ஐரோப்பாவிலிருந்து பிரிந்த இங்கிலாந்து சீனாவுடன் கூட்டு

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஐரோப்பாவிலிருந்து பிரிந்த இங்கிலாந்து சீனாவுடன் கூட்டு

Post by ஆதித்தன் » Fri Feb 17, 2017 7:57 am

கடந்த வருடம் ஐரோப்பிய யூனியலிருந்து பிரிந்த இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மூலம் பெற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் பலவற்றிலிருந்து நீக்கப்படக்கூடிய சூழலில், சுயமாக தனக்கான வர்த்தக ஒப்பந்தங்களை பலநாடுகளுடன் செய்து நாட்டின் பொருளாதாரத்தினை நிலையாக வைத்துக் கொள்ள இங்கிலாந்து நடவடிக்கை எடுத்ததில் சீனா கிடைத்துள்ளது பெரிய வெற்றியாகும்.

சீனா & இங்கிலாந்து ஆகிய நாடுகள் உலக அளவிலான திறந்தநிலை வர்த்தகத்தினை ஊக்குவித்து, தங்களுக்குள்ளே வர்த்தக உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இன்றைய செய்தி வெளிவந்துள்ளது. ஒர் பக்கம் அமெரிக்க ட்ரம்ப் உலகளவிலான திறந்தநிலை வர்த்தகத்தினை கேள்வி கேட்கையில் இவர்கள் ஊக்குவிக்கப்போவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இருநாடுகளுக்கிடையான வர்த்தகம் & நிதித்துறை புரிந்துணர்வு ஒத்துழைப்பு உறுதிமொழி வியாழக்கிழமை, சீனா வெளிநாட்டுத்துறை அமைச்சர் வாங்க் யெய் மற்றும் பிரிட்டன் சார்பில் போரிஸ் ஜான்சன் இடையே உலகின் 20 பெரிய தொழில்துறை நாடுகள் குழுத்துறை பிரதிநிதிகள் முன்னிலையில் ஜெர்மனி நாட்டின் போன் சிட்டியில் வைத்து நடந்துள்ளது.

சீனா அமைச்சர் பேசுகையில், பிரிட்டனில் ஹிங்க்ளி பாயிண்ட் அணுஉலை பவர் நிலையம் அமைக்க முழு ஒத்துழைப்பினை கொடுப்பதாக அறிவித்துள்ளார். மேலும், வர்த்தகத்திற்கு முதன்மை நிலை அனுமதி கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

சீனாவின் "ஓன் பெல்ட் , ப்ன் ரோடு" திட்டமான சீனாவிலிருந்து ஐரோப்பா வரை போடப்பட்டு வரும் சில்க் சாலை திட்ட ஆரம்ப விழாவுக்கு பிரிட்டன் பிரதமர் தெரசாவுக்கு அழைப்பினை தெரிவித்துள்ளார்.

சீனாவுடான இந்த வர்த்தக பிணைப்பு, இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் என நம்பப்படுகிறது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”