Page 1 of 1

தாழ்வை எதிர்நோக்க இருக்கும் அலிபாபா

Posted: Thu May 11, 2017 10:58 am
by ஆதித்தன்
சீன நிறுவனமான அலிபாபா உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தனது இணையதளம் வழியாக பொருள் விற்பனையில் மேற் கொண்டு சிறப்பான வளர்ச்சியினை அடைந்திருப்பதோடு, பல்வேறு நிறுவனத்திலும் தனது பங்களிப்பாக முதலீடுகளை செய்து வருகிறது.

சினாப் ஜாட் நிறுவனத்திலும் அலிபாபா குறிப்பிடத்தக முதலீடுகளை பொது மார்க்கெட்டில் பங்கு வெளியாவதற்கு முன்னரே செய்துள்ளது. அதைப்போல், இந்தியாவில் பேடிஎம் ஆன்லைன் மொபைல் வாலட் நிறுவனத்திலும் பெரிய அளவில் முதலீடுகளை செய்துள்ளது.

அலிபாபாவின் பல்வேறு முதலீடுகள் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும் சில சரிவினையும் சந்தித்து வருகிறது.

இந்தியாவின் டிஜிட்டல் மயம் தனக்கு பெரிதும் இலாபத்தினைக் கொடுக்கும் என நம்பிய அலிபாபா தோல்வியினைச் சந்திக்க இருக்கலாம் என்பது தற்போதைய நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது தெரிகிறது.

அலிபாபா மார்க்கெட் பங்கின் விலை ஆரம்பக்கட்ட உச்சமான 120 டாலர் என்பதனை 58 டாலர் என்ற பாட்டத்திற்குச் சென்றப் பின்னர் மீண்டும் எட்டியுள்ளது, டபுள் ரெசிஸ்டன்ஸ் பேட்டர்ன் நிலையினை காட்டிக் கொண்டிருக்கிறது.

ஆகையால், இனி அலிபாபா பங்கு விலை 120 டாலரிலிருந்து சரிய ஆரம்பிக்கலாம்.