Page 1 of 1

PayTM கம்பெனியின் 36.31% பங்கினை வாங்கிய அலிபாபா

Posted: Fri Mar 03, 2017 4:28 pm
by ஆதித்தன்
டிஜிட்டல் இந்தியாவின் முக்கிய ஆன்லைன் வாலட் ஆன பேடிஎம் கம்பெனியின் 36.31 சதவீத பங்குகளை அலிபாபா கம்பெனி $177 மில்லியன் முதலீட்டில் வாங்கியுள்ளது. (Alibaba.com Singapore E-Commerce Pvt Ltd)

பே டி எம் தற்பொழுது 200 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் அடுத்தக்கட்டமாக Paytm Payments Bank Ltd என்றப் பெயரில் வங்கி பணவர்த்தனை செயல்பாட்டிலும் இயங்க இருக்கிறது.

அலிபாபா தனது உள்நாடான சீனாவில் வளர்ச்சி மந்தம் ஆகிக் கொண்டிருக்கையில், இந்தியாவின் டிஜிட்டல் துறையில் உருவாகியுள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி, வருவாய் ஈட்ட Paytm கம்பெனியின் 36.31% பங்கினை வாங்கியுள்ளது, அதைப்போல் SAIF Partners' $23 மில்லியன் தொகையில் 4.66% பங்குகளை கையகப்படுத்தியுள்ளது.

அலிபாபாவின் புதிய முதலீடு இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை கொள்கையை ஊக்குவிக்க பெரிதும் உதவும்.