ஆயில் விலை 2017 இல் 100 டாலர் எட்டுமா?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆயில் விலை 2017 இல் 100 டாலர் எட்டுமா?

Post by ஆதித்தன் » Mon Jan 16, 2017 8:10 pm

voice record ----


ஆயில் விலை இரு மடங்கு உயரப்போகிறது என்று கடந்த மாதம் சொல்லியிருந்ததை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் பாரக்ஸ் மார்க்கெட்டில் எந்தவொரு ஏற்றமும் இல்லை, ஆனால் 53 டாலராக இருந்த விலை 52 டாலராக மாறியிருந்தது.


விலை ஏறப்போகிறது என்று சொன்னார்கள், ஆனால் விலை குறைகிறதே என்றுச் சொல்லி டென்சன் ஆனவர்கள் பலர்... சிலர் உடனே ராக்கெட் மாதிரி மேலே ஏறிடும் என்று நினைத்து வால்யூமில் கோட்டைவிட்டு, ஒர் டாலர் சரிவில் கூட கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


ஆனால், உண்மையில் ஆயில் விலை 100 டாலர் எட்டப்போகிறது. அதற்கான அனைத்து வேலைகளையும் ஆதிக்கச் சக்திகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.


குறிப்பாக இன்றைய செய்தியினை பைனான்ஸ் வெப்சைட்டில் பார்த்தீர்கள் என்றுச் சொன்னால் கண்டிப்பாக ஆயில் சம்பந்தப்பட்ட செய்தி வெளியாகியிருக்கும். அதிலும் குறிப்பாக ஆயில் தயாரிப்பு அல்லது எடுப்பதனை குறைக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வந்திருக்கும்.


ட்ரேடிங் பொறுத்தவரைக்கும் டிமாண்ட் அண்ட் சப்ளே மிகவும் முக்கியம். சப்ளே அதிகமாகிவிட்டது என்றால் விலை குறைந்துவிடும்... அவ்வாறு விலை குறைவாக இருக்கும் பொழுது சப்ளேயை குறைத்து டிமாண்ட் உருவாக்கிவிட்டால், விலை ஏற்றம் பார்க்கும்.

தற்போது ஆயில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளும் இதனைப் பின்பற்றியே உற்பத்தியினை குறைத்து, டிமாண்ட் அதிகப்படுத்தும் செயல்திட்டமாக தினம் 1.8 மில்லியன் பேரல் அவுட்புட் கட் செய்ய உள்ளார்கள்.


OPEC and non-OPEC producers have agreed to cut output by some 1.8 million barrels a day in the first six months of this year.
Saudi Arabia and Kuwait have already moved to decrease production but doubts remain about other producers.


ஆயில் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் இந்த முடிவு, நாளைய ஆயில் விலை ஏற்றத்தினை உறுதி செய்யும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.


உலக அரங்கில் ஒர் சில தலைமையங்கள் எடுக்கும் முடிவுகள்படியே எல்லாம் நடக்கின்றன. அந்த வகையில், ஆயில் விலையை மீண்டும் 100 டாலர்க்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஏற்கனவே திட்டம் போட்டுட்டாங்க.. இனி ஒவ்வொரு செயல்பாடும், அதற்குத் தகுந்தாற்போல் அமைத்து, உயர்த்திவிடுவார்கள்.


2017-ஆம் ஆண்டின் முதலீடு திட்டத்தில் ஆயில் மீதும் ஒர் பார்வையினை வைத்துக் கொள்ளுங்கள்.


வாய்ப்புகளைப் பயன்படுத்தி பாரக்ஸில் பணம் சம்பாதிக்க வாழ்த்துகள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”