பிட்காயினுக்கு தற்பொழுது மாலையா? காலையா?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பிட்காயினுக்கு தற்பொழுது மாலையா? காலையா?

Post by ஆதித்தன் » Wed Mar 08, 2017 9:26 am

வாய்ப்புகள் என்பது திடீரென கிடைத்து சட்டென முடிந்துவிடுவது இயல்பு. அந்த வாய்ப்புக்கான நேரம் காலம் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?? ஆனால் கொஞ்சம் கடினம் தான் வாய்ப்பின் காலத்தின் வாய்ப்புகளை அறிந்து கொள்வது.

நேற்று திடீரென பிட்காயின் விலைச்சரிவு சீனாவின் கெடுபிடியால் உருவாகியது, இதனால் இந்திய பிட்காயின் மார்க்கெட்டிலும் விலைச் சரிவு என்பது பெரிய அளவில் வர்த்தகர்கள் கையாளுகையால் உருவாகியது.

1 இலட்சத்தில் இருந்த விலை திடீரென 55000-க்கு போனதும் பலருக்கு மூச்சு வாங்குவதில் மறதி ஏற்பட்டிருக்கக்கூடச் செய்யும். ஆனால், கொஞ்ச நேரத்தில் மார்க்கெட் சர்வதேச லெவலுக்கு கொஞ்சம் ஏறிவந்தது.

ஆனால் சர்வதேச மார்க்கெட்டிலும் ஒர் காலக் கேள்வி தற்போதைய உச்ச விலையால் ஏற்பட்டுள்ளது, அது பிட்காயின் காலை நேர சூரியன் போல் எழும்புமா? அல்லது மாலை நேர சூரியன் போல் சரியுமா? என்பதுதான். இதற்கான கேள்விப்பதில், BTC- ETF நிலைப்பாட்டில் இருக்கிறது.

BTC-ETF approval கிடைத்தால் தொடர்ந்து பிட்காயின் விலை மேல் செல்லும், கிடைக்காவிட்டால், விலை சரியும்.


தற்போதைய நிலவரம் உச்சம் என்பதால் வாங்குவதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”