ஐரோப்பா கரன்சி ஒருமைப்பாடு உடையுமா?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
ஐரோப்பா கரன்சி ஒருமைப்பாடு உடையுமா?
பிரான்ஸ் நாட்டில் நடக்க இருக்கும் தேர்தலில் முக்கிய தலைவராக மரைன் லி பென் பார்க்கப்படுகிறார்.
மரைன் லி பென், ஐரோப்பா யுனியனிலிருந்து பிரான்ஸ்-ஐ பிரிப்பதற்கான பிரச்சாரத்தினை மக்களிடத்தில் செய்து வருகிறார்.
கடந்த பிரிட்டன் ஐரோப்பா யுனியலிருந்து எக்சிட் ஆனது அனைவரும் அறிந்ததே, தற்பொழுது பிரான்ஸ் மன நிலையும் அவ்வாறே உள்ளது என்பது மரைன் லி பென்-க்கு கிடைத்து வரும் மக்கள் ஆதரவு மூலம் கணித்துள்ளனர்.
இதைப்போல், ஜெர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் பிரான்ஸ் வெளியேறும்பட்சத்தில் வெளியேறும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வீடுன்னு கட்டுனா சில ஆண்டுகளுக்கு பின் இடியத்தான் செய்யும், அதற்குள் மற்றொரு வீட்டைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது போல, ஐரோப்பா யுனியனை வடிவமைத்தவர்கள், சுரண்டும் வரை சுரண்டிவிட்டு தங்களது இடத்தினை மாற்றிவிட்டார்கள். இப்போ, கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட நாடுகள்,, தாங்கள் வலிமையிழந்துவிட்டோம், சுரண்டப்படுகிறோம் என்று உடைகிறார்கள்.
கட்டுமானர்கள் தற்பொழுது செயலில் இருப்பது இந்தியாதான். இந்திய வளத்தினையும் உழைப்பினையும் அடுத்த 20 ஆண்டுகளில் முழுமையாக சுரண்டப்போகிறார்கள்.. அதற்கு உதவியாக வங்கியும், அரசும் இருக்கலாம்.
மக்கள் தெளிவானால், அவர்கள் தொழில் திட்டங்களை இலகுவாக தோல்வியுறச் செய்ய முடியும். அதற்குச் செய்ய வேண்டியது எல்லாம், சும்மா இருப்பதுதான்.
பிரான்ஸ் ஐரோப்பா யுனியனிலிருந்து வெளியேறினால், இரோவின் மதிப்பு மேலும் சரிவடையும் என்பது உறுதி.