Page 1 of 1

தலைகீழ் பார்வையில் அமெரிக்க பங்கு வர்த்தகம்

Posted: Fri Feb 17, 2017 8:10 am
by ஆதித்தன்
Image

மாயைக்காட்டி மோசம் செய்யும் வித்தைகள் பங்கு வர்த்தகத்தில் பெரிய அளவில் எளிதாக காட்டப்படுவதனை நாம் அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில் ட்ரம்ப் அமெரிக்க பங்குகளை தன் பேச்சு மூலம் உச்ச நிலைக்கு ஏற்றிக் கொண்டிருக்கிறார்.

அடிப்படை பொருளாதார வளர்ச்சி இல்லாமல், பேச்சு மூலம் ஏற்றுவது எல்லாம் சட்டென சரியக்கூடியது என்பது தெரிந்ததுதான். ஆனால், அதனை ஒர் வாய்ப்பாக பயன்படுத்தும் முதலீட்டாளர்கள் & பண்ட் மேனஜர்கள் ஆகியோர் ட்ரம்ப் பேச்சைக்காட்டில் பெரிய அளவில் புதிய முதலீட்டினைச் செய்து, 25 ஆண்டுகால உச்சத்தினை எட்டி உயரெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த வாரத்தில் தொழில்துறைக்கான புதிய வரிக் கொள்கையை ட்ரம்ப் வெளியிட இருக்கிறார் என்பதனைச் சொல்லித்தான் பங்கு விலைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய வரிக் கொள்கை வந்தவுடன், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றுக் கூறி ஏறியது சரிய ஆரம்பிக்கும் என்பது ஒர் நடைமுறை எதிர்பார்ப்பு.

அதனை எதிர்பார்த்தே கரடியும் கீழே காத்துக் கொண்டிருக்கிறது.