பிட்காயின் & ரிப்பிள் கிரிப்டோ கரன்சி ஒரே நாளில் 4% விலை உயர்வு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பிட்காயின் & ரிப்பிள் கிரிப்டோ கரன்சி ஒரே நாளில் 4% விலை உயர்வு

Post by ஆதித்தன் » Tue Jun 18, 2019 8:16 am

கிரிப்ட்டோ கரன்சி மீண்டும் தனது வேகமான விவேகமான விலை உயர்வினை நோக்கி புதிய உச்சத்தினை தொட ஏறிக் கொண்டிருக்கிறது. தற்பொழுது ஆண்டில் ஆறாவது மாதம்தான் ஆகிறது. மேலும் ஐந்து மாதம் பெரிய முதலீட்டாளர்கள் முதலீட்டினை எடுத்து செலவு செய்ய இருப்பதால், தற்போதைய நிலையில் கிரிப்ட்டோ கரன்சி என்பது பணத்தினை இரட்டிப்பாக 200% ஆக்குவதற்கான சிறந்த முதலீடு சார்ந்த பங்காக அமைந்துள்ளது.

ஒர் ஆண்டிற்கு முன்னர் பிட்காயின் மிகப்பெரிய வளர்ச்சியினை உலக அளவில் பெற்றிருந்தது. அதன் மூலம் பெரிய இலாபத்தினைப் பார்த்தவர்கள் திரும்ப முதலீடு செய்தாலே, இந்த ஆண்டும் பழைய உச்சத்தினைக் காட்டிலும் புதிய பெரிய உச்ச விலையை எட்டும் என பெரிய அளவில் மீடியாக்களில் பேசப்படுகிறது. ஒர் பிட்காயின் ஒர் இலட்சம் டாலர் விலைக்கு வர்த்தகம் ஆகும் என்பது பெரிய எதிர்பார்ப்பு என்றுச் சொன்னாலும் நடந்துவிட்டால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று முதலீடு நாளும் பொழுதும் வளர்ச்சி அடைவதனைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

பிட்காயின் வளரும் பொழுது, அத்னோடு சேர்ந்து அல்ட் காயின்களும் வளர்ச்சியினை அடையும் என்பதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அல்ட் காயினில், ரிப்பிள் கிரிப்டோ கரன்சி நேற்றைய நாளில் மட்டும் 4.3% வளர்ச்சியினை அடைந்துள்ளது.

கிரிப்டோ கரன்சியில் மூன்றாவது பெரிய மார்க்கெட்டினை கொண்டுள்ள ரிப்பிள் கரன்சி ஒன்றின் விலை 0.44 $ ஆக தற்பொழுது உள்ளது. ஒர் டாலர் விலை கூட இல்லை அதிலும் பாதியாக உள்ளது.

ஆனால், முதலிடத்தில் இருக்கும் பிட்காயின் 9300 டாலர், இரண்டாவது இடத்தில் இருக்கும், எதிரியம் 270 டாலர், நான்காவது இடத்தில் இருக்கும் லைட்காயின் 135 டாலர், ஐந்தாவது இடத்தில் இருக்கும் பிட்காயின் கேஸ் 430 டாலர். இப்படி அதன் கூடச் சேர்ந்த டாப் ஐந்தில் உள்ள அனைத்தும் 250 டாலர்க்கு மேல் உயர்வான விலையில் தற்போதைய மார்க்கெட் நிலையில் இருந்தால், விலை உயர்வில் இது இரட்டிப்பு விலையாக உயரும் பொழுது குறைந்தப்பற்ற விலை 500 டாலராக உயரலாம்.

இப்படி அனைத்தும் பல மடங்கு உயர்வான விலையில் இருப்பதால், அதனுடன் சேர்ந்த ரிப்பிள் மிக வேகமாக 20 டாலர்க்கும் மேல் விலை ஏற்றத்தினை பெற்றத்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

இந்த ஆண்டில் 20 டாலர் விலை உயர்வினைப் பெற்றால், அதன் ரிட்டன் 4000% ஆக இருக்கும்... அதாவது ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் கிடைப்பது 40 மடங்கு அதிகமாகி, 40000 ரூபாய் ஆக கிடைக்கும்.

இத்தனை பெரிய இலாபத்தினை கிரிப்டோ கரன்சி வாங்குவதில் மூலம் சம்பாதிக்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”