Page 1 of 1

பிட்காயின் தேடல் அதிகரிப்பு

Posted: Sat Jun 10, 2017 7:27 pm
by ஆதித்தன்
பிட்காயின் விலை ஒர் பக்கம் எக்கச்சக்கமாக எகிறிக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் மிகக் குறைந்த விலையில் பிட்காயின் வாங்கியதாக தகவல் பரவுகிறது. இதனால், குறைந்த விலையில் அதிக விலையில் விற்று உடனே இலாபம் பார்க்கலாம் என்ற தேடல் உருவாகி அதில் வெற்றி பெற்று பல இலட்சங்களை சம்பாதித்துக் கொண்டவர்கள் பலர்.

இப்பொழுதும் பிட்காயின் 100 டாலர்க்கு வாங்கினேன், எத்திரியம் 8 டாலர்க்கு வாங்கினேன் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

மிகக் குறைந்த விலையில் வாங்கியதாகத் தகவலைக் கேட்டவுடன், தனக்கும் கிடைக்காதா? எங்கு கிடைக்கும் குறைந்த விலை பிட்காயின்? என்றத் தேடல் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.

விருப்பத் தேடலைப் பயன்படுத்தி, சிலர் இல்லாத பொருளுக்கு விலை பேசி பணத்தினை வாங்கிவிட்டு காணமல் போகும் நிகழ்வுகள் ஒர் பக்கம் நடக்கிறது. ஆகையால், குறைந்த விலையில் பிட்காயின் கிடைக்கிறது என்ற ஆசையில், பணத்தினை இழந்துவிடாமல் இருக்க கொஞ்சம் விழிப்புடன் செயல்படுங்கள்.

Re: பிட்காயின் தேடல் அதிகரிப்பு

Posted: Sun Jun 11, 2017 3:42 pm
by marmayogi
நானும் கூட 250$ க்கு மூன்று பிட்காயின் வாங்கி 300$ க்கே வி்ற்றுவிட்டு வெளியேறினான் . அதை விற்காமல் இருந்திருந்தால் 9000$ லாபம் பார்த்திருக்கலாம் . யாருக்கு தெரியும் இப்படி பிட்காயின் அசுர வளர்ச்சி அடையும் என்று!!!!! :Bcry: