பிட்காயின் முதலீடு வைக்கும் நேரம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பிட்காயின் முதலீடு வைக்கும் நேரம்

Post by ஆதித்தன் » Mon Jan 16, 2017 6:52 pm

பிட்காயின் என்றொரு டிஜிட்டல் காயின் இருக்கிறது என்பதனை மிகவும் தாமதமாக நான் அறிந்து கொண்டாலும், அதன் மூலம் நல்ல இலாபத்தினை அடைந்துவிட்டேன்.


கடந்த இரண்டு வருடங்களாக பிட்காயின் கரன்சியினை மிகவும் நெருக்கமாக உற்று நோக்கி வருவதோடு, அதில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பினையும் சரியாக பின்பற்றி இலாங்களை சம்பாதித்து வருகிறேன்.


கடந்த மாதத்தில் பிட்காயின் ஏற்றம் ஆகும் என்பதனை முன்கூட்டியே கணித்து வைத்தது போலவே ஏற்றம் கண்டது. அப்படியே ரிவர்சலாக இறகத்தினையும் ஒரே நாளில் கொடுத்துவிட்டது என்பது மார்க்கெட்டின் தெளிவான ட்ரெண்டில் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறது.


கடைசி ஏற்றமான 1200 டாலர் என்ற விலையிலிருந்து, அதற்கு முந்தைய ஏற்றத்தில் இறக்கம் கண்டிருப்பது, முந்தை உச்சம், அடுத்த உச்சத்திற்கான மட்டம் என்பதனை தெளிவாக தற்போதைய பிட்காயின் விலையான 830 டாலர் உறுதிப்படுத்துகிறது.


பிட்காயின் தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி குறைந்த விலையிலேயே கிடைக்கிறது.


பணம் இருப்பவர்கள் பிட்காயின் வாங்கினால் கண்டிப்பாக ஐம்பது சதவீத இலாபத்தினைப் பார்க்கலாம். அதாவது, ஒர் இலட்சம் ரூபாய்க்கு பிட்காயின் வாங்கினால் ஒர் மாதம் அல்லது இரண்டு மாதத்தில் ஒர் இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் ஆக மாற்றம் பெற பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளன.


இந்தியாவின் டிஜிட்டல் கொள்கை, பிட்காயின் மார்க்கெட்டினை பெரிய அளவில் விளையாட்டுக்களமாக மாற்றும் என்பதில் பெங்களூர்க்காரங்க ரொம்ப நம்புறாங்க... நானும் அவங்க கூட சேர்ந்து நம்பிக்கையோடு மேல் நோக்கிய பயணத்திற்கு திட்டமிட்டுள்ளேன்.


இந்தியாவில் செயல்படும் மிகப்பெரிய தனியார் வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ, பிட்காயின் கரன்சியினை வெளிநாட்டு பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டு, அதற்கான அடிப்படைகளை சரிபார்க்கும் செயல்பாட்டில் இறங்கிவிட்டன. ஒர்வேளை இந்த ஆண்டு, ஐசிஐசிஐ வங்கி பிட்காயினை பயன்பாட்டுக்கு எற்றுக் கொண்டால், எப்படியும் மார்க்கெட்டில் பெரிய அளவில் பிட்காயினை வாங்கி கையகப்படுத்தும். அப்பொழுது கண்டிப்பாக மார்க்கெட் 50% விலை ஏற்றத்தினை சந்திக்க நேரிடலாம்.


பிட்காயின் ஒர் நிலையான டிஜிட்டல் கரன்சியாக இணையத்தில் பெரும்பான்மையான ட்ரேடர்கள் மத்தியில் நிலைப்பெற்றுவிட்டதால், தற்போதைய 800 டாலர் என்பது இயல்பு விலைதான். ஆகையால், தயங்காமல் வாங்கலாம்.


2017 ஆம் வருடத்தில் கண்டிப்பாக 200% இலாபத்தினை எட்ட வேண்டும் என்பதே என் இலக்கு, அதில் பிட்காயின் முதலீடு பெரிய அளவில் சாதகமான இலாபத்தினை கொடுக்கும் என்பது உறுதி.


நவீன பண உலகில் பணமே பணத்தினை சம்பாதித்துக் கொடுக்கிறது. அதனை பயன்படுத்தி, நாளை உலக பாதிப்பிலிருந்து தப்பிக்கும் வகையில் சரியாக அப்பணத்தினை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.


வாழ்த்துகள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”