EUR/USD : Forex Currency Trading Tips May-23

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD : Forex Currency Trading Tips May-23

Post by ஆதித்தன் » Thu May 23, 2013 10:56 am

Image
EUR/USD Forex Trading, நாம் எதிர்பார்த்தது போல, சற்று மேல் எழும்பி அப் ட்ரெண்டாகப் போய் இலாபம் பார்க்க வைத்தாலும், அடுத்ததாக கீழ் நோக்கிச் சரியும் என்று எதிர்பார்த்த 1.2841 என்றப் புள்ளியினையும் தொட்டுவிட்டது. அத்தோடு நில்லாது, 1.2827 என்றப் புள்ளியினை பாட்டம் லைனாக அமைத்தது தான் இப்போதைய புதிய குழப்பம்.

மார்கெட் அப் ட்ரெண்ட் & டவுன் ட்ரெண்ட் ஆகிய இரண்டு சேனல்களுக்கும் நடுவில் பிவோட் பாயிண்டில் பாட்டம் அமைத்திருப்பதுதான், அப்பிரச்சனை. அதாவது மார்கெட் நாம் எதிர்பார்த்தது போல, இன்றைய சூழலில் இறங்கும் என்று சொல்ல முடியாது. அதாவது நேற்றைய டைம் ப்ரேம் வேறு இன்றைய டைம் ப்ரேம் வேறு. ஆகையால், மார்கெட் 1.2795 என்றப் புள்ளியருகே டபுள் பாட்டம் லைனை உருவாக்கி மேல் நோக்கி எழும்பலாம் அல்லது இறக்கத்திற்கான ஏற்றமாக 1.2893 என்றப் புள்ளியருகே ரெசிஸ்டன்ஸ் அமைத்து கீழ் நோக்கி அமையலாம்.

பிவோட் பாயிண்டில் நிற்கும் இப்போதைய மார்கெட் சூழலை நம்பி எந்தவொரு ட்ரெண்ட் லைனையும் நாம் உறுதியாக வரைய முடியாது. அதைப்போல், கரடியின் ஆதிக்கம் உள்ளது என்பதற்காக கீழ் நோக்கியும் பார்க்க முடியவில்லை. எதுவாயினும் இன்றைய காலை வர்த்தகத்திற்குப் பின்னர் அமையும் பாட்டம் அல்லது ரெசிஸ்டன்ஸ் லைனை மையமாகக் கொண்டு மார்கெட் மூவ்மெண்டினை எதிர் நோக்குவது மிகவும் நல்லது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”