dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்
Forex Economic Calendar-ல் காளை 1,2,3 இப்படி எதனை இருந்தால் ஏறும் அல்லது இறங்கும் என்று எப்படி முடிவு செய்வது ? நான் நினைப்பது EUR என்பது காளை, USD என்பது கரடி சரியா ? உதவுங்கள் சார்
இல்லை.
மேலே செல்வது என்பது காளை.
கீழே செல்வது என்பது கரடி.
ஒவ்வொரு படத்திற்கும் ஒர் அர்த்தம் இருக்கும்.
காலண்டரில் காளை படம் மட்டுமே இருக்கிறது என்பதற்காக எல்லாம் மேலே போகிறது என்று இல்லை... நீங்கள் இன்னும் டூட்டோரியல் பாடங்களைப் படிக்க வேண்டியுள்ளது.
இதுவரையில் கொடுக்கப்பட்ட பதிவுகளே அனைத்திற்கும் விடையாக இருப்பதால்... மீண்டும் நானே சொல்வதனைக் காட்டிலும்... நீங்கள் என்ன படித்தீர்கள் என்று டூட்டோரியல் பதிவு ஒவ்வொன்றில் பின்னேயும் 20 வரியில் தாங்கள் புரிந்ததை எழுதுங்கள் ... அதன் பின்னர் உங்களைப் புரிந்து கொண்டு நான் சொல்ல ஆரம்பிக்கிறேன்.