Page 1 of 1

Facebook மதிப்பு பங்குச் சந்தையில் சரியலாம்

Posted: Sun Feb 12, 2017 12:16 pm
by ஆதித்தன்
பேஸ்புக் நிறுவனத்தில் தற்பொழுது பனிப்போர் நிகழ்ந்து வருவதாகவும், இது பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜீக்கர்பெர்க்கை இயக்குனர் குழுவிலிருந்து விலக்கும் வரை நீடிக்கலாம் என்றும் தகவல்கள் செய்திகளில் வெளிவருகின்றன.

மார்க் ஜீக்கர்பெர்க்கை இயக்குனர் குழுவிலிருந்து விலக்குவதற்கான நெருக்கடியாக, அதன் பங்குகளைக் கொண்டுள்ள முதலீட்டாளர் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் ஆபத்தும் உள்ளது.

சம்ஆப்ஸ் என்ற பங்குதாரர்கள் குழு, வெஞ்சர்பீட் வழியாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் கூறுவது, மார்க் இரட்டைப் பொறுப்பைக் கொண்டுள்ளதால், நிறுவாகம் சீராக இல்லை என்றும், இதனால் பேஸ்புக் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதோடு, பங்குதாரர்களின் முதலீட்டுக்கும் இழப்பு ஏற்படுகிறது. ஆகையால், மார்க்கை இயக்குனர் பதவிலிருந்து நீக்கிவிட்டு மாற்று நபரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.