 25, 2013 1:53 pm

Image
EUR/USD Forex Currency Trading Weekly Report - 20/24 May :

மார்கெட் தொடங்கியது = 1.2841 (கடந்த வாரம் முடிவுற்றது - 1.2836)

மார்கெட் முடிவுற்றது = 1.2928 (அதாவது 87 பைப்ஸ் காளை கெயின் பண்ணியிருக்கிறது)



வாரத்தின் உச்சம் = 1.2998

வாரத்தின் மட்டம் = 1.2819

வாரத்தின் ஏற்ற இறக்கம் = 179 pips

வாரத்தின் மாற்றம் = +87 பைப்ஸ் (இந்த வார விளையாட்டின் வெற்றியாளர், காளை)

ஆறு வாரங்களின் மாற்றம் = -176 பைப்ஸ்

==========================================

கடந்த வாரம் ஈரோ/டாலர் மார்கெட் சரிந்து கொண்டே சென்றதனை பார்த்தோம், அதற்கு முந்தைய வாரம் 6/10 -யிலும் மார்கெட் சரிவினையே பார்த்திருந்தது. ஆனால் இந்த வாரம் மார்கெட் சற்று எழும்ப ஆரம்பித்திருக்கிறது. டெக்னிகல் அனலைசிஸ் பார்வையில் மார்கெட் சற்று இறங்கி ஏறும் என்று நினைத்திருந்தாலும் மார்கெட் சற்று மேலிருந்தே திரும்ப ஆரம்பித்திருக்கிறது.

திரும்பிய மார்கெட் முழுமையான அப் ட்ரெண்ட் பார்வையினைக் காட்டியிருக்கிறதா? என்றால் இல்லை. ஒர் சைடு வே பேட்டர்ன் அமைப்பினையே காட்டியிருக்கிறது. சைடு வே பேட்டர்ன் ஆக இருந்தாலும் மார்கெட் 170 பைப்ஸ் ஏற்றம் இறக்கம் இரண்டு முறை காட்டியிருக்கிறது. அதாவது மார்கெட் விளையாட ஏதுவாக அமைந்திருக்கிறது. ஆனாலும் ஏற்கனவே நாம் ஒர் சின்ன இறக்கத்தினை எதிர்பார்த்ததும், மார்கெட் ஏற்ற இறக்கத்துடன் அதே இடத்தில் நிற்பதும் தான் கடந்த வாரத்தில் நாம் சரியாக EUR/USD-ல் வர்த்தகம் செய்யாமைக்கு காரணம். ஏனெனில், சைட் வே மார்கெட் ஒர் பிவோட் சேனலில் நிற்குமானால், ரெசிஸ்டன்ஸ் லைன் பாட்டம் லைனாகவும், பாட்டம் லைன் ரெசிஸ்டன்ஸ் லைன் ஆகவும் மாற வாய்ப்பிருக்கிறது. அப்படியாக கடந்த இரண்டு வாரத்திற்கு முன் நாம் ஒர் பிவோட் சேனல் நேரத்தில் பாட்டம் லைனாக எதிர்பார்த்தது(1.3118) ரெசிஸ்டன்ஸ் லைனாக மாறி 300 பைப்ஸ்க்கும் கீழாக சென்றுவிட்டது. தற்பொழுது மார்கெட் 1.3000 என்ற புள்ளியருகே வந்து சென்றுள்ள நிலையில் 1.3118 என்ற இடத்தில் மாட்டியவர்கள், 500 பைப்ஸ் ஈக்குவிட்டியுடன் இருந்திருந்தால், என்றோ மார்கெட் மூவ்மெண்டில் இழந்த பைப்ஸ்களை மீட்டு நஷ்டமின்றி வெளியேறிப்பார்கள். அதாவது நாம் எப்பொழுதுமே ட்ராலி ஸ்டாப் என்ற முறையில் நாம் எதிர்பார்க்கும் டார்கெட் 60 பைப்ஸ் ஆக இருந்தாலும், கிடைக்கின்ற 10 பைப்ஸ் போதும் என்று வெளியேறிவிட வேண்டும். அப்படியான 10 பைப்ஸ் கூட மேல் சொன்ன ஆர்டரில் அமையாது போனதுதான் ஒர் இழப்பு. அதாவது நான் ஸ்டாப் லாசை விட, ஸ்டாப் லாக் ஆர்டர் நல்லது என கருதுபவன். ஏனெனில், 20 பைப்ஸ் ஸ்டாப் லாஸ் என்று சொல்லி வெளியேறிவிட்டு, அடுத்த பாயிண்ட் எப்போ கிடைக்கும், இலாபம் பார்க்கலாம் என்பதனை விட, மார்கெட் திரும்பும் வரை எதிர்பார்க்கலாம், அல்லது ஸ்டாப் லாக் இட்டு, எந்த திசைக்கு சென்றாலும் உச்சம் சென்றப் பின்னர் திரும்பும் இடத்தில் வெளியேறுவோம் என ஆர்டரை பெண்டிங்கில் விட்டுவிடுவது நல்லது. அவ்வாறு திரும்பும் பொழுது, சின்ன சின்னதாய் இழப்பினை நீக்கி வெளியேறிவிட வேண்டும். ஆனால், இதனைச் செய்வதற்கு மார்கெட்டில் உட்கார்ந்து ஸ்கால்பிங்க் விளையாடத் தெரிய வேண்டும், ட்ரெண்ட் கணிக்கத் தெரிய வேண்டும். இல்லையெனில், 1:2 (இழப்பு:இலாபம்) என்ற ரேசியோவில் ஆர்டர்களை சரியான புள்ளியில் ப்ளேஸ் செய்து கொண்டே வந்தாலும் இலாபம் நம்மை வந்தடையும்.


ஸ்கால்பிங்க் & ட்ரெண்ட் ஆகிய இரண்டையும் இணைத்துக் கொண்டு, சின்னதாய்... ஒர் 10 பைப்ஸ், 5 பைப்ஸ் என ரெசிஸ்டன்ஸ் லைன் - பாட்டம் லைன் பார்த்து ஆர்டர் இட்டோம் என்றால் வெற்றியினை 99% ஆக குவிக்க முடியும். அதுவும் சரியான ஆர்டர் சைசிலேயே நாம் செல்வோம் என்றால், இலாபமும் கொள்ளை இலாபமாக நமக்கு கிடைக்கும். ஆர்டர் சைசில் கவனம் செலுத்தா விட்டாலோ, ஈக்குவிட்டியினை தவறவிட்டாலோ இழப்புகள் வரும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஆகையால் எப்பொழுதும் சரியான ஈக்குவிட்டியின் படி மொத்த ஆர்டர்களின் வால்யூம் வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் தற்பொழுது நாம் ஒரே ஒர் கரன்சி என்று இல்லாமல், எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கு ஆர்டரினை இடம் பெறச் செய்தல் என்று இலாப நோக்கத்துடன் சென்று கொண்டிருக்கிறோம். அப்படியான சூழலில், தங்கத்தில் ஒர் ஆர்டர், கரன்சியில் ஆர்டர், ஸ்டாக்கில் ஒர் ஆர்டர், ப்யூச்சரில் ஒர் ஆர்டர் என பல ஆர்டர்களைப் இட்டு, மொத்த ஆர்டர்களின் வால்யூம்களை ஈக்குவிட்டிக்கு கால்குலேட் செய்ய தவறினாலும் தவறாகிவிடும். ஆகையால் எப்பொழுதும், விழிப்புடன் மார்கெட்டில் களம் இறங்கினால், இலாபம் என்பது நம்மை தேடி வரும்.

சுருங்கச் சொன்னால், களத்தில் இறங்கிவிட்டோம் என்றால், வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்பதே எனது இலக்கு. ஆனாலும் ஏற்ற இறக்கத்துடன் செல்லும் மார்கெட்டில் வெற்றியும் தோல்வியும் கரடிக்கும் காளைக்கும் சகஜம். அதில், வியாபரத்தினைச் செய்யும் நமக்கும் ஒன்றில் அடிபட்டாலும் மற்றொன்றில் இலாபம் வந்து கொண்டே இருக்கும். இவ்வாறு இலாபம் பார்க்க முடியாமல் பிசினசில் நட்டத்தினை பெறுபவர்கள் வெகு சிலரே. ஆகையால், அவ்வாறு வெற்றி பெற முடியாது என நினைப்பவர்கள், விரைவாக முடித்துக் கொண்டு திரும்பிக் கொள்வதே மிகவும் நல்லது. ஏனெனில் வெற்றியும் தோல்வியும் நம் கையில் தான் இருக்கிறது. நாம் தான் திறம்படச் செய்து, வியூகங்களை வகுத்து வெற்றி பெற வேண்டும். ஆகையால், வெற்றி பெற முடியும் என்று நம்புவர்களுக்கு பாரக்ஸ் மார்கெட் என்றும் வருவாய் கொடுக்கும் ஒன்று. அதைப்போல், போட்டப் பணம் போய்விடுமோ என்று கருதினால், அவர்களுக்கு பங்குச் சந்தையானாலும் சரி, ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் ஆனாலும் சரி ஒத்துவராத ஒன்று.

ஸ்கால்பிங்க் & ட்ரெண்ட் ஆகிய இரண்டையும் இணைத்துக் கொண்டு, சின்னதாய்... ஒர் 10 பைப்ஸ், 5 பைப்ஸ் என ரெசிஸ்டன்ஸ் லைன் - பாட்டம் லைன் பார்த்து ஆர்டர் இட்டோம் என்றால் வெற்றியினை 99% ஆக குவிக்க முடியும். அதுவும் சரியான ஆர்டர் சைசிலேயே நாம் செல்வோம் என்றால், இலாபமும் கொள்ளை இலாபமாக நமக்கு கிடைக்கும். ஆர்டர் சைசில் கவனம் செலுத்தா விட்டாலோ, ஈக்குவிட்டியினை தவறவிட்டாலோ இழப்புகள் வரும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஆகையால் எப்பொழுதும் சரியான ஈக்குவிட்டியின் படி மொத்த ஆர்டர்களின் வால்யூம் வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் தற்பொழுது நாம் ஒரே ஒர் கரன்சி என்று இல்லாமல், எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கு ஆர்டரினை இடம் பெறச் செய்தல் என்று இலாப நோக்கத்துடன் சென்று கொண்டிருக்கிறோம். அப்படியான சூழலில், தங்கத்தில் ஒர் ஆர்டர், கரன்சியில் ஆர்டர், ஸ்டாக்கில் ஒர் ஆர்டர், ப்யூச்சரில் ஒர் ஆர்டர் என பல ஆர்டர்களைப் இட்டு, மொத்த ஆர்டர்களின் வால்யூம்களை ஈக்குவிட்டிக்கு கால்குலேட் செய்ய தவறினாலும் தவறாகிவிடும். ஆகையால் எப்பொழுதும், விழிப்புடன் மார்கெட்டில் களம் இறங்கினால், இலாபம் என்பது நம்மை தேடி வரும்.

நீங்க என்னும் போரக்ஸ் ட்ரேடிங்க் கற்றுக்க ஆரம்பிக்கலைன்னா இலவசமாக, பாரக்ஸ் ட்ரேடிங்க் கணக்கினைத் தொடங்கி ட்ரேடிங்க் பயிற்சி எடுக்க ஆரம்பியுங்கள்.

Visit : http://forex.padugai.com

Free Forex Trading Account with $5000 Virtual Money for Forex Trading Training, If you need help in Tamil , Dial me.


பாரக்ஸ் ட்ரேடிங்கில் வெற்றி பெற வாழ்த்துகள்!

:thanks:
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”