Page 1 of 1

இரண்டாவது வாரத்தில் முதல் 2 நாட்கள் கரன்சி வர்த்தகம்

Posted: Wed Jun 12, 2019 7:07 am
by ஆதித்தன்
வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் கரன்சி மார்க்கெட்டில் பெரிதாக மூவ்மெண்ட் இல்லை. ஆகையால், ஆரம்பித்த இடத்துக்கே திரும்பி வருதல் என எந்தவொரு நபர்க்கும் சின்ன இலாபத்திற்கான வழியினை அமைத்துக் கொடுக்கும் வகையில் வர்த்தக சார்ட் அமைத்திருந்தது.

டாலர் யென் விலை 108.470

டாலர் யென் க்ரன்சி திங்கள் கிழமை ஆரம்பித்த இடத்தில் தான் இரண்டு நாட்கள் கழித்து புதன் காலையில் அமைந்துள்ளது. மேல் எழும்புவதும், கீழே விழுவது, மேல் எழும்புவதும் கீழே விழுவதும் என இரண்டு நாட்களும் நடந்துள்ளது. அடுத்து விவேகத்துடன் வேகமாக மேல் ஏறிவிடும் போல் தோன்றுகிறது.

இரோ டாலர் விலை 1.13300

இரோ டாலர் விலை திங்கள் கிழமை கீழ்பக்கம் சென்றது. இது கடைசி வெள்ளிக்கிழமை, மொத்தமாக டாலரின் சரிவினை அனைத்து கரன்சியிலும் காட்டிய செய்தி நிகழ்வுக்கு ரிவர்சல் போல், சனி ஞாயிறு நாட்கள் கடந்து மார்க்கெட் தொடங்கும் பொழுது ஒர் ரிவர்சலும், அதனைத் தொடர்ந்து திங்கள் கிழமை ஒர் ரிவர்சலும் என, 800 பாயிண்ட் சட்டென நியுசில் இழந்ததை டாலர் ரிவர்சலாக 400 பாயிண்ட் பெற்றுள்ளது.

ஒவ்வொரு பெரிய செய்தியும், மார்க்கெட்டில் சட்டென பெரிய விலை மாற்றத்தினை உருவாக்கினால் அது கண்டிப்பாக ரிவர்சல் இருக்கும் என்பதனை நாம் அறிந்ததுதான். அது, உடனே நடக்காது... சில நாட்களில் கூட நடக்கும் என்பதனை நாம் புரிந்து வர்த்தகத்தில் பாதுகாப்புடன் செயல்படுதல் வேண்டும்.