Page 1 of 1

தங்கத்தை பின்னுக்கு தள்ளிய பிட்காயின் கரன்சியை வாங்கலாமா?

Posted: Sun May 14, 2017 10:28 am
by ஆதித்தன்
இந்த வாரத்தில் பெரிய அளவில் பாரக்ஸ் மார்க்கெட்டில் பேசப்பட்ட கரன்சி என்னென்னு பார்த்தீங்கன்னா, அது டிஜிட்டல் கரன்சியான பிட்காயின் ஆகத்தான் இருக்கும்.

பிட்காயின் விலை உயர்வு என்பது ஒவ்வொரு வாரமும் புதிய உச்சத்தினை நோக்கிய பாதையில் மிக வேகமாக வளர்ந்து இன்று 1800 டாலர்க்கு போய்விட்டது.

இந்திய ரூபாய் மதிப்பில் சொல்லப்போனால், 27000 ரூபாயிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கும் டிஜிட்டல் கரன்சியான பிட்காயின் விலை மூன்று வருடத்தில் ஒர் இலட்சத்தில் இருபத்தியேழு ஆயிரம் ரூபாய் என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டது.

ஒர் இலட்சம் ரூபாய் விலை ஏறிவிட்டது என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அதற்கடுத்த ஆச்சர்யமாக, விரைவில் ஒர் பிட்காயின் விலை நான்கு இலட்சம் ரூபாய் என்ற நிலைக்கு உயர்ந்துவிடும் என்று மார்க்கெட் கணிப்பாளர்கள் தகவல் கொடுப்பதனை படிக்க முடிகிறது.

பிட்காயின் வளர்ச்சிப் பாதையில்தான் செல்கிறது என்பது உறதியாக நம்பமுடிகிறது.

அதே நேரத்தில் பாதுகாப்பாக பிட்காயினைப் பயன்படுத்துங்கள்.

பிட்காயின் பாரக்ஸ் மார்க்கெட்டுக்குள் இருப்பதால், பிட்காயின் முதலீடுகள் தங்கத்தின் முதலீட்டினை பாதிக்கும் என்று கணித்துள்ளனர். ஆகையால் பிட்காயின் விலை ஏற ஏற தங்கத்தின் விலைச் சரிவிற்கு சாதகமாக இருக்கும் என்ற கூற்றும் உலா வருகிறது.

பிட்காயின் முதலீடு என்பது தற்போதைய தகவல்படி செய்யலாம் என்பதுதான் என்னுடைய ஏற்பாகவும் உள்ளது.