தங்கம் தினசரி வர்த்தகத்திற்கு உகந்த பாரக்ஸ் ட்ரேடிங் பங்காக அமைந்துள்ளது. உலக அளவிலான வர்த்தகம் என்பதால், சைனா மார்க்கெட்டின் பொழுதே இதன் வர்த்தக நகர்வு நல்ல நிலையில் ஆரம்பித்துவிடுகிறது. அதாவது அதிகாலை 5 மணிக்கே இதன் வர்த்தக ஓட்டம் ஆரம்பித்து, ஒன்பது மணிக்குள் ஒர் இலாப நிலைக்கு எட்டிவிடுகிறது. அடுத்ததாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க வர்த்தக நேரத்தில் ஒர் நகர்வு என இரண்டு வர்த்த சூழலை ஒரே நாளில் பெரிய அளவில் கொண்டுள்ளதால், தங்கம் அதிகப்படியான வர்த்தக இடைவெளியினை ஒவ்வொரு நாளும் கொண்டிருப்பது, இலாபத்தினை உறுதிப்படுத்துகிறது.
வாரத்தின் முதல் நாளில் 1000 பாயிண்ட் இடைவெளியை உருவாக்கி, கீழே சரிந்தது, மாலையில் மேல் எழும்பி ஆரம்ப இடத்திற்கு வந்துவிட்டது. இது, எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் வர்த்தகர்களுக்கு பெரிய இலாபத்தினை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
பாரக்ஸ் தங்கம் விலை : 1341 டாலர்
தினசரி இலாப வர்த்தகத்தில் பாரக்ஸ் தங்கம் - 1000 பாயிண்ட்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked