சரிவு பாதையில் பயணத்தினை தொடங்கிய பிட்காயின்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

சரிவு பாதையில் பயணத்தினை தொடங்கிய பிட்காயின்

Post by ஆதித்தன் » Fri Mar 17, 2017 5:57 am

மலைப் பாதையில் வாகனங்கள் ஏறும் பொழுது அதற்கான உச்சம் என்பது போடப்பட்டுள்ள பாதையினைப் பொறுத்து, போக வேண்டிய உயரம் என்பது தெளிவாக குறிக்கப்பட்டுவிடும். ஆகையால், சொல்லும் தொலைவுகள் சரியாக இருக்கும்.

ஆனால் ஆசையே எல்லையாகக் கொண்ட பங்குவர்த்தகத்தில் சொல்லும் உச்சத்தினை எல்லாம் சுயமாக சிந்தித்து முடிவெடுத்தால் மட்டுமே வெல்ல முடியும்.

ஏறுது... ஏறுது... எல்லாரும் வாங்குறாங்க என்றுச் சொல்லி நானும் வாங்கிருந்தால், அன்றைய நாளுக்குப் பின் நடந்து முடிந்த நாட்களைப் பார்க்கும் பொழுது இலாபம்தான். ஆனால், அருகே தென்படுவதனைக்காட்டிலும் செல்ல வேண்டிய தொலைவுக்கு தகுந்தாற்போல் தன்னைத் தயார்படுத்திச் செல்வது என்பது மிகவும் நல்லது என்பதால், சரிவினை இலக்கிட்டு போடப்பட்ட எனது ஆர்டர் கடந்த நாட்களில் கரடியின் வாய்க்குள் அகப்பட்டுக் கொண்டாலும், தற்பொழுது மீண்டு காளையின் முதுகில் சவாரி செய்ய ஆரம்பித்துவிட்டது. அதாவது போவது கீழே என்றுச் சொன்னாலும் சவாரி இலாபகரமான காளை சவாரிதான்.

பிட்காயினை ஒர் உச்சத்திற்கு கொண்டு சென்றவர்கள் அடுத்தக்கட்டமாக எதிரியத்தினை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்று அழகுபார்க்க இருக்கிறார்கள்.

இதற்காக, எனக்குத் தெரிந்து இடோரா நிறுவனர் எதிரியத்தின் மீது பெரிய அளவில் முதலீடு செய்துவிட்டு, அவர் தனது இலாபத்தினை உறுதியாக்க பிறரை எல்லாம் வாங்கச் சொல்லி, தன் விற்பனை விலையை இலாப விலையாக மாற்ற வெப்பினர் ஒன்று இடோரா தளத்தில் நடத்த அழைப்பிட்டுள்ளார்.

பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பது போல, அவர்களோடு சேர்ந்து முழுமையான இலாபத்தினை எடுக்க முடியாவிட்டாலும், ஆரம்பக்கட்டத்திலேயே உள்புகுந்து வாங்கிவிட்டு, அவர்கள் விற்கும் முன்னரே நாம் விற்றுவிட்டு வெளியேறிவிட்டால் இலாபம்.

ஏனெனில் இங்கு ஒன்றும் மரத்தினைப் போல் நீரை பழமாக்கிக் கொடுப்பது அல்ல, வந்த பணத்தினையே இலாபமாக வாங்கிக் கொள்வதும், பின் இவ்வளவுதான் விலை என்று நட்டப்படுத்துவதும் என ஒருவருக்கு ஒருவர் விலையை மாற்றிக் கொள்வதுதான்.

ஆகையால் கவனமாக ஆட்டத்தில் இறங்குங்கள், எதிரிய வாய்ப்பினை பயன்படுத்தியும் இம்மாதத்திற்கான இலாபத்தினை எடுத்துக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”