Page 1 of 1

Crude Oil trading target for this week

Posted: Sun Feb 12, 2017 5:24 pm
by ஆதித்தன்
குரூடு ஆயில் வர்த்தகம் கடந்த வாரம் மார்க்கெட் 53.87 என்ற விலையில் ஆரம்பித்து ஆரம்பத்தில் சரிவினைக் காட்டிலும் இறுதியில் 53.87 என்ற சமநிலையில் தான் முடிந்தது.

கடைசி மூன்று நாட்களும் மார்க்கெட் காளையின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது. தற்போதைய விலையான 54 என்பது நீண்ட நாட்களாக ஒர் சராசரி உச்சநிலையாக இருந்து வருகிறது. இந்த வாரத்தில் அடுத்தக்கட்ட உயர்வினை எட்டும் என்பதே தற்போதைய சார்ட் ஸ்டிக் நிலவரம் காட்டுகிறது.

ஒபெக் & நான்-ஒபெக் நாடுகள் ஆயில் உற்பத்தியில் எடுத்துள்ள நடவடிக்கை திருப்திகரமாக செயல்பாட்டில் வந்துள்ளது. கடந்த வாரச் செய்தியின்படி ஒபெக் எடுத்த முடிவான தினம் 1.2 மில்லியன் பேரல் உற்பத்தியில் குறைக்க வேண்டும் என்ற திட்டப்படி 90% வெற்றிகரமாக கடந்த ஜனவரி மாதம் முழுவதும் செயலில் காட்டப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து மாதத்திற்கும் உற்பத்தி குறைப்பு செயலில் இருக்கும் என்பதால் ஆயில் விலை ஏற்றம் என்பது உறுதி.

இந்த வாரத்தின் டார்க்கெட்டாக 56$ என்பதனை எதிர்பார்க்கலாம்.