தங்கத்தின் விலை சந்தையில் உயருமா? இறங்குமா?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தங்கத்தின் விலை சந்தையில் உயருமா? இறங்குமா?

Post by ஆதித்தன் » Sat Feb 11, 2017 9:01 am

தங்கம் ஒர் நிலையான வர்த்தகப் பொருள் ஆகும். பல ஆண்டுகளாக தங்கத்தில் முதலீடு செய்தால் எளிதாக இலாபம் ஈட்டலாம் என்றிருந்த நிலை, கடந்த கடைசி மூன்று வருடத்தில் பொய்த்துவிட்டது. காரணம் உச்ச விலையில் பெரிய முதலீட்டாளர்கள் தங்களது விற்று இலாபத்தோடு வெளியேறியதுதான் காரணம். இந்த நேரத்தில் பல இல்லத்தரசிகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்துவிட்டு, தங்கத்தின் விலை ஏறுமா? என்று ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தங்கத்தின் விலை சரிந்து சரிந்து, பெரிய சரிவினை பார்த்துவிட்டது.

பெரிய முதலீட்டாளர்கள், சந்தையில் குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்பதனையே இலக்காகக் கொண்டிருப்பதோடு,, அதிக விலையில் விற்றுவிட்டால் மீண்டும் குறைந்த விலையில் வாங்கினால் அடுத்தக்கட்ட வர்த்தக நிலை இலாபத்தினைப் பார்க்க முடியும் என்பதனால், விலைச் சரிவினை செய்வார்கள்.

மார்க்கெட் சார்ட் எப்பொழுதும் ஒர் முக்கோண அமைப்பாக, ஏறுவதும் இறங்குவதுமாய் இருப்பதனை பார்க்கையில் நாம் இதன் அடிப்படையை புரிந்து கொள்வதோடு, அவ்வாறான உயர்மட்ட விலை மற்றும் அடிமட்ட விலை நிலவர இலக்குகளை மையமாகக் கொண்டு வர்த்தகத்தில் உறுதியான இலாபம் பார்க்கலாம்.

தங்கத்தினைப் பொறுத்த வரைக்கும் அடிமட்ட விலையாக $1000/அவுன்ஸ் என்ற இலக்கினை மையப்படுத்தி சரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இந்தியாவின் கடந்த ஆண்டின் குறைந்த இறக்குமதியும் துணையாக இருந்தது.

தற்போதைய அமெரிக்க ஆட்சி மாற்றத்தினால் எடுக்கப்பட்டிருக்கும் புதிய கொள்கைகள், டாலரின் வீழ்ச்சிக்கு வித்திடுவதாகவும், ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் காமிக்ஸ் சித்திரம் எடுத்துரைப்பதனை நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஆயில் உற்பத்தி நாடான இரஷ்யா, ஆயில் விலை பெரிய அளவில் சரிந்த பொழுது தனது பொருளாதரத்தின் நிலையை பாதுகாக்க பெரிய அளவில் தங்கத்தில் முதலீடு செய்தது. ரஷ்யாவின் முதலீடே தங்கத்தின் விலைச் சரிவினை கொஞ்சம் தாங்கிக் கொண்டிருந்தது என்று கூட சொல்லலாம்.

தற்பொழுது ட்ரம்ப் நடவடிக்கையால், டாலரில் முதலீடு செய்தவர்கள் அங்கிருந்து வெளியேறி தங்கத்தில் தங்களது முதலீடுகளை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்ற தகவலும் கசிய ஆரம்பித்துவிட்டன.

ஒர் பக்கம் ஆயில் விலை ஏற்றம், மற்றொரு பக்கம் தங்கத்தின் விலை உயர்வு என ரஷ்யா இந்த ஆண்டு மகிழ்வாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

அதே நேரத்தில் சீனாவுக்கு இழப்புகளைக் கொடுக்கவும் அமெரிக்கா திட்டமிட்டு புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்க ஆரம்பிக்க இருக்கிறது என்ற தகவலும் கசிய ஆரம்பித்துவிட்டன.

கடந்த 15 ஆண்டுகளில் பெரு நிறுவனங்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் குறைந்துவிட்டதோடு, சீனாவில் பெரிய அளவில் அதிகரித்துவிட்டதும் அமெரிக்கப் பார்வையில் உள்ளது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”