Page 1 of 1

பாரக்ஸ் வர்த்தக வெற்றிக்கு மிளகாய் சாப்பிடுங்கள்

Posted: Sun Sep 16, 2018 5:38 pm
by ஆதித்தன்
பாரக்ஸ் ட்ரேடிங் இலாபம் சம்பாதிக்க டெக்னிகல் அனலைசிஸ் & பண்டமெண்டல் அனலைசிஸ் நன்றாகக் கற்றுக் கொண்டால் தானே முடியும்.. அதென்ன மிளகாய் சாப்பிடச் சொல்கிறேன் என்று கொஞ்சம் அதிர்ச்சியாக உள்ளதா?

அதிர்ச்சியாக இருந்தாலும் அவசரத்தில் எதனையும் முன் முடிவாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

மிளகாய் திண்பதால் ஒன்றும் நாம் ஏற்கனவே கற்று வைத்திருப்பது ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. ஆனால் மூளை நரம்புகள் மேலும் உத்வேகத்துடன் இயங்க ஆரம்பிக்கும்.

காரத்தினை உண்பதால் வலது நாடி சுவாசம் இயங்க ஆரம்பிக்கும்.

வலது உயிர் நாடி சுவாசம் என்பது வேட்டையாடுதலுக்கான நாடி சுவாசம் ஆகும்.

வலது நாடியில் ஒருவர் போர்க்கு செல்கிறார் என்றால் வெற்றி கிட்டும் என்பது பண்டைய மரபு. ஆகையால், வலது நாடி சுவாசத்திலேயே சண்டைக்குச் செல்வர்.

இரண்டு பேருமே வலது நாடி சுவாசத்தில் இருக்கலாம் அல்லவா??? ஆமாம்... ஆனால், அந்த மரபு கூட முழுமையாக தெரியாத உலகம் தான் இது. ஆகையால், எதிரிக்கும் வலது நாடி ஓடும் என்பது இல்லை. நாம் புறப்படும் பொழுது நமது நாடியினை வலதாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதைப்போல், எதிரியின் நாடி இடதாக இருப்பதாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது நமது முன்னோர்கள் வகுத்தது.

வலது நாடி எந்த சூழலில் ஓடும்.. இடது நாடி எந்த சூழலில் ஓடும் என்பதனை தெரிந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆகையால், இடதினை வலதாக்கி, இடத்தில் இருப்பவர்களை வெல்லும் தந்திரக்காரர்கள். ஆனாலும், சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள். சத்தியம் தவறியவர்களால், இன்று நாம் வீழ்ந்து கிடக்கிறோம்.

எந்தச் செயலைச் செய்யும் முன்னும் காலம் பார்த்தே செய்தனர் நம் முன்னோர்கள். அதைப்போல், இராவணனை வெல்ல, எந்த நேரத்தில் போருக்குச் செல்ல வேண்டும் என்று இராமன் இராவணனிடமே நேரம் குறித்தான் என்பதுதான் வரலாறு. அந்த அளவுக்கு தொழிலில் சத்தியம் தவறாதவர்கள் நம் முன்னோர்கள். இராமனை எளிதில் வென்றுவிட முடியும் என்ற முழு நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு சிறந்த வீரர்களை வித்தைகள் அறிந்தவர்களை இராவணன் கொண்டிருந்ததால், கடைசி வரை சிந்தனை கொள்ளாமல் தோற்றான்... அதிலும், இராமன் வெல்ல, அகத்தியர் உதவியதாக கம்பன் பாடல் கூறுகிறதாம்.

பாரக்ஸ் வர்த்தகத்தில் வெல்லவும், நீங்கள் நல்ல நேரம் பார்த்து செயல்பட்டால் கண்டிப்பாக வெல்ல முடியும். அதைப்போல் கெட்ட நேரங்களில் ஒதுங்கிக் கொள்ளவும் முடியும்.

பிரபஞ்சம் நமக்கு நல்லதையே கொடுக்கும். ஒர் பொழுதும் கெடுதல் செய்யாது.

நாம் தோல்வி அடைய வேண்டும் என்பது பிரபஞ்சத்தின் ஆசை கிடையாது.

நமக்கு கொடுக்க வேண்டியதனை கொடுக்க வேண்டும் என்பதே பிரபஞ்ச விதி. நாம் சும்மா இருந்தாலும் கொடுக்க வேண்டியதனை கொடுத்தே தீரும்.. அதுவே சுக்கிர திசை என்பார்கள்.

நான் இப்பொழுது எனக்குத் தெரியும் என்று எதனையும் செய்வதும் இல்லை, இதனை என்னால் செய்திட முடியும் என்று கருதுவதும் இல்லை. அதாவது பாரக்ஸில் தினம் ஆர்டர் போட்டு சம்பாதிக்க முடியும் என்று கருதுவது இல்லை.

ஆனால், எனக்கு வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் கேட்கிறேன்... கேட்டதனை பெற்றுக் கொள்ள பாத்திரத்தினை வைத்திருக்கிறேன் அவ்ளதான். கொடுக்கிற தெய்வம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆம், நீங்கள் பெற்றுக் கொள்ள தயாராக இருங்கள்.

உங்களது உடலில் மின் காந்த சக்தியினை சுவாசத்தின் மூலம் வலுப்படுத்துங்கள்.. அதனை சுப ஓரையில் அறுவடை செய்யுங்கள்.

ஓரை அறிந்து செயல்படுவனை யாராலும் வெல்ல முடியாது என்று நீங்கள் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த ஓரைச் சாத்திரத்தின்படி நீங்களும் மிளகாய் சாப்பிட்டுவிட்டு வர்த்தகம் செய்ய ஆரம்பியுங்கள் வெற்றி கைகூடலாம்.

எப்பொழுதும், இல்லா இருப்பாகிய ஆதி உங்களுக்கு உதவி புரிவாள்.