Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்

Post by ஆதித்தன் » Tue Apr 23, 2013 9:17 pm

prabhu11 wrote:Image

சார் 4 மணி நேர சார்ட்டில் ஒரு HEAD AND SHOULDER PATTERN உருவாகி இருப்பதால் கரடியின் ஆதிக்கமே அதிகரித்து வரும் நாட்களில் 1.2850 வரை வரும் வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது.பொறுத்திருந்து பார்ப்போம்.தங்கள் கணிப்பு எப்படி?

சார்,

படத்துல, முந்தையப் பகுதி இல்லாத காரணத்தினால்.... நான் பர்ஸ்ட் குழம்பிட்டேன்...


Image
அப்புறம் நானும் 4 அவர் சார்ட் எடுத்துப் பார்த்தால், Body கிடைச்சது.... அதனை வைத்தே, இன்றைய சிக்னலை தயார் செய்து... அதன் படி 1.3030 என்ற டார்கெட்டினை நோட்டமிட்டு ..... 1.3024 என்ற இடத்தில் ஒர் ஆர்டரைப் போட்டு.... முந்தைய ஆர்டர் + இந்த ஆர்டர் => இலாபம் என டேலி செய்து.... வெற்றிகரமாக நேற்றைய ஆர்டரையும் சேர்த்து க்ளோஸ் செய்திட்டேன்.

அதுவும் சாப்பிட்டு வரதுக்குள் க்ளோஸ் ஆயிடும் என்ற நம்பிக்கையில் ... ஆட்டோ எக்ஸ்க்யூட் போட்டது... போட்டப்படி க்லோஸ் ஆகிவிட்டது..


மேல் உள்ள வரைப்படத்தில் நான் Cyprus என நோட் செய்திருப்பது.... ஒர் நாள் திங்கள் கிழமை.... மார்கெட் திறக்கும் பொழுதே 120 பைப்ஸ் டவுன் .... ஏன்னா... சிப்ரஸ் நாட்டில் முக்கிய வங்கி ஒன்று திவாலால் மூடப்பட்டது.... அப்புறம் 15 நாட்கள் கழித்து.... பேசி வாங்கி திறந்தார்கள்.... அப்புறம் தான் ... ஏறுமுகம் கண்டது.
:thanks: :thanks:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்

Post by கிருஷ்ணன் » Tue Apr 23, 2013 10:28 pm

ரியல் அக்கௌண்டில் பயந்து பயந்து ஆர்டர் செய்து பழகிவிட்டதால் ஒரு சேஞ்ச்க்காக டெமொ அக்கௌண்டில் மனம் போல் லீவ்ரேஜ் (1;3)எடுத்து விளையாடி எனது ஃபாரெக்ஸ் டெமொ அக்கௌண்டில் இதுவரை 824$ லாபத்தில் உள்ளேன்.விரைவில் ரியல் ட்ரேடிங் செய்து நல்ல இலாபம் சம்பாதிக்க தங்களுடனான இந்த பதிவுகள் உதவும் என் நினைக்கிறேன்.நன்றி.

ஆனாலும் ஃபாரெக்ஸ் அசுர வேகம்தான்.கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டுதான் ட்ரேட் செய்ய வேண்டும் போலிருக்கிறது.தாங்கள் அசராமல் அனைத்து பணிகளையும் எப்படித்தான் சமாளிக்கிறீர்களோ?.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்

Post by ஆதித்தன் » Tue Apr 23, 2013 10:57 pm

ஆம்,,,,

மிகவும் கவனமாக இருக்க வேண்டும்....

மார்கெட் நத்தை வேகத்தில் செல்கிறது என்றால்.... குதிரையையும் தாண்டிய ஒர் வேகம், தனது டார்கெட்டினைத் தொடச் செல்லும் என்பதனை அவ்வப் பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

உதாரணத்திற்கு நேற்று எந்தவொர் பெரிய அப்/டவுன் இல்லை. ஆனால், அதனை தீர்க்க இன்று மதியம் 1 மணி நேரத்தில் 100 பைப் இறங்கியுள்ளது.


அதைப்போல் இப்போது பாயிண்ட் இருக்குமிடம், இறங்குமுகம் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை... இது ஒர் பிவோட் பாயிண்ட்.


இந்த இடத்திலிருந்து

ஏறினால் > 1.340
இறங்கினால் > 1.276


ஒர் பக்கம், ஈரோ வளர்ச்சியினைப் பார்த்து ஆச்சர்யப்படுபவர்கள் இருப்பதனைப் பார்த்தால், விரைவில் கவுத்திடுவார்கள் என்றே தெரிகிறது.... ஆனால், ஈரோவினை கவுக்க நினைக்கும் முயற்சியினை, ஒவ்வொரு அமெரிக்க நெகட்டிவ் டேட்டாவும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது..... ஆக இப்படியே 5 நாட்களாய் நடந்து கொண்டிருக்கிறது... மற்றப்படி, மார்கெட் முகம், ஏறுமுகம் தான் என்பதனை .... இதே 4 அவர் சார்ட்டினை என்னும் சுருட்டிப் பார்த்தால் தெரியும்....
mkmuthu
Posts: 1
Joined: Tue Jul 15, 2014 12:36 pm
Cash on hand: Locked

Re: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்

Post by mkmuthu » Thu Jul 31, 2014 8:19 pm

சார் நான் கரூர் வய்ஸ்ய பங்கிக்கில்
கணக்கு வைத்திருக்கிறேன் என்னுடைய டெப்பிட் கார்ட் விசா கார்ட் வைத்திருக்கிறேன் ரியல் அக்கௌந்ட்டில் பணத்தை டெபாஸிட் செய்ய முடிமா.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்

Post by ஆதித்தன் » Thu Jul 31, 2014 8:28 pm

mkmuthu wrote:சார் நான் கரூர் வய்ஸ்ய பங்கிக்கில்
கணக்கு வைத்திருக்கிறேன் என்னுடைய டெப்பிட் கார்ட் விசா கார்ட் வைத்திருக்கிறேன் ரியல் அக்கௌந்ட்டில் பணத்தை டெபாஸிட் செய்ய முடிமா.
பணத்தினை டெபாசிட் செய்ய முடியும்.
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்

Post by தயாளன் » Sat Sep 20, 2014 5:55 pm

சார் .இந்த பதிவில் உள்ள இமேஜை பார்க்கமுடியவில்லை.தயவுசெய்து சரி செய்ய முடியுமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்

Post by ஆதித்தன் » Sat Sep 20, 2014 6:10 pm

தயாளன் wrote:சார் .இந்த பதிவில் உள்ள இமேஜை பார்க்கமுடியவில்லை.தயவுசெய்து சரி செய்ய முடியுமா?
image dead ஆகிவிட்டது ... அதற்கு மாற்று இமேஜ் நாளை அப்டேட் செய்கிறேன்.
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்

Post by தயாளன் » Sat Sep 20, 2014 6:16 pm

ஓகே சார்.....
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”