20 நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றியாளர் வாரன்பப்பட் வெற்றி இரகசியம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11793
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

20 நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றியாளர் வாரன்பப்பட் வெற்றி இரகசியம்

Post by ஆதித்தன் » Wed Mar 01, 2017 9:04 am

உலகில் நாம் கற்க வேண்டியது கடல் அளவைக்காட்டிலும் அதிகம் உள்ளது என்பதனை "கற்றது கை மண் அளவு, கல்லாதது கடல் அளவு" என்ற நமது பழமொழி மூலம் அறிந்த ஒன்று என்றாலும், அங்கே கற்றுக் கொடுப்பது பிறரது அனுபவங்கள் என்பதனை மனதில் உள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நமது மூதாதையர்கள் பல அனுபவங்களை நமக்கு பாடங்களாக வகுத்துக் கொடுத்துள்ளனர். அவற்றினை நாம் சரியாகப் படித்துக் கொண்டால், இன்றைய விருப்பத்திற்கான பாடத்திட்டங்களினால் ஏற்படும் ஏமாற்றங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.
Warren Buffett himself once said, "When people tell me they've learned from experience, I tell them the trick is to learn from other people's experience.
பங்கு வர்த்தகத்தில் மிகப்பெரிய வெற்றியாளராக கருதப்படும் வாரன் பப்பட் தனது கூற்றில் சொல்லியிருக்கும் ஒர் எளிமையான ஆலோசனைகளில் ஒன்று, "நீங்கள் தங்களது அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டாதாக சொல்லும் ஒன்றினை, பிறரது அனுபவத்தின் மூலம் கற்றுக் கொள்வது எளிமையானதும் இலாபம் உடையதும் ஆகும்".

87 வயதான வாரன் பப்பட், (CEO of Berkshire Hathaway ) பெர்க்சர் கத்வே என்ற கம்பெனியின் முதன்மை நிர்வாகி. இவர் தனது சிறு வயதிலேயே தொழில் ஆர்வம் கொண்டவர். 1961 -ஆம் ஆண்டு பெர்க்சர் கத்வே கம்பெனியில் சேர்ந்தவர் இன்று வரையிலும் அதன் மிகப்பெரிய வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கிறார்.

இவரது வெற்றியில் முதன்மையாக இருப்பது இன்சுரன்ஸ் துறை. பல இன்சுரன்சு கம்பெனிகளை கையகப்படுத்தியுள்ளதோடு முதலீடும் செய்து இன்று வரையிலும் இலாபத்தோடு இயங்கி வருகிறது. இன்சுரன்சு துறையில் இறங்கும் பொழுது இவர் மக்கள் மனோநிலையை ஆராய்ந்தப் பின்னரே செய்துள்ளார். அதாவது, மக்களிடத்தில் வெற்றியினை கொண்டாடுவதனைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக தோல்வியை வெறுக்கும் மனப்பான்மை உள்ளது. ஆகையால், நட்டமில்லா இன்சுரன்சு துறை கேசினோ போன்ற வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் பணத்தினை கொடுத்து குவிக்கும் கேம்பிளிக் விளையாட்டினைக் காட்டிலும் சிறப்பாக வளர்ச்சியடையும் என்பதுதான். அதன்படி, இன்று இன்சுரன்சு துறை மிகப்பெரிய வெற்றியினை அடைந்துள்ளது.

இன்சுரன்சு துறை பற்றி வெளிப்படையாக கடந்த வாரத்தில் மிக விரிவாக எழுதிய 2017-ஆண்டு அறிக்கையில் வெளிப்படையாக சொல்லியுள்ளார், நீங்களும் கண்டிப்பாக படியுங்கள். பார்க்க > http://www.berkshirehathaway.com/letters/2016ltr.pdf
**********
We have another reinsurance powerhouse in General Re, managed until recently by Tad Montross. After
39 years at General Re, Tad retired in 2016. Tad was a class act in every way and we owe him a ton of thanks.
Kara Raiguel, who has worked with Ajit for 16 years, is now CEO of General Re.

At bottom, a sound insurance operation needs to adhere to four disciplines. It must (1) understand
all exposures that might cause a policy to incur losses; (2) conservatively assess the likelihood of any exposure
actually causing a loss and the probable cost if it does; (3) set a premium that, on average, will deliver a profit
after both prospective loss costs and operating expenses are covered; and (4) be willing to walk away if the
appropriate premium can’t be obtained.

Many insurers pass the first three tests and flunk the fourth. They simply can’t turn their back on
business that is being eagerly written by their competitors. That old line, “The other guy is doing it, so we must
as well,” spells trouble in any business, but in none more so than insurance. Tad never listened to that
nonsensical excuse for sloppy underwriting, and neither will Kara.
***********
எல்லோரும் வெளிப்படையாக டெர்ம் & கண்டிசன் என்றுச் சொல்லி புள்ளி வைத்தே பணத்தினை புடுங்கி மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆகிறார்கள். ஆனாலும் வாரன் பப்பட் அளவுக்கு மற்ற காப்பீடு நிறுவனங்களால் வெற்றியடைய முடியவில்லை என்றும் கூறலாம்.

வாரன்பப்பட் உலகில் மிகப்பெரிய கோடீஸ்வர் வரிசையில் இருப்பவர், 75 பில்லியன் டாலர் சொத்து அவர் பெயரில் இருக்கு.. (75,000,000,000$) ஆனாலும் பாருங்க, தெரியாமல் இன்சுரன்சு கெட்டிட்டேன், என் பணத்த திரும்பக் கொடுங்க என்றுக் கேட்டால் ஒர் சில பாலிசிகளில் கிடைப்பது இல்லை. அதிலும் மார்க்கெட் க்ரவுத் என்றப் பெயரில் பல இலட்சம் கிடைக்கும் என்றுச் சொல்லி வாங்கிய பணத்தில், முதலுக்கே ஆப்பு வைக்கும் பாலிசிகளும் உண்டு.

இப்பொழுது எல்லாம் மருத்துவ காப்பீடுத் திட்டம் மிகவும் பிரபலமாக இருப்பதோடு, பலரும் எதிர்காலத்தில் என்ன நோய் வருமோ என்று அச்சம் கொண்டு, அத்தகைய இலவச மருத்துவ வசதி கொண்டுள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ஆர்வம் கொள்கிறார்கள்.

இதில் உள்ள பிசினஸ் தந்திரத்தினை நாம் உண்மையா? பொய்யா? என்று கொஞ்சம் ஆராய வேண்டும்.

ஏனெனில் தடுப்பூசிகள் ஆபத்தானது என்றும் எதிர்காலத்தில் பல நோய்க்கு இதுவே காரணம் ஆகும் என்றுச் சொல்கிறார்கள்.

இந்த தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக இயங்க மிகப் பெரிய முதலீட்டினை, குழந்தைச் சாவினைத் தடுக்கப்போறோம் என்றப் பெயரில் இயங்கும் பில்கேட்ஸ் தன்னார்வ சேவை மையத்திடம் கொடுத்துள்ளார்.

பில்கேட்ஸ் & மலிண்டா தம்பதியினர் கூட 2017 ஆம் ஆண்டு ரிப்போர்ட்டில் வாரன் பப்பெட் செய்த மிகப் பெரிய சிறந்த முதலீடு என்ற தலைப்பைக் கொடுத்து, கடந்த 10 வருடமாக இந்தத் திட்டம் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மற்றும் சாதித்த சாதனைகளை வெளியிட்டுள்ளனர்.

பில்கேட்ஸ் ரிப்போர்ட் படிச்சிப் பாருங்களேன், எவ்வளவு நல்லது உலகத்துக்கு செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியும். ஆனால், அதன் பக்க விளைவு என்ன என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். பார்க்க > https://www.gatesnotes.com/2017-Annual-Letter

மற்றொரு பக்கம் பேஸ்புக் மார்க் கூட ஒர் அனுவல் லெட்டர் போட்டார் தெரியுமா? பார்க்க > https://www.facebook.com/notes/mark-zuc ... 4292806634

இப்படி இவங்க எல்லாம் தங்களது பிசினஸ் என்ன என்பதனை முன்கூட்டியே தீர்மானித்து, அதற்கான அடிப்படையை இப்பொழுது இருந்தே ஆரம்பித்து அடுத்த பத்து வருடத்தில் இலக்கில் வெற்றியடையவதுதான்.

பெரிய ஆஸ்பத்திரி கட்டுறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், நோயாளியே இல்லா ஊர்ல ஆஸ்பத்திரிய கட்டி வைச்சி எப்படிங்க வருமானம் பார்க்கிறது? நான் பெரிய கோடீஸ்வரன் என்று சொல்லிக் கொள்வது? அதனால, நோய இவங்களே உற்பத்தி பண்ணிடுவாங்க..

அட அப்படி இல்லப்பா, ஊர்ல இருக்கிற நோய்களைப் பார்த்து, வருத்துப்பட்டுதான் அவங்க இவ்வளவு நல்லதும் செய்றாங்க இந்த உலக சமூகத்துக்கு அப்படின்னு நீங்க சொன்னீங்கன்னா... கொஞ்சம் யோசிச்சிப்பாருங்க??? ஆண்டவனுக்கே வெளிச்சம். ஏனெனில் நீண்ட நமது பாரம்பரிய சித்தர்களின் வாழ்வுமுறையையும் அவர்கள் உலகுக்கு அளித்த இலவச பங்களிப்பையும் முழுமையாக யோசித்தால் பிடிபடவில்லை.

இவங்களும் இலவசம்னுதான் தடுப்பூசி போடுறாங்க, ஆனால் தடுப்பூசி திட்டத்திற்கான முதலீடு???? வர்ற டொனேஷன்? கொஞ்சம் யோசிங்க... சோலியன் குடுமி சும்மா ஆடாது!!!!

சரி, வெற்றியாளர் வாரன் பப்பெட் பங்குகளை வாங்குவதில் கையாளும் முறையாக நான்கு முக்கிய காரணிகளை மீடியாக்கள் சொல்லி புகழும் முக்கிய விடயத்தினை பார்க்கலாம்.

1. முதலீடுகளை பல துறைகளில் பிரித்துப் போடுதல்.
நிதித்துறை, மக்கள் பயன்பாட்டுப் பொருள் நிறுவனம், போக்குவரத்து துறை என பல துறை நிறுவனங்களில் முதலீடுகளைப் பிரித்துப் போட்டுள்ளார். கிட்டத்தட்ட 43க்கும் மேற்பட்ட கம்பெனிகளின் பெரும்பங்குகளை இவர் கையகப்படுத்தி வைத்துள்ளார். அதில் முக்கியமானவைகள், Kraft Heinz (NASDAQ:KHC), Wells Fargo (NYSE:WFC) and Coca Cola (NYSE:KO), Apple (NASDAQ:AAPL)

2. விதிமுறையை கடைபிடிப்பது, அதே நேரத்தில் தேவைப்பட்டால் விலகுவது.
இவர் ஒர் நிறுவனப் பங்குகளை வாங்குகிறார் என்றால் 10+ ஆண்டுகள் என்று நீண்ட நிலையான விதியினை கடைபிடித்து, இந்த நிறுவனம் இலாபம் கொடுக்குமா என்று நன்கு யோசனைக்குப் பின்னே வாங்கி கையகப்படுத்தி வைப்பவர். அதே நேரத்தில் இது நட்டம் கொடுக்கும் என்று தெரிந்தால், 10 நிமிடம் கூட வைக்கமாட்டார் உடனே விற்றுவிட்டு ஒதுங்கிவிடுவார். வாங்கிட்டோம் என்று வைத்திருப்பது இல்லை.

3. தன் கருத்திலிருந்து மாறுவதற்கு வெட்கப்படுவது இல்லை.
அதாங்க அரசியல்வாதி மாதிரி, கடந்த மாதம் தான் ஒர் கம்பெனியின் நிர்வாகத்தினை கேவலமாகப் பேசி, இதில் முதலீடு செய்தால் நட்டமே கிடைக்கும் என்று சொல்லியிருப்பார்.... அடுத்த மாதம் இவரே வாங்கிவிடுவார், குறைந்த விலையில். அப்படிதாங்க, அமெரிக்க விமானத்துறைகள் முதலீட்டாளர்களுக்கு உகந்தது அல்ல என்று கொஞ்ச வருடத்திருக்கு முன்னர் சொல்லி பங்குகள் எதனையும் வாங்கமாட்டேன்னு சொல்லியிருக்கார்.. ஆனால், இப்போ வாங்கியிருக்கார். கிட்டத்தட்ட அவரது முதலீடு போர்ட்போலியோவில் 6% விமானத்துறையான US airlines: Delta (NYSE:DAL), Southwest (NYSE:LUV)), American (NASDAQ:AAL) and United Continental Holdings (NYSE:UAL) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது. அதாவது, நேற்றைய நிலை வேறு, இன்றைய நிலை வேறு என்று, அவ்வப்பொழுது நிறுவனங்களை மறுமதிப்பீடு செய்தல் வேண்டும்.

4. நிறுவன பங்குக்கான இலாபத்தொகையை கணக்கீடு செய்தல் ( டிவிடண்ட்).

நீண்டகால முதலீடு என்பதால் பங்குதாரர்களுக்கு கம்பெனி வழங்கும் இலாபப் பகிர்வை முக்கியமாக கணக்கீடு செய்கிறார். நிறுவனம் இலாபகரமாக இயங்கும் பொழுதே டிவிடண்ட் வழங்குவார்கள். டிவிடண்ட் வழங்கும் கம்பெனி பங்குகளின் விலை காளை முகத்தோடுதான் இருக்கும் என்ற தத்துவத்துடன் இலாபகரமான கம்பெனிகளின் பங்குகளை ஒபன் மார்க்கெட் மதிப்பீடுகளைக் காட்டிலும் குறைந்த விலைக்கு வாங்குவது. அதற்காக இலாபகரமான கம்பெனிகள் பிரச்சனைக்குள் சிக்கி பங்கு மதிப்பு குறைவதனை குறிவைத்து வாங்குவதும் ஒர்முறை. For example, Buffett began to build his position in Coca Cola after the market crash in 1987, when shares of the company were going for $2.2-2.5 apiece. Today, Coca Cola, which trades for $41.78 as of Friday's close, pays a nominal dividend of $1.38 annually. Coke's yearly dividend is now yielding 26% on shares purchased back in the late '80s, a pretty amazing return.

20 ஆம் நூற்றாண்டில் வாரன் பப்பட் மிகச் சிறந்த வெற்றியாளர் என்று பத்திரிக்கைகள் புகழலாம். ஆனால் அவரது வெற்றிகள் அனைத்தும் நன்மை தீமை என இரண்டும் கலந்தவை. ஒருவர் இழந்ததை மற்றொருவர் கையகப்பற்றியது எல்லாம் மிகப் பெரிய வெற்றியாக புகழும் இவ்வுலக அனுபவத்திலிருந்து தமிழராக நாம் மட்டுமே உண்மையான பாடத்தினை கற்று பதிலடிக் கொடுக்கக்கூடிய புத்திக்கூர்மை உடையவர்கள்.

தமிழர்களே இவ்வுலகிற்கு மிக உயர்ந்த வெற்றியான சாகாக்கல்வி முறையினை கொடுத்தவர்கள் என்பதனை மறந்துவிடாதீர்கள்.
நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம், அதிலும் குறிப்பாக நமது மூதாதையர் சொல்லி வைத்த பழமொழி மிகப்பெரிய அனுபவப்பாடம். அதனை நாம் சரியாகப் பின்பற்றினால் மிகப்பெரிய வெற்றியினை அடைய முடியும். குறிப்பாக ஐம்பூதங்களைப் பற்றியும், நமது பூத உடல் பற்றியும் எடுத்துக்கூறிய சித்தர்களின் மூச்சுப் பயிற்சி என்பது மிகப் பெரிய வெற்றியினையும் எளிதில் அடைவதற்கான சிறந்த வழிமுறை ஆகும். தமிழ் சித்தர்கள் அருளிய சாகாக் கல்வியைக் காட்டிலும் வெற்றி பெற பெரியது இவ்வுலகில் இல்லை.
User avatar
vk90923
Posts: 55
Joined: Sun Mar 20, 2016 7:46 pm
Cash on hand: Locked

Re: 20 நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றியாளர் வாரன்பப்பட் வெற்றி இரகசியம்

Post by vk90923 » Wed Mar 01, 2017 2:30 pm

ஆதி சார் வணக்கம்,
இதில் நீங்கள் குறிப்பிடுவது மறைமுகமாக என்ன என்றால் இன்றைக்குமாலை ட்ரம்ப் பேச்சு இது போல்தான். மக்கள்,நாடு தொழில் வளம் அனைத்தும்தனக்கும் தன் நாட்டிற்கும் ஒத்து வரும் படி செய்து அப்படி வராதவற்றை (பீஎஸ்.வீரையா) சொல்வது போல் "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்" என்று ட்ரம்ப் மனதில் எண்ணி அமெரிக்கா தவிர மற்ற நாடுகள் தனக்கு கட்டு பட்டு நடப்பதற்கு வேண்டிய முயற்சிகளை எடுத்துவருகிறார்.இது மட்டுமல்ல ஒவ்வொரு நாட்டின் வளங்கள் என்ன? நாட்டின் பலவீனம் என்ன என்று பார்த்து வளங்களை தன் நாட்டிற்கு சாதகமாக்கவும் வராதவற்றை(சாம மோக பேத தண்ட)(பேசுதல் கவர்ச்சி செய்தல் பிரித்தல் அழித்தல்) வழிகளில் முயற்சி செய்து இதிலும் வராதவற்றை அழித்து விடுகிறார் போலும் இதை வல்லரசு நாடுகள் அனைத்தும் இந்த முயற்சியை விடாது செய்து கொண்டிருக்கின்றன.பலவீனமான நாடுகள் மற்ற வல்லரசு நாட்டிற்கு நட்புறவாகவும் அடிமையாகவும் எதிர்த்தும் வருகின்றன இது நாடுகளில் மட்டுமல்ல மாநிலம் மாகாணங்களில் கூட இப்படி நடக்கின்றது இதை நீங்கள் மறைமுகமாக பதிவிடுகிறேர்கள் என்பது என் கருத்து சரியாக இருந்தால் ஏற்று கொள்ளுங்கள் தவறாக
இருந்தால் தவறை சுட்டிக் காட்டுங்கள் நன்றி
இராமகிருஷ்ணாபுரம்.நவனீதகிருஷ்ணன்.வினோத்(RKPN.VINOTH)
#குறிப்பு#
படுகை நண்பர்களே,அன்பர்களே,உறுப்பினர்களே,வணக்கம் நான் இங்கு பதிவிடுவது என்னவென்றால் நம் ஆசிரியர் அவர்களுக்கு முதலில் எனது நன்றிகளை தெரிவித்து மென்மேலும் படுகை வளர படுகை உறுப்பினர்களாகிய நாம் நம் பணிகளை திறம்பட செய்து நம் ஆசிரியர் உயர செய்வோம் எப்படி
என்றால்
1.நாம் ஒவ்வொருவரும் படுகை வளர நம் பணி என்ன என்பதை ஆராய்ந்து அதன் படி பணிகளை செய்தல்
வேண்டும்( )
2.நாம் ஒவ்வொருவரும் குழுக்களாய் பிரிந்தும் குழுதலைவராகவும் இருந்தும்(இதற்கான அனுமதியை மிக
முக்கிமாக ஆதி சாரிடம் பெற்று)செயல்படலாம்
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”