டாலர் மதிப்பு புதிய வரிக் கொள்கையால் உயருமா?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

டாலர் மதிப்பு புதிய வரிக் கொள்கையால் உயருமா?

Post by ஆதித்தன் » Sun Feb 12, 2017 5:59 pm

அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப், சிறுவர்களுக்கான பூச்சாண்டிபோல் உலக நாடுகளுக்கான மேடைப்பூச்சாண்டி என்று நினைக்கத் தோன்றும் அளவிற்க்கு அவரது பேச்சும் டுவிட்டும் உள்ளது.

சமீபத்தில் அவரது மகளது ஆடைக்கான விற்பனையை டிஸ்கவுண்ட் விடயத்தால் தவிர்த்த விற்பனை நிலையத்தினை தனது டுவிட்டில் கூறியது அவரது ஆதரவாளர்களுக்கே ஆச்சர்யத்தினை கொடுத்திருக்கும்.

டாலர் மதிப்பு வலுவாக அல்லது தொய்வாக என எவ்வாறு இருந்தால் நாட்டுக்கு நல்லது என்று உறுதியான தெளிவு இன்னும் எட்டப்படவில்லை என்பதனையும் அலுவலக ஆலோசகர்கள் கமெண்ட் மூலம் அறிய கிடைத்துள்ளது. இருந்தாலும் ஏதேனும் ஒர் மாற்றுக் கருத்து பேச வேண்டும் என்பதற்காக தலைகீழாய் ட்ராம்ப் பேச்சு இருப்பதாகவும் என்னத் தோன்றுகிறது.

ஜப்பான் தனது சுயலாபத்திற்காக கரன்சி விலையினை கையாள்கிறது என்றக் குற்றச்சாட்டினை, சமீபத்தில் ஜப்பான் பிரதமர் அபியை சந்திக்கும் பொழுது பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்தல் வேண்டும்.

ஒன் சைனா பாலிசி உடன் தானும் இணக்கமுடன் இருப்பதாக சீனாவுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் சீனாவின் வர்த்தக வலு புலப்படுகிறது. மேலும் கிரீஸ் கடன் பிணையெடுப்பு பிரச்சனையிலும் இவரது கருத்து உறுதிப்பாட்டுடன் உடையதா என்ற கேள்வியிலும் வர்த்தக ஆய்வாளர்கள் மத்தியில் சந்தேகத்தினை எழுப்பியுள்ளது.

அடுத்ததாக எடுக்க வரி நடவடிக்கையில், கார்ப்ரேட் கம்பெனிகளுக்கான வரியினை குறைக்கும் பொழுது கூடுதல் முதலீடுகள் வர வாய்ப்பிருப்பதாகவும், இது டாலரினை வலுப்படுத்தும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும், பிறநாட்டுடான இறக்குமதி வரிமாற்றம் 20% ஆக இருக்குமாயின், டாலர் வலுப்பெறுவது உறுதி என்றும் பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆக சமீபத்தில் டாலர் சற்று சரிவினைக் கண்டாலும், மீண்டும் உயரே எழும்ப ஆரம்பிக்கும் என்றே பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”