Page 1 of 1

அரபியனுக்கு ஆப்பு - ஆயில் விலை சரிவு

Posted: Sat Jun 24, 2017 10:04 am
by ஆதித்தன்
அமெரிக்காவின் மிகப்பெரிய ஆயில் நிறுவனமான ஷெல் எடுத்த உற்பத்தி நடவடிக்கையின் காரணமாக ஆயில் வரத்து அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக அரேபிய நாடுகளின் கூட்டமைப்பான ஒபக் எடுத்த ஆயில் உறுபத்திக் கட்டுப்பாட்டு திட்டம் நிகழ்வில் இருந்தாலும் மார்க்கெட் லெவலில் ஷெல்லின் அதிகப்படியான சப்ளே காரணமாக விலை சரிவு ஆரம்பம் ஆகிவிட்டது.

எப்படியும் 80 டாலர் என்ற நிலைக்கு ஆயில் விலையை ஏற்றிச் செல்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த வேலையில் இரட்டிப்பு நிலையுடன் மார்க்கெட் சரிவினை நோக்கி இயங்க ஆரம்பித்துவிட்டது. அதாவது 27 டாலர் என்ற பாட்டம் நிலையிலிருந்து 54 டாலர் என்ற இரட்டிப்போடு திருப்தி அடைந்த நிலையில் விலை சரிவினைத் தொடங்க ஆரம்பித்துவிட்டது என்றுச் சொல்லலாம்.

ஆயிலுக்கான அடுத்தக்கட்ட டார்கெட் பாட்டத்தினை நோக்கி 20 டாலர் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விலை 43 டாலர் அருகே வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கையில், சரிவு என்பது இழப்பினை உருவாக்கலாம். ஆகையால் ஆயில் வர்த்தகத்தில் பை ஆர்டர் போட்டிருந்தால் குலோஸ் செய்து கொள்வது நல்லது.

எனது ஆயில் பை ஆர்டரும் மார்க்கெட் திறந்தவுடன் குளோஸ் செய்யப்படும்.