Page 1 of 1

பாரக்ஸ் மார்க்கெட் அனலைசிஸ்

Posted: Wed May 15, 2019 6:35 am
by ஆதித்தன்
நேற்றைய நாள் என்பது, இரோ/டாலர் மற்றும் பிரிட்டன்/டாலர் ஆகிய இரண்டு இணையும் இலாபத்திற்கு உகந்த வர்த்தக சூழலை தனது பிவோட் விலையிலிருந்து மேல் எழும்பிய பங்கினைக் காட்டிலும் இரண்டு பங்கு கீழிறங்கி உருவாகிவிட்டது. இரண்டில் அதிக இடைவெளி பிரிட்டன் டாலர் இணையில் அமைந்திருக்கிறது.

யென் டாலர் இணையினைப் பொறுத்தவரைக்கும், காளை ஆதிக்கமே முழுமையாக இருந்திருப்பதால் உறுதியான இலாபத்தினையே அனைவரும் பெற்றிருப்பர். ஏறிய 600 பாயிண்டில் 300 பாயிண்ட்டில் 300 பாயிண்ட் திரும்பியிருக்கிறது.

மூன்று இணையினையும் பார்க்கும் பொழுது டாலர் ஒட்டுமொத்த வலுவினை நேற்றைய மார்க்கெட்டில் காட்டியிருக்கிறது.

டாலரின் வலு தங்கத்திலும் பிரதிபலித்திருக்கிறது. தங்கம் நேற்று 850 பாயிண்ட் கீழிறங்கியுள்ளது.

தங்கம் அதிக அளவில் இடைவெளியினை கொண்டிருக்கிறதனை கவனிக்கவும்.