Page 1 of 1

பெரிய வர்த்தக இலாபத்தினைக் கொடுத்த, நியூஸ் ட்ரேடிங்

Posted: Thu Jun 20, 2019 11:14 am
by ஆதித்தன்
பாரக்ஸ் வர்த்தகத்தின் மாதத்தில் சில நாட்கள் மட்டும் கிடைக்கும் வாய்ப்பாகிய நியூஸ் ட்ரேடிங் என்பது மிகவும் இலாபகரமான வர்த்தக நேரமாக பலராலும் விரும்பிச் செய்வது.

தினமும் வர்த்தக வாய்ப்புகளுக்கான நேரத்தினை பார்த்து செய்வது சின்ன இலாபத்தினைக் கொடுக்கிறது என்றால், நியூஸ் நேர வர்த்தகம் பெரிய இலாபத்தினைக் கொடுக்கும்.

நேற்றைய முக்கிய நியூஸ் வர்த்தகத்தில் மார்க்கெட் மிகப் பெரிய அளவில் இயக்கம் பெற்று மேஜர் கரன்சிகளான, இரோ டாலர், டாலர் யென், பவுண்ட் டாலர் மற்றும் தங்கம் ஆகியவற்றில் பெரிய மாற்றத்தினை டாலர்க்கு எதிராக உருவாக்கியுள்ளது.

தங்கம், 3500 பாயிண்ட் விலை மாற்றத்தினை சந்தித்துள்ளது.

அதிகப்படியான இடைவெளி என்பது, அதிகமான இலாபத்தினை கொடுக்கும் வாய்ப்பு. அதனை பயன்படுத்தும் விதத்தில் மார்க்கெட் ரிகுவாட் இல்லாமல் நகர்ந்து செல்வது, அதி பெரிய வாய்ப்பு.

நேற்றைய நாள் வர்த்தகமும் அவ்வாறு அடுத்தடுத்த ஆர்டர்களை போட்டு பின் இயங்கி வெற்றியாக இலாபம் சம்பாதிக்கும் அளவில் வேகத்திலும் வாய்ப்பினைக் கொடுத்து இயங்கியது நலம்.