
இந்த வாரத்தின் முதல் மூன்று நாட்களும் தங்கம் இலாபம் கொடுக்கும் வகையில் வர்த்தக நடப்பு நடந்துள்ளது.
முதல் நாளில் 1600 பாயிண்ட் இடைவெளியையும், இரண்டாம் நாளில் அதிகமாக 3600 பாயிண்ட் இடைவெளியையும், மூன்றாம் நாளில் 2500 பாயிண்ட் இடைவெளியையும் தனது வர்த்தகப் பாதை நடப்பில் உருவாக்கியுள்ளது, முழுமையான இலாப வர்த்தகத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்றைய முதல் கட்ட வர்த்தகம் அமைதியாக இருந்துள்ளது, அடுத்தக்கட்ட மாலை வர்த்தகம் வேகமாக இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இன்றைய நாளில் குறைந்தது 1000 பாயிண்ட் இடைவெளியினை மாலை வர்த்தகத்தில் உருவாக்கும் என நம்பலாம்.