தங்கம் மீது ஏற்படும் ட்ரேடிங்க் குறைக்க புதிய பாண்ட்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தங்கம் மீது ஏற்படும் ட்ரேடிங்க் குறைக்க புதிய பாண்ட்

Post by ஆதித்தன் » Thu Apr 18, 2013 11:09 pm

தங்கம் விற்பனைக்கு ஒர் நல்லதொரு பெரிய சந்தை எது என எடுத்துக் கொண்டு அதில் இந்தியாவும் ஒர் முக்கியப் பங்கு வகிக்கும். அந்த அளவுக்கு இந்தியப் பெண்களுக்கு தங்கத்தின் மீது அளாதி ப்ரியம். அதைப்போல், அந்த ப்ரியத்தினால் ஏற்படும் நிரந்தர விலை உயர்வால், ட்ரேடர்களுக்கும் அதன் மீது அளாதி பிரியம். தங்கத்தின் மீது இன்வஸ்ட்மெண்ட் செய்தால் கண்டிப்பாக விலை ஏற்றத்துடன் முடியும் என நீண்ட நாள் ட்ரேடிங்க் எண்ணத்துடன் தங்கத்தின் மீது ட்ரேடு செய்து மேலும் பற்றாக்குறையை நிழலாக உருவாக்கி விலை ஏற்றத்திற்கு காரணமாக உள்ளனர்.


நமது மத்திய பைனான்ஸ் மினிஸ்டர் திரு சிதம்பரம் அவர்கள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தங்கத்தின் மீது ஒர் கண்ணாகவே உள்ளார். தங்கம் அதிகம் வாங்காதீர்கள் என அட்வைஸ் கொடுக்கிறார், வரியினைக் கூட்டிப் பார்க்கிறார். இப்போது, தங்கத்திற்கு பதிலாக இன்வஸ்ட்மெண்ட்க்கு ஏற்ற நல்லதொரு பாண்ட் திட்டத்தினை வெளியிடப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இது பண வீக்கத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்று எனச் சொல்கிறார்கள். விரைவில் ரிசர்வ் பேங்கில் அனுமதி பெற்று, இந்தியப் பங்குச் சந்தைக்குள் அடியெடுக்கும் என நம்பலாம்.

பாண்ட் வந்துட்டாலும் உடனே நம்ம மக்க .... தங்கத்த விட்டுட்டு பாண்டுக்கு தாவிடுவாங்க??? பொறுத்திருந்து பார்ப்போம்...


அவ்வாறு நடந்துவிட்டால்... உலகின் பிற பகுதியில் உள்ளவர்கள் தங்கத்தின் மீது இன்வஸ்மெண்ட் செய்திருந்தால் காலம் கஷ்டம் தான்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: தங்கம் மீது ஏற்படும் ட்ரேடிங்க் குறைக்க புதிய பாண்ட்

Post by கிருஷ்ணன் » Fri Apr 19, 2013 12:39 am

தங்கத்தைப் பற்றி நானே ஒரு பதிவிடலாம் என்றிருந்தேன்.தங்கத்தில் அதுவும் ஆபரணத்தில் முதலீடு என்பது கிட்டத்தட்ட ஒரு டெட் இன்வெஸ்ட்மெண்ட்தான்.நம் மக்களை பாதுகாப்பு என்ற வளையத்திற்குள் அடக்கி வைத்திருக்கும் ஒரு ரிங் மாஸ்டர்.அவ்வளவுதான் நம்மைப் (இந்தியர்கள்) பொறுத்த வரை அது மிகவும் செண்டிமென்டான விசயம்தான்.தங்கத்தின் மீதான முதலீட்டின் சராசரி வருமானம் ஆண்டிற்கு கணக்கிட்டால் அது நமது தபால்துறை வட்டிக்குத்தான் தேறும்.இந்திரவிகாஸ் பாண்ட் கூட ஏழரை வருடங்களில் டபுள் ஆகிவிடும்.இந்த வருடம் தங்கமும் வெள்ளியும் இறங்குமுகத்தை காணும் என்பதினை டெக்னிக்கல் முன்பே காட்டிவிட்டது.இந்த சார்ட்டைப் பார்த்தீர்களா? என்ன ஓன்றும் புரியவில்லையா? தங்கம் இந்த வருடத்தின் ஜனவரி மாத குறைந்த விலையை உடைத்து இறங்க ஆரம்பித்தவுடனே டெக்னிக்கல் கணிப்பு படி இந்த வருடம் முழுதும் அது ஜனவரி மாதத்தின் உயர் விலையை மீண்டும் உடைக்க வாய்ப்பில்லை என்பதுதான்.ஃப்யூச்சர் காண்ட்ராக்டில் தாரளமாக விற்று வைத்திருப்பீர்களானால்.....http://adf.ly/N0xra
jcharts (3).png
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தங்கம் மீது ஏற்படும் ட்ரேடிங்க் குறைக்க புதிய பாண்ட்

Post by ஆதித்தன் » Fri Apr 19, 2013 11:46 am

நீங்கள் சொல்வதும் சரி தான்.

அதைப்போல், எல்.ஐ.சி போன்றவற்றில் பணத்தினை இன்வஸ்ட்மெண்ட் செய்வதும் அத்தனை இலாபம் இல்லாத ஒன்று என்பதனை மக்கள் பொறுத்திருந்துதான் அறிவார்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”