Page 1 of 1

பெண்களின் கைப்பணத்தினை பறிக்க செபி திட்டம்

Posted: Sat Feb 11, 2017 8:08 am
by ஆதித்தன்
வீடுகளில் பெண்கள் ரொக்கமாக பணத்தினை சேமித்து வைத்திருப்பது பழக்கமாக இருந்து வருகிறது. இதனை அறிந்த பங்குச் சந்தை நிபுணர்கள், அப்பணத்தினை பறிக்க செபி மூலம் புதிய திட்டத்தினைக் கொண்டுவந்து, தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் மூலம் கவர்ச்சி விளம்பரங்களைக் காட்டி வீட்டிலிருக்கும் பணத்தினை பங்குச் சந்தைக்குள் வரவைத்து சட்டப்படி ஏற்ற இறக்கத்தினைக் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

பங்குச் சந்தை பல்லாண்டுகளாக அரசு அனுமதியுடன் நடந்து கொண்டிருப்பதோடு, தவறுதலான வாக்குறுதியினை வாய் மொழியாகக் கூறி பெரிய அளவில் மக்கள் பணத்தினை வங்கி சார்ந்த நிறுவனங்கள் மூலம் இழக்க காரணமாக இருந்துள்ளன.

பணமிருப்பவர்களை எல்லாம் ஆண்டியாக்கிய பங்குச் சந்தை நிறுவனங்கள், அடுத்து யாரிடம் பணமிருக்கிறது என்ற தேடலில் அடுத்தக்கட்டமாக இல்லத்தரசிகளின் சேமிப்புப் பணத்தினையும் பங்குச் சந்தைக்குள் கொண்டுவர செபி மூலம் திட்டமிடுவதனை முறியடிக்க, இப்பொழுதே சரியான பரப்புரையை கொண்டு செல்லுதல் வேண்டும்.

அரசு திட்டங்கள் மக்கள் நன்மைக்காக என்பதனைக்காட்டிலும், பெரிய நிறுவன இலாபங்களுக்காக என்பதனை புரிந்து கொண்ட இக்காலத்திலும் இலகுவாக நிதி திரட்ட நினைக்கும் இதுபோன்ற திட்டங்கள் தோல்வியுறும்.