தங்கம் விலைக்கு விற்குது பிட்காயின்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தங்கம் விலைக்கு விற்குது பிட்காயின்

Post by ஆதித்தன் » Fri Mar 03, 2017 11:15 am

டிஜிட்டல் கரன்சியான பிட்காயின் தற்பொழுது மார்க்கெட்டில் தங்கத்திற்கு நிகரான விலையில் விற்பனை ஆகிக் கொண்டிருப்பது பலரது புருவத்தினையும் உயர்த்திப் பார்க்க வைக்கிறது. பிட்காயின் கரன்சியில் முதலீடு செய்வதில் அலட்சியப்படுத்தியவர்கள், தற்பொழுது சரியான வாய்ப்பினை தவறவிட்டுவிட்டோமோ என்று சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

இன்றைய நிலவரத்தில் மார்க்கெட்டில்,
ஒர் அவுன்ஸ் தங்கம் விலை = $1233
ஒர் பிட்காயின் விலை = $1259

இன்றைய நிலவரத்தில் தங்கத்தின் விலையைக் காட்டிலும் கூடுதல் விலையில் ட்ரேடிங் ஆகிக் கொண்டிருக்கும் பிட்காயின் மார்க்கெட்டில் மொத்த மூலதன மதிப்பு $20,394,971,051.

20 பில்லியன் டாலர் மூலதன மதிப்புடைய பிட்காயினை ஃபியாட் கரன்சியான டாலர் இணையுடன் எக்சேஞ்ச் ஆகிக் கொண்டிருப்பதனை அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை மையமாகக் கொண்ட The Securities & Exchange Commission (SEC) என்ற அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு வருடங்களாக அமைதியாக இருந்த SEC , தற்போதைய பிட்காயின் மார்க்கெட் நிலவரத்தினையும், வர்த்தகர்களிடையே உருவாக்கியிருக்கும் வரவேற்பினையும் கணக்கில் கொண்டு, கோரிக்கையை வருகிற மார்ச் 11 ஆம் தேதி பரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது.

மார்ச் 11-ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டால் பிட்காயின் விலை நிலைப்பெறும் என்பதாலும், கண்டிப்பாக அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் நிதி அக்கவுண்ட் மேனஜர்கள் பலரும் பிட்காயின் வாங்க அறிவுறுத்தி வருகின்றனர். இதன் விளைவாக நாளுக்கு நாள் விலை ஏற்றத்தினை பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதோடு, தனது உச்சக்கட்ட விலைப் பகுதியில் தற்போது வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கிறது.
krishivanr
Posts: 16
Joined: Tue Apr 21, 2015 5:26 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: தங்கம் விலைக்கு விற்குது பிட்காயின்

Post by krishivanr » Fri Mar 03, 2017 3:12 pm

Sir,

Hike of Bit coin will continue or stable?

Ramar D
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தங்கம் விலைக்கு விற்குது பிட்காயின்

Post by ஆதித்தன் » Fri Mar 03, 2017 3:21 pm

krishivanr wrote:Sir,

Hike of Bit coin will continue or stable?

Ramar D
may be continues that rally up to date march 11
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”