எச்சரிக்கை!!!ஒர் நிமிடத்தில் $700 அவுட்-பயப்படாதீங்க சும்மா

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

எச்சரிக்கை!!!ஒர் நிமிடத்தில் $700 அவுட்-பயப்படாதீங்க சும்மா

Post by ஆதித்தன் » Fri May 03, 2013 12:10 pm

எச்சரிக்கை!!!ஒர் நிமிடத்தில் $700 அவுட்
இது ஒர் எச்சரிக்கைப் பதிவு- கரணம் தப்பினால் மரணம்!!
ஃபோரக்ஸ் டிரேடிங்க் போல், அதிக வருவாய் கொடுக்கும் ஒர் வாய்ப்பு அதிகம் இல்லாதது போல, அதிகதோர் இழப்பினையும் நொடியில் கொடுத்துவிடும் என்பதனையும் பலர் அனுபவித்த ஒன்று. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.... அப்படி அனுபவித்தவர்கள் எல்லோருமே தெரியாமல் தான் செய்தார்களே தவிர, தெரிந்த அனுபவிக்கவில்லை.

ஆகையால் தான், அனுபவம் என்பதனைக் கொள்ள டெமோ அக்கவுண்ட் என்ற விருச்சுவல் மணி கொண்ட அக்கவுண்ட் எல்லோர்க்கும் கொடுக்கப்படுகிறது... நீங்கள் புதுமையாக கற்றுக் கொள்ளக்கூடிய எதுவானாலும் டெமோ அக்கவுண்டில் செய்து விளையாடிப் பாருங்கள்... உங்களது ரியல் அக்கவுண்டில் செய்துப் பார்க்காதீர்கள்.


ஏனெனில், நான் போரக்ஸில் இறங்கிய பொழுது எனக்கு சரியான ட்ரெயினிங்க் அக்கவுண்ட் கொடுக்கப்படவில்லை... கொடுத்ததும் 7 நாட்கள்.... அந்த 7 நாட்கள் நான் என்னவோ கொஞ்சம் கற்றுக் கொண்டாலும்... பலவற்றினைக் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால், அந்தக் கொஞ்ச கற்றலைக் கொண்டு ரியல் அக்கவுண்டில் இறங்கி... பல புதுமையான வழிமுறைகளைக் கண்டுபிடிக்கலாம்.. இப்படிச் செய்தால் என்ன நடக்கிறது, எப்படிச் செய்தால் என்ன நடக்கிறது.. இவர்கள் சொல்வதைச் செய்வோமே... அவர் சொல்வதனைச் செய்வோமே... என அப்படி இப்படி என எனது கன்றோலுக்கு இல்லாத விளையாட்டினால்... கொஞ்சம் பணத்தினை இழந்துவிட்டேன்.

பின்னர் உஷாராகி...நிதானமாக மார்கெட்டினை வாட்ச் செய்து....1 மாதம் அமைதியாக இருந்து..இது தான் சரியான மெதட் என நானே திட்டமிட்டு, இப்படித்தான் செய்ய வேண்டும் என..திட்டமிடுதலுடன் விளையாடுவதால்... கடந்த ஒர் மாதமாக இலாபம் அதிகம் சம்பாதிக்கவிட்டாலும், நஷ்டம் என்பதனைப் பார்க்கவே இல்லை.

அப்படி நஷ்டமே பார்க்காமல் வந்த நான், நேற்று மீண்டும் ஏதேனும்... புதிய ட்ரிக்ஸ் கண்டுபிடிப்போமே... என்ற முயற்சியில்.. ஃபொரெக்ஸ் மார்கெட்டினை நன்றாக அலசிக் கொண்டே இருந்த பொழுது.. ஒர் அற்புத கரன்சி ஒன்று என் கண்ணில் பட்டது... ஒர் குறிப்பிட்ட அப் அண்ட் டவுண் உடன் காணப்பட்ட அந்த கரன்சியினைப் பார்த்ததும்... நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. 500 டாலர் கொண்டு, எந்தவொரு இழப்பும் இல்லாமல் தினம் 100 டாலர் சம்பாதிக்கலாம் என எல்லாம் கால்குலேட் செய்து, ஒர் ஆர்டரைப் போட்டப் பார்த்தால்... போட்டப் பின் தான் தெரியுது.. நமக்கு நாமே சூனியம் வைச்சிட்டோம்னு.... ஆமாங்க... நான் போட்ட கால்குலேசனை அவங்க அப்படி திருப்பிப் போட்டு வைத்திருக்கிறார்கள் என்பதனை, எங்கோ படித்த பொழுது... இங்கிருந்தால் இவ்வளவு ஸ்பிரட்... இங்கிருந்தா இவ்வளவு ஸ்பிரட் என ஒர் சில முக்கிய கரன்சிகளுக்கு கொடுத்திருந்தது நினைவுக்கு வந்தது... ஆம், இங்கும் அப்படித்தான் நடந்துவிட்டது... நான் ஒர் கால்குலேஷன் போட.... ஸ்பிரட் கால்குலேசன் கீழ் செல்லும் பொழுது மாறிவிட்டதால்.. நான் போட்ட இலாபக் கணக்கு, நட்டக் கணக்காக மாறிவிட்டது... அதாவது ஆர்டர் போட்டாலே உனக்கு ஆப்புத்தாண்டி... என அப்போதுதான் உணர்ந்தேன்.

சரி, அதுதான் நடந்திடுச்சின்னா... அத்தோடு விட வேண்டியதுதானே... ஆனாலும், அதன் மீது இருந்த மோகம் எனக்கு விடவில்லை.... ஏனெனில் இழப்பு என்பது கன்ரோலுக்குள் இருப்பதால், இலாபம் என்பதனை கன்றோலுக்கு கொண்டு வந்துவிட்டால்... எளிதாக நஷ்டம் இல்லாமல் சம்பாதிக்கலாம் என்பதற்காக, அந்த கரன்சியினை திறந்து அப்படி இப்படி என்று கால்குலேஷன் போட்டுக் கொண்டே இருந்தேன்... அப்படி ரொம்ப நேரமாக கால்குலேசன் போட்ட நான்....ஏதோ ரொ ஐடி உதித்தது போல உணர... ரைட்... இப்படிப் போட்டா ஒகே... என்று ஆர்டரை போட... அந்த ஆர்டர் சைஸ் பிக் சைசாகப் போனதால்... அதாவது என் ஈக்குவிட்டிக்கு தாங்காத ஆர்டராக போனதால்... போட்ட செகண்டில் நானே மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.. அப்படி மூடாவிட்டால், அடுத்த டவுனில் என் கணக்கில் இருக்கும் எல்லா பணத்தினையும் அது சாப்பிட்டுவிடும்.

இதனை நான் ஏன் சொல்ல வருகிறேன் என்றால்... எல்லாம் சரியாக கணக்கீடு செய்தவன்... கடைசி நிமிடம் ஆர்டர் போடும் பொழுது, ஆர்டர் சைசினை பார்க்க தவறியதால்.. 700$ அவுட்... அதனையே சரியான ஆர்டர் சைசில் போட்டிருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்குமா????


ஆகையால், ஆர்டர் போடும் பொழுது மிகவும் கவனமாக செயல்படுங்கள்... அதில் நிறைய கரன்சி இருக்கும்... எந்தெந்த கரன்சி எந்தெந்த திசைக்கு, எந்தெந்த நேரத்தில் செல்லும் என்பதனை எல்லாம் சரியாக கணிக்கத் தெரிந்தால் மட்டும், உள்ளே இறங்கி ஆர்டர் போடுங்கள்... சும்மா கண்ட கண்ட கரன்சி மீது ஆர்டர் போட்டு பழகிப் பார்க்க வேண்டும் என்றால் டெமோ அக்கவுண்டினை தேர்வு செய்து பழகுங்கள்... ரியல் அக்கவுண்டில் செய்யாதீர்கள்.


நான் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் சக்சஸ் ட்ரிக்ஸ் பார்முலாவை உருவாக்கும் முயற்சியினை எனது டெமோ அக்கவுண்டில் செய்து பார்த்ததால்... 700$ போனது விருச்சுவல் மணி தான், என்னுடையது அல்ல. நான் ஏற்கனவே சொன்னது போல, விருச்சுவல் மணியாக இருந்தால் என் மணி போன்று நினைத்து செயல்படுபவன்... இழந்த 700$ எப்படி எடுப்பது என்பதனை பார்த்துவிட்டு, அப்படியே ட்ரேடிங்க் ட்ரிக்ஸினை வெற்றிகரமாக பயன்படுத்தி வென்றுவிட்டாலும் எல்லோர்க்கும் சொல்கிறேன்... அதுமட்டும் சக்சஸ் ஆகிடிச்சி... அப்புறம் கஷ்டம் இல்லாமல், நஷ்டம் இல்லாமல் தினம் 50 டாலர் எளிதாக பார்க்கலாம்.


என்ன இருந்தாலும், நீங்க ஆர்டர் போடும் பொழுது ஆர்டர் சைஸ், ஈக்குவிட்டி, ஆர்டர் பாயிண்ட், மார்கெட் மூவ்மெண்ட் என எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்து செயல்படுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”