Page 1 of 1

கரன்சி ட்ரேடிங் இரோ, யென் & டாலர்

Posted: Thu Jun 13, 2019 8:57 am
by ஆதித்தன்
நேற்றைய வர்த்தகம் டாலர்க்கு சாதகமாக, இரோ மற்றும் யென் கரன்சி இணையில் அமைந்து 400 பாயிண்ட் டாலர் தன் பக்கம் மார்க்கெட்டினை இழுத்துள்ளது.

இன்றைய நாளில் யென் கரன்சி தன் வலு மூலம், நேற்று இழந்த பாயிண்டினை இன்று காலையில் யென் வர்த்தக நேரத்தில் திரும்பப் பெற்றுவிட்டது.

டாலர் யென் தற்போதைய விலை 108.301

டாலர் யென் வர்த்தகம் நேற்றும் சரி, இன்று காலை வர்த்தக நேரமும் சரி இலாபகரமான சார்ட்டாக அமைந்துள்ளது.

பவுண்ட் டாலர் கரன்சி வர்த்தகமும் நேற்றைய நாளில் நல்ல இலாபம் கொடுப்பதாகவே, முதலில் 400 பாயிண்ட் மேல் பக்கமும், பின்னர் டாலர் மார்க்கெட்டில் அங்கிருந்து 700 பாயிண்ட் கீழே இறங்கி, நேற்றைய நாளில் டாலர்க்கு சாதகமாக 300 பாயிண்ட் இறங்கியுள்ளது. 700 பாயிண்ட் மார்க்கெட் இடைவெளி சார்ட், நல்ல இலாபத்தினை ட்ரேடிங் செய்பவர்களுக்கு உருவாக்கியுள்ளது.

இரோ டாலர் கரன்சி பொறுத்தவரைக்கும், டாலர் தன் வலு மூலம் 400 பாயின்ட் கீழே இறங்கியுள்ளது. இரோ பெரிதாக தன் வலுவினை காட்டவில்லை. ஒரே பக்கமாக 400 பாயிண்ட் இடைவெளி இலாபத்தினை சார்ட்டில் அமைத்துள்ளது.