April 26th Intraday Forex Trading Market Signal in Tamil

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

April 26th Intraday Forex Trading Market Signal in Tamil

Post by ஆதித்தன் » Fri Apr 26, 2013 11:06 am

Image

Deal Option : BUY
DEAL POINT : 1.3010 & near
Market Movement : upside 1.3010 to 1.3090
Stop Loss : 15 pips (1.2995)
Take Profit : 10 pips ++


Resistance Point : 1.3083 & 1.3130
Pivot Point : 1.3040
Support Point : 1.3010 & 1.2950


இறங்கு முகமாக வந்த மார்கெட், நேற்று நாம் கருதியது போலவே இடையில் தனது டவுன்லைனை உடைத்து, 1.3081 என்ற புள்ளியினை தாண்டி சென்றிருப்பதோடு, ஏறுமுகத்திற்கான புதிய ட்ரெண்ட் லைனையும் உருவாக்கம் செய்துவிட்டது. ஏறுமுகம் உடனடியாக மாறாது என்ற நம்பிக்கையோடு, இன்றும் அப்ட்ரெண்ட் மூவ்மெண்ட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், நேற்றைய விலைப்புள்ளி 1.3024 எனக் கொடுக்கப்பட்டது, இன்று அதற்கும் குறைவாக 1.3010 என்ற புள்ளியினை பை ஆர்டர்க்கு தேர்வு செய்திருக்கிறோம். ஆகையால் கவனத்துடன் ஆர்டரை புக் செய்யுங்கள்.




குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால், ஸ்டாப் லாஸ் இல்லாமல் 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி இலாபத்தினைப் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: April 26th Intraday Forex Trading Market Signal in Tamil

Post by ஆதித்தன் » Fri Apr 26, 2013 11:38 am

இன்று வாரத்தின் கடைசி நாள், மார்கெட் மாலைக்குள் சூடுபிடித்து அடங்கிவிடும்.

நேற்று எல்லோரும் இறங்குமுகம் என்று சொல்லியிருந்த போதிலும், நான் தைரியமாக ஏறுமுகம் என்று சொல்லியிருந்தேன்... அதன்படி ஏறுமுகமாகவே முடிந்துவிட்டது. ஆனால், எதிர்பார்த்த நெகட்டிவ் அமெரிக்க டேட்டா, பாசிட்டிவ் டேட்டாவாக மாறிய காரணத்தினால், மார்கெட் எதிர்பார்த்த உச்சத்தினை தொடாமல், இன்றைய சப்போர்ட் லைனை மேலும் இறங்க வைத்துவிட்டது. அதைப்போல், நேற்றைய ஏற்றம் என்பது, நான் கணக்கில் கொள்ளாத இங்கிலாந்து டேட்டாவால் நடந்துள்ளது.... நேற்று GBP/USD என்ற கரன்சி, ஒர் மணி நேரத்தில் 250 பைப்ஸ் மேல் நோக்கிச் சென்றுவிட்டது. அதில் ஏற்பட்ட அடியினால் தான், நமது கரன்சியிலும் ஒர் சின்ன உயரம் அந்த நேரத்தில் ஏற்பட்டிருக்கிறது. இப்படி, எந்தப் பக்கத்திலிருந்து தாக்குதல் நடக்கும் என்பதனை முழுமையாக யாராலும் சொல்ல முடியவில்லை... ஆகையால் தான்... ஏற்றம் எனபது 50 பைப்புக்கு மேல் இருந்தாலும் 10 பைப்போடு வெளியேறிவிடுங்கள் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

இதனை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், நேற்றைய முந்தைய நாள் ஒர் பதிவினை பேஸ்புக்கில் படிக்க நேரிட்டது... அதில், நீங்க தானே தங்கத்தினை வாங்கச் சொன்னீர்கள்... இப்பொழுது பாருங்கள்... இப்படி விலை குறைந்து ... ரொம்ப லாஸ் ஆகிவிட்டது... இப்ப என்ன செய்வது??? என்று சிக்னல் கொடுத்தவரிடமே எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள்...

அதற்கு அவர் கொடுத்த விளக்கம், சிக்னல் கூடவே ஸ்டாப் லாஸ் என்ற ஒன்று கொடுக்கப்பட்டிருந்ததே, அதனை கவனிக்கவில்லையா? அதனைச் செய்திருந்தால், ஏன் இவ்வளவு லாஸ் ஆகுது??? எனத் திருப்பிக் கேட்கிறார்...

பாரக்ஸ் ட்ரேடிங்க் என்பதனைப் பொறுத்தவரைக்கும், 15 பைப்ஸ் ஸ்டாப் லாஸ் என்பது போதாத ஒன்று.... ஏனெனில் திடீரென 50 பைப்ஸ் னெகட்டிவ் போகும்.... சிறிது நேரத்தில் 30 பைஸ் ரிட்டன் ஆகிவிடும்.... சரியாக ஆர்டர் போட்டோம் என்றால் கொஞ்சம் நேரம் போனால்... நெகட்டிவ் அப்படியே பாசிட்டிவ் ஆகிவிடும்... இதுக்கு ஸ்டாப் லாஸ் கொடுத்தோம் என்றால், நம்மையே பதம் பார்க்கும் ஒர் எதிர்முனை கத்தி மாதிரி... ஆகையால், ஸ்டாப் லாசுக்குப் பதில், மார்கெட்டின் எதிர் போக்கிற்கு தகுந்தவாறு, நீங்களும் விளையாடி வெல்லுங்கள் என்பதுதான் எனது சொல்., அதன்படி ட்ரேடிங்க் விளையாட்டினைக் கற்றுக் கொண்டு, சரியான ஈக்குவிட்டி பேலன்ஸ் கொண்டு களத்தில் இறங்கினால், நட்டம் இல்லாமல் தப்பிக்கலாம். ஏனெனில் போரக்ஸ் ட்ரேடிங்க் மார்கெட் நாம் விளையாடுவதற்கு ஏற்றவாறு தினம் 500 பைப்ஸ்க்கு மேல் அப் & டவுன் ஆகுகிறது... அதில் 10 பைப்ஸ் எடுப்பது ஒன்றும் கஷ்டமில்லை. ஆனால், சரியான நேரத்தில் ஆர்டர் ப்ளேஸிங்க் செய்தால் தான், டென்சன் இல்லாமல் சம்பாதிக்க முடியும்... இல்லாவிட்டால் நெகட்டிவ் போய்... பின்னர் அதனை பாசிட்டிவ் கொண்டு வருவதற்குள் பெரிய டென்ஸன் ஆகிவிடும். ஏன்னா... பணம் ...பணம்!!!

இங்கே நானும் சிக்னல் என்று கொடுப்பதற்கு முன், என்னை நம்பாதீர்கள் என்றே முதன்மையாக கொடுத்துள்ளேன்... ஆனால், எந்து சொல்லைக் கொஞ்சம் கேளுங்கள்... பின் யோசியுங்கள்.... தொடர்ந்து டொமோ அக்கவுண்டில் செய்து பாருங்கள்.. வெற்றி 80% கிடைக்கிறதா? எனப் பாருங்கள்... பின் தொடர்ச்சியாக நம்பலாம். அதே நேரத்தில், நெகட்டிவாக போவதனை எப்படி எதிர் ஆர்டர் மூலம் பாசிட்டிவாக மாற்றுவது என்ற டிப்ஸ்சும் சொல்லியிருக்கிறேன்... அதன்படியும் விளையாடிப் பாருங்கள். இப்படி பயிற்சியின் மூலம் விளையாடக் கற்றுவிட்டு, ட்ரேடிங்க் செய்தால்... இதைப்போல் எளிதான வருவாய் கொடுப்பது ஏதும் இல்லை என்று நீங்களே சொல்வீர்கள்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: April 26th Intraday Forex Trading Market Signal in Tamil

Post by ஆதித்தன் » Fri Apr 26, 2013 11:48 am

1.3015 என்றப் புள்ளியில் டபுள் பாட்டம் உருவாகியிருக்கிறது... ஆனாலும் என்னும் இறங்குமுகத்தினை இழக்கவில்லை... இழந்து ஏறுமுகத்தினைப் பார்க்கும் பொழுது பை ஆர்டர் போடுங்கள்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: April 26th Intraday Forex Trading Market Signal in Tamil

Post by ஆதித்தன் » Fri Apr 26, 2013 1:05 pm

ஏறியது மீண்டும் இறங்கிவிட்டது... ஏறுமுகத்தில் ஆர்டர் போட்டவர்கள் ஏற்கனவே 10 பைப்பில் தப்பியிருக்கலாம். இல்லை மாட்டிக் கொண்டேன் என்பவர்கள் இப்போது கிடைக்கும் வாய்ப்பில் கிடைக்கும் இலாபத்துடன் க்ளோஸ் செய்து கொள்ளூங்கள். ஏனெனில், EURO Central Bank interest rate cute பிரச்சனை என்னும் தொடர்வதால் எதிர்பார்க்கும் ஏற்றம் இருப்பது சந்தேகத்திற்கு உள்ளாகிவிட்டது... இதன் முடிவு இந்த வாரம் என்று சொன்னவர்கள், அடுத்த வாரம் என நாட்களை தள்ளிச் சென்றுவிட்டனர்.... ஆகையால், பிவோட் பாயிண்டில் 4 நாட்களாக நீடித்த EUR/USD அடுத்த வாரம் தான் அதன் முழுமுகத்தினை காட்டும்... இப்போதைக்கு, மார்கெட் என்னும் கொஞ்சம் ஏறும் என்றாலும்... சேப்டியாக தப்பித்துக் கொள்ளுங்கள்... பின் நல்லதொரு வாய்ப்புக்காக காத்திருப்போம்....


அதாவது ஏற்றத்தில் செல் ஆர்டர் போட காத்திருக்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”